உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு வட இந்திய பத்திரிக்கையாளரின் நேர்மையான பார்வை.  தேர்தல் முடிவுகள் பற்றிய மிகத் தெளிவான குறிப்பு.

 1. உத்தர பிரதேசத்தின் முதன்மையான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி (SP) கடந்த ஐந்தாண்டுகளாக உறக்க நிலையில் இருந்தது. எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகிக்காமல் இருந்தது. அதனால் இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு அச்சுறுத்தலான முடிவு என்று நான் நினைக்கவில்லை.  இருந்த போதிலும் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் சுமார் 10% அதிகரித்துள்ளது.  தேர்தல் மைதானத்தில் அதிருப்தி நிலவியது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சி அதை ஒருங்கிணைக்க தீவிரமாக முயற்சிக்கவில்லை.  உரிய நடவடிக்கைகள் வாக்குகள் தானாக வராது.  உ.பி.யில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உருப்படியான வலிமையான எதிர்க்கட்சிகள்  இல்லை.  ஆனால், இன்று குறைந்த பட்சம்  ஒரு வலுவான எதிர்க்கட்சி உள்ளது.  மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

 2. முசாபர்நகர், ஷாம்லி மற்றும் பாக்பத் ஆகிய மாவட்டங்கள் விவசாயிகள் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற மூன்று மாவட்டங்கள்.  அங்கு மொத்தம் 12 இடங்கள் உள்ளன.  12ல் 3ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இதில் பாக்பத் மாவட்டத்தில் உள்ள பாரௌத் தொகுதி RLD 1000 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளில் தோல்வியடைந்தது.  மேலும், அங்கு போட்டியிட்ட வேட்பாளர் மோசமானவர் என்பதாலும் அந்த தோல்வி ஏற்பட்டிருக்கலாம்

 3. மேற்கு உ.பி.யில் உள்ள சில முக்கியமான இந்துத்துவா போஸ்டர் பாய்ஸ்  தோல்வியை சந்தித்துள்ளனர்.  சங்கீத் சோம், சுரேஷ் ராணா, உமேஷ் மாலிக், மறைந்த பாபு ஹூக்கும் சிங் (அவரது மகள் மிருகங்கா சிங் கைரானாவில் போட்டியிட்டார்)- அனைவரும் 2013 கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள்.  அவர்கள் அனைவரும் தோற்றனர்!  இது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரச்சினைகளில் உண்மையான ஆர்வத்தோடு களத்தில் போராடும் மக்கள் இயக்கங்கள் துருவமுனைக்கும் போக்குகளையும் மாற்றியமைக்கும் என்பதே இதன் ஒரே தார்மீகம்.  அதுவே பாஜகவை தோற்கடிக்க முடியும்.  தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு பணிகளைத் தொடங்குவதும், சில புத்திசாலித்தனமான சமூகப் பொறியியல் போக்கும் உங்களைக் காக்கும், மக்கள் ஆதரவை பெற்றுத்தரும்  என்று நம்புவதும் அரசியல் அறியாமையே.

சிவராமன் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *