இந்திய நாட்டில் வெளிப்படையாக இஸ்லாமோஃபோபியாவை பரப்பும் பணியில் காவிக்கூட்டத்தின் ஆட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகின்றன. சில இடங்களில் மறைமுகமாக இஸ்லாமியர்களை வஞ்சித்துக்கொண்டிருந்த காவிக்கூட்டம் இன்று கல்வி வளாகம், நீதி மன்றம் என எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் வெளிப்படையாக வஞ்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

குறிப்பாக முஸ்லிம் பெண்களை மையப்படுத்தி அவர்களின் செயல்கள் வீரியம் அடைந்துகொண்டே போகின்றன. ( BULLY BAI, SULLI DEALS ) போன்ற இணையங்களை தயாரித்து அதில் CAA, NRC போன்ற பிரச்சனைகளுக்கு முன்வந்து குரல் கொடுத்த முஸ்லிம் பெண்களின் படங்களை அந்த இணையத்தில் பதிவிட்டு அவர்களை ஏலம் விட்டு இழுவுபடுத்தும் நிலையை உருவாக்கினர். மேலும், கல்வி வளாகங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து முஸ்லிம்பெண்களை வீதியில் நிறுத்தினர். இது குறித்து வழக்குகள் தொடுத்தாலும் நீதி மன்றங்கள் அநீதிமன்றங்களாக செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் உரிமைகளை, இந்த நாட்டில் அவர்களின் இருப்பை நாளுக்கு நாள் கேள்வி குறிகளாகவும், இங்கு அவர்களின் வாழ்வை குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்று வெளிப்படையாக முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யவேண்டும். முஸ்லிம் பெண்களை கற்பழித்து கொள்ளவேண்டும் என்று இவர்களின் பேச்சுகளும் செயல்களும் முஸ்லிம் சமூகத்தினிடையும் முஸ்லிம் பெண்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றன.

கடந்த ஏப்ரல் 2 அன்று உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரில் mahant bajrang muni das என்னும் சாமியார் முஸ்லிம் பெண்கள் வீதிக்கு வந்தால் அவர்கள் கற்பழித்து பொதுவெளியில் கொல்லப்படுவார்கள் என பொதுவெளியில் கூறி முஸ்லிம் பெண்களிடத்தில் அச்சத்தை உருவாக்கியுள்ளார். அந்த muni das சொன்னதை ஆதரிக்கும் விதமாக 100 காவி துண்டுகள் அணிந்த இளைஞர்கள் கைதட்டி கோஷமிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களை பல இடங்களிலும் பல துறைகளிலும் வஞ்சித்து, இழுவுபடுத்தி, அவர்களின் உரிமைகளை பறித்து அரை நிர்வானாமாக இந்த நாட்டில் வைத்துவிட்டு. இப்போது இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்து. பல மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள் வாழக்கூடிய இந்த பன்மை சமூகத்தை ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் சீர்குலைக்கவும், ஹிந்துமயமாக்கவும் முற்படுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக மசோதாக்கள் வரும்பொழுது தன்னுடைய உரிமைக்காகவும், தன்னுடைய வாழ்வை இந்த நாட்டில் உறுதிப்படுத்துவதற்காகவும் உரிமை குரல் கொடுக்கும் பல அப்பாவி முஸ்லிம்களை அரசு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்கின்றது. ஆனால், பொதுவெளியில் ஜனநாயகத்திற்கு எதிராகவும் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தை பல வகையிலும் இழிவு படுத்துகின்ற சொல்லாலும் செயல்களாலும் துன்புறுத்தி தேச ஒற்றுமையையும் அமைதியையும் குழைத்து மதக்கலவரங்களை நிருவநினைக்கும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் மேல் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

சிறுபான்மை சமூகத்தையும், முஸ்லிம் பெண்களையும் பற்றி இழிவாக பேசுபவர்கள், இழிவுபடுத்துபவர்கள், பொதுவெளியில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் விதமாக, தேச ஒற்றுமையை குழைக்கும் விதமாக, மதக்கலவரங்களை தூண்டும்விதமாக, சிறுபான்மையினர்களிடையே அச்சத்தை தூண்டுகின்றவகையிலும் செயல்படுகின்ற mahant bajrang muni das போன்ற பயங்கரவாதிகளை அரசு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.

இம்ரான் ஃபரீத் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *