கொரோனா தொற்றுக் கால விடுதிக்கட்டண நீக்கம் வேண்டி, தங்களுடையத் தேவைகளுக்காகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் அவர்களின் தேர்வு மதிப்பெண்ணில் பாரபட்சமாக நடந்துகொண்டதோடு, விளக்கம் கேட்கச் சென்ற மாணவர்களிடம் தரக்குறைவாகப் பேசியும், கல்லூரி மாணவியைப் பாலியல் ரீதியாக தாக்கிய சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத் தலைவர் திரு. சௌந்தரராஜன் மீது பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பேராசிரியரின் தவறான நடவடிக்கையைக் கண்டித்து 4 நாட்களாக துறை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் 21/03/2021 பேராசிரியரால் தாக்கப்பட்ட மாணவி மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற செய்தி அதிர்ச்சியை அளித்தது. செய்தி அறிந்தவுடன் SIO—வின் மாநில நிர்வாகிகள் கல்லூரி மாணவர்களையும், பாதிக்கப்பட்ட மாணவியையும் மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து பேசினார்கள். அதனடிப்படையில் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர் போராட்டத்திற்கு SIO முழு ஆதரவையும் கொடுக்கும்..  இவ்விவகாரத்தில், மாணவர்களின் போராட்டத்தை சரியான முறையில் கையாளாத பல்கலைக்கழக பதிவாளரையும், துணைவேந்தரையும் SIO வன்மையாக கண்டிக்கிறது.

SIO வின் குற்றச்சாட்டுகளும் & நிபந்தனைகளும்:

1. கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடியதற்காக தனிப்பட்ட முறையில் மாணவர்களின் தேர்வு மதிப்பெண் வழங்குதலில் குளறுபடிகள் செய்து, மாணவர்களை ஓரங்கட்டு ம்கல்லூரி பேராசியர்களின் செயலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்விஷயத்தில், கல்லூரி நிர்வாகமும், தொல்லியல் துறை தலைவரும் மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும் மாணவர்களின் மதிப்பீடு முறையை வெளிப்படைத்தன்மையோடு நடத்தி சரியான மதிப்பெண்ணை வழங்குதல் வேண்டும்.

2. தங்கள் மதிப்பெண் குறித்து விளக்கம் கேட்கவந்த மாணவர்களிடம் தரக்குறைவான வார்த்தைகளைக் கொண்டும், மாணவியிடம் தகாத முறையிலும் நடந்துகொண்ட பேராசிரியர் சௌந்தரராஜன் மீது நிர்வாக ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேராசிரியரைகாக்கும் விதமாக அவருக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

3. இவ்விஷயத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவே நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல் படுவதால், அக்குழுவை கலைத்தும், அக்குழுவினால் மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நீக்கவேண்டும். குறிப்பாக, மாணவி தாக்கப்பட்டபோது உடன் இருந்த 5 மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.

4. கல்லூரி வளாகங்களில் மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களை விசாரிப்பதற்கு பெண் செயல்பாட்டாளர்களைக் கொண்ட குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தில் sexual harassment cell முறைப்படுத்தப்படவேண்டும்.

5. இவ்விஷயத்தை வைத்து எதிர்காலத்தில் நிர்வாகத்தினரால் மாணவர்கள் எந்த சீண்டலுக்கோ, தனிப்பட்ட தாக்குதலுக்கோ உட்படுத்தப்பட மாட்டார்கள் என சென்னை பல்கலைக்கழகம் உறுதியளிக்க வேண்டும்.

6. வரலாற்றுப் புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தில், தொல்லியல் துறையில் மாணவர்களுக்கு கற்பிக்க வெறும் 2 பேராசிரியர்கள் மட்டுமே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தொல்லியல்துறையை இழுத்து மூட பல்கலைக்கழக நிர்வாகம் நடத்தும் சதியா என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.  எனவே, உடனடியாக பேராசியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழக நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வனைத்து கோரிக்கைகள் அடக்கம், துறை மாணவர்களை நிர்வாகம் அழைத்துப்பேசி அவர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளைக் கேட்டு அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாணவர்களிடம் தவறானமுறையில் நடந்துகொண்ட தொல்லியல் துறைதலைவர் சௌந்தரராஜன் மீது துறைசார்ந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வலியுறுத்துகிறது.

இப்படிக்கு,

S. முஹம்மதுசர்ஜுன்,

மாநிலகல்விவளாகச்செயலாளர்,

SIOதமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *