புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் – கர்ளாவி எகிப்தில் பிறந்தார். சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் ஒன்றியத்தின் முன்னாள் தலைவராக திகழ்ந்த இவர் இன்று (26/09/2022) இறைவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார். என்று அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு தற்போது 97 வயதாகிறது. இவர் முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஆன்மிக தலைவராக திகழ்ந்தவர் மேடம் எகிப்தில் முதன்முறையாக ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் (முகமது மூர்ஸி 2013) கவிழ்க்க நடத்தப்பட்ட சதிகளை கடுமையாக விமர்சித்தவர்.

மூர்ஸியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஹோஸ்னி முபாரக் அதிபராக பதவியேற்ற பிறகு கர்ளாவியால் எகிப்திற்குள் மீண்டும் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

அல் – கர்ளாவி 120க்கும் மேற்பட்ட நூற்களையும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் எழுதிக் குவித்துள்ள இமாம் அவர்கள், முஸ்லிம் சமூகத்தை குறிப்பாக இளைய சமூகத்தை மேற்கத்திய கருத்தியல்/வாழ்வியல் பிடியிலிருந்து விடுவித்து இஸ்லாமிய வாழ்வியலின் படி வழிநடத்துவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டவர். இவரின் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது இஸ்லாத்தில் அணி பதிக்கப்பட்டவை மற்றும் விலக்கப்பட்டவை (ஹலால் ஹராம்) மற்றும் இஸ்லாம்: எதிர்கால நாகரிகம் ஆகியவை ஆகும். இஸ்லாத்திற்காக இவர் ஆற்றிய ஆக்கங்களுக்காக 8 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார் மற்றும் இவர் சமகாலத்தில் மிகவும் தாக்கம் செலுத்தி வந்த மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞராக கருதப்பட்டவர்.

இப்னு தைமியா, இப்னு கையிம், ஹசனுல் பன்னா, அபுல் ஹசன் அலி ஹசனி நத்வி, சையித் அபுல் அஃலா மௌதூதி போன்றோரும் இவரின் தாக்கங்களை கொண்டவர்கள் எனலாம்.

கர்ளாவி அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இவரது “ஷரியா மற்றும் வாழ்வு”  எனும் நிகழ்ச்சிக்காக இவர் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார் இந்த நிகழ்ச்சியை ஏறத்தாழ 40 இல் இருந்து 60 மில்லியன் பார்வையாளர்கள் உலக அளவில் பார்வையிட்டுள்ளனர்.

இவர் 1997 – ல் துவங்கப்பட்ட இஸ்லாம் ஆன்லைன் (Islamonline) எனும் இணையதளத்திற்காகவும் பெரிதும் அறியப்பட்டார் மேலும் அந்த இணையதளத்திலேயே இவர் தலைமை இஸ்லாமிய அறிஞராக பணியாற்றி வந்தார்.

அறிஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்பது பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.

– ஹபிபுர் ரஹ்மான்

(சகோதரன் ஆசிரியர் குழு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *