அஸ்ஸலாமு அலைக்கும்..

கடந்த ஜூன் 11ஆம் தேதி என்னுடைய கணவர் ஜனாப் ஜாவேத் அகமது போலீசால் ஜோடிக்கப்பட்ட மற்றும் போலி வழக்குகளில் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஆனால் இன்று சிறைச்சாலையின் அதிகாரிகள் சிறையில் அவரின் இருப்பை மறுத்துள்ளனர்.

குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகாலையிலிருந்தே அவரை கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொகின்றனர் ஆனால் இதுவரை அலகாபாத் மாவட்ட மற்றும் நைனி சிறைச்சாலையின் அதிகாரிகள் இன்னும் என் கணவர் எங்கு இருக்கின்றார் என்பதை உறுதியாக சொல்லவில்லை.

என் கணவர் உட்பட நைனி சிறைச்சாலையில் இருந்த பல கைதிகள் உ.பி முழுவதும் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப் பட்டுள்ளனர் என்பது போன்ற பல வதந்திகள் ஊடகங்கள் மற்றும் பிறரிடமிருந்து வந்து கொண்டே இருக்கிறது.‌ இதனடிப்படையில் இவர்கள் தற்போது தியோரியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதில்களும் எங்களுடைய வழக்கறிஞருக்கு அதிகாரிகள் மூலமாக வரவில்லை. எங்களுடைய குழந்தைகள் அவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்து மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர்.

எங்களுடைய குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுவதற்கும் அதற்கும் துன்புறுத்துவதற்கும் அனைத்து விதமான நடைமுறைகளையும் மீறி அலகாபாத் நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாவட்ட மற்றும் சிறை அதிகாரிகளின் இத்தகைய அடாவடித்தனம் எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

பர்வீன் பாத்திமா
ஜனாப் ஜாவேத் முகமதுவின் மனைவி
ஜூன் 20, 2022

என் தந்தை ஜாவேத் முகமத் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொண்டுசெல்லப்பட்ட நைனி சிறைச்சாலையில் அவர் அங்கே இருப்பதை சிறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் மறுக்கின்றனர். என் தந்தையின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு கவலையாக உள்ளது.

-அப்ரீன் பாத்திமா
மாணவத் தலைவர்

தமிழில் – ஹபிபுர் ரஹ்மான்
(சகோதரன் ஆசிரியர் குழு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *