இந்திய ஜனநாயகத் தேர்தலில் மக்கள் தொகை அமைப்பு எந்தளவிற்கு முக்கிய பங்காற்றுகிறது என்ற உண்மையை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது. இந்திய பன்மைத்துவத்தில் வெவ்வேறு மதம் மற்றும் சாதிகளின் எண்ணிக்கை தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறது. சீனாவிற்கு அடுத்து உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு என்ற இடத்தைப் பெற்ற இந்தியா, விடுதலைக்குப் பிறகு மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் பல திட்டங்களை அறிவித்தது. ஆனால், யதார்த்தத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த பீவ் (Pew) ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய அறிக்கை இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கலை முன்வைக்கிறது. இந்தியாவின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதை உறுதிப்படுத்தும் அறிக்கை, ஒரு இந்தியப் பெண் சராசரியாக 2.2 குழந்தைகளை தன் வாழ்நாளில் பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பிறப்பு விகிதம் அதிகம். ஆனால், முந்தைய இந்திய நிலைமைகளைப் பார்க்கும்போது குறைந்திருப்பதைக் காணலாம். 1992ல் 3.4, 1950ல் 5.9 ஆகவும் இருந்துள்ளது.

இந்த ஆய்வின் முக்கிய அம்சம் வெவ்வேறு மத அடிப்படையிலான பிறப்பு விகிதம். அனைத்து மதங்களின் பிறப்பு விகிதமும் குறைந்து வந்தாலும் முஸ்லிம்களின் விகிதமே 50% க்கும் கீழ் குறைந்து முதலிடத்தில் உள்ளது. தேசிய குடும்பநல ஆவணத்திலும் இந்த தகவல்கள் உள்ளன. 1992ல் 4.4 என்றிருந்த பிறப்பு விகிதம் 2015ல் 2.6 ஆகக் குறைந்தது. முஸ்லிம் மக்கள்தொகையின் இன்றைய பிறப்பு விகிதம் 2.2. மற்ற மதங்களை விட அதிகம் என்றாலும், இந்துப் பெரும்பான்மைவாத சூழலில் முஸ்லீம் மக்கள்தொகையின் சராசரிக்கு கீழான சரிவையே சந்தித்து வருகிறது. இதுவே, முஸ்லீம் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ள நிபந்தனைகளை வெளிப்படுத்துகிறது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 79.8% இந்துக்கள் என்கிறது 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு.

மதரீதியாகப் பார்த்தல் ஒரு இந்துப் பெண் பெறும் குழந்தை விகிதம் என எதிர்பார்ப்பதை விட, முஸ்லீம் பெண்ணால் அதிக பிறப்பு விகிதம் இருந்திருக்கும். தகவல்களின் படி வெவ்வேறு மதங்களுக்கு இடையேயான அதற்கான சூழலில் சிறிய வித்தியாசமே உள்ளது. இது, முஸ்லீம் ஜனத்தொகை அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பும் வலதுசாரிகளின் கட்டுக்கதைகளை இல்லாமல் ஆக்குகிறது. இந்தியாவில் இரு மதங்களுக்கும் இடையேயான பிறப்பு விகிதம் ஒரே மாதிரி அல்லது சிறிதளவே வேறுபடுகிறது என்பதே நிதர்சனம். ஆனால், தேசிய அளவில் பிறப்பு விகிதம் முஸ்லீம் சமூகத்திலேயே கணிசமாகக் குறைந்திருக்கிறது.

கிறித்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெய்னர்கள் போன்ற மற்ற மதத்தினர் இணைந்து நாட்டின் ஆறு சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர். 1951 கணக்கெடுப்பிற்குப் பிறகு நிலையாக உள்ள இவர்களின் மக்கள் தொகையில் சொற்ப அளவிலான மாற்றமே நிகழ்ந்துள்ளது. ஜெயின் மதத்தின் பிறப்பு விகிதம் 1.2 என்ற குறைந்த அளவில் இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மதம் நாட்டின் 79.8% மக்கள் தொகையை உள்ளடக்கியுள்ளது. இது, 2001ம் ஆண்டு கணக்கெடுப்பிலிருந்து 0.7% குறைந்தும், 1951ம் ஆண்டின்படி 84.1% லிருந்து 4.3% குறைந்தும் வந்துள்ளது. இதற்கிடையில், 2001ல் 13.4% லிருந்து 2011ல் 14.2% மாக உயர்ந்த முஸ்லீம் மக்கள்தொகை, 1951ல் 9.8% என்பதிலிருந்து 4.4% உயர்ந்து வந்துள்ளது.

பிறப்பு விகிதம் குறைவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நவீன கல்வியால் உருவான உலகமய நடைமுறை மற்றும் சளிப்பற்ற தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன. இதன் தாக்கத்தைத் தாண்டி, குறிப்பிட்ட நிலப்பரப்பை ஆதிக்கம் செலுத்தும் ஒரு மதம் மற்றவற்றின் மீது நிகழ்த்தும் புறக்கணிப்பைக் குறிப்பிடலாம். குறிப்பாகக் குடியேற்றச் சிக்கல்கள். முக்கியமானதாக, மதரீதியாகப் பிளவுபட்ட 1947 பிரிவினை. பெருவாரியான முஸ்லிம்கள் புதிய பாகிஸ்தானிற்கும், இந்துக்கள் புதிய இந்தியாவிற்கும் குடிபெயர்ந்தனர். இது இருநாட்டு அரசியலிலும் முக்கிய தாக்கமடைந்தது. ஒரு மதத்தின் பிறப்பு விகிதம் ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் குடிபெயர்வு முக்கிய காரணமாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது. மதமாற்றம், தனிநபர் மதத் தேர்வு அல்லது ஒருவர் மதத்திலிருந்து விடுவித்தல் போன்றவை சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், 98% வயதுவந்த இந்தியர்கள் தங்களை மதத்துடனேயே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஏனெனில், அதனூடேயே அவர்கள் வளர்க்கப்பட்டுள்ளனர். இதனைக் குறிப்பிடக் காரணம் பிறப்பு விகித ஏற்ற இறக்கத்தில் மதம் முக்கிய பங்காற்றுகிறது. கல்வியும்கூட.. அனைத்து மதத்திலும் நகர்ப்புற படித்த பெண்கள் கிராமப் பெண்களைக் காட்டிலும் குழந்தை பெறுவதில் நவீன அணுகுமுறைகளைக் கொண்டுள்ளனர். நவீன உலகின் தேர்வு, கல்விகற்ற பெண்களின் வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்பு என்பதையெல்லாம் கடந்து இந்தியாவின் மக்கள்தொகையின் மதம் ஓர் வினையாக இருக்கிறது என்பதே யதார்த்தம்.

மாத்யமம் தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது…

தமிழில் : அஜ்மீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *