எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில்

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
மாணவிகள், பெண் போராட்டக்காரர்கள் தங்கள் அந்தரங்க உடல் பாகங்களில் தாக்கப்பட்டு காயங்களுடன்

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
மாணவர்கள் தங்கள் முகங்களில் ஏதோ ரசாயனம் தெறிக்கப்பட்டு அரை மயக்கமடைந்து, இன்னும் மருத்துவமனைகளில் இருக்கிறார்கள்

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
என்ன ரசாயனம் என்று தெரியவில்லை, இன்னமும் எங்கள் அடிவயிற்றில் வலியை உணரமுடிகிறது, வெறுமனே அமர்ந்திருக்கும்போதும் கூட நாங்கள் களைத்திருக்கிறோம்,
கொசுக்களுடன் போராடிக் கொண்டிருப்பதால் களைத்திருப்போம் என்று எங்களில் சிலரது உள்மனம் சொல்கிறது

ஆனால் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
நான் இப்போது ஜாமியாவின் காற்றில் ஒரு வித்தியாசமான வாசனை பரவியிருப்பதை உணர்கிறேன்
ஒன்றும் தவறாக நடக்கவில்லை,
இது ஒரு ப்ரம்மை என்று எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்

ஆனால் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
தடுப்புகள் விலக்கப்பட்டுவிட்டன, சாலைகள் நகர்கின்றன,
நாங்கள் ஏழாம் எண் வாசலுக்கு திரும்பிவிட்டோம்

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
காயமடைந்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,
இன்னும் பாதிக்கப்படவிருக்கிறார்கள்

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
காவல்துறையினர் திரும்பிவிட்டனர், அவர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
இந்த செய்தி ஒரு நாளிலோ, இரண்டு நாளிலோ ஊடகங்களில் இருந்தும், சமூக வலைதளங்களில் இருந்தும் மறைந்துவிடும்,
இதைவிட வேறொரு கொடூரம் அவற்றை ஆக்ரமிக்கும்

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
மின்ஹாஜூதீனுக்கு இன்னும் பார்வை திரும்பவில்லை,
அது டிசம்பர் 15ல் நடந்தது

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
கார்கி கல்லூரி மாணவிகள் இன்னும் சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள்

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
நான் இதை எழுதும்போதும், நீங்கள் இதை படிக்கும்போதும் எங்கோ ஒரு இடத்தில் காவல்துறை அராஜகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, ஜாமியாவில் அந்த அராஜகம் இப்போதுதான் முடிந்திருக்கிறது

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
அராஜகத்தின் கடைசி அடியை ஒருவர் பெற்றுக் கொண்டிருக்கும்போது
அராஜகத்தின் ஒரு புதிய வடிவம் தயாராகிக் கொண்டிருக்கிறது

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
இப்போதும் காற்றில் பரவும் வித்தியாசமான வாசனையை நான் உணர்கிறேன்,
அடையாளம் தெரியாத ஒரு வாசனை, ஒரு மோசமான வாசனை,
ஆனால் உண்மையில் அது காற்றில் பரவும் வாசனைதானா அல்லது உளவியல்ரீதியாக எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவா என்று என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை

ஆனால் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது
கஷ்மீர் முடக்கப்பட்டு 6 மாதங்களாகிவிட்டது

ஆனால் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது

அமிர் அஜீஸ் – ஜாமியா
தமிழில் அபுல் ஹசன்

65 thoughts on “எல்லாம் இயல்பாக தான் இருக்கிறது???

 1. ways to get quick loans quick loans for millenials quick loans quick cash loans no credit check reviews quick n loans

  quick approval personal loans quick business loans for startups quick loans quick pay payday loans new york state threatens to garnish quick payday loans

 2. Pingback: doctor7online.com
 3. what is tadalafil tadalafil vs vardenafil generic cialis tadalafil tadalafil 5mg tadalafil 5 mg

  tadalafil 20 mg prix buy tadalafil tablets tadalafil reviews generic cialis tadalafil best buys tadalafila 20mg

  https://supertadalafil.com/ – tadalafil 20mg

  tadalafil cost cvs interactions for tadalafil generic tadalafil tadalafil biogaran tadalafil lilly 5mg prix

  tadalafil generique tadalafil 20mg tadalafil cialis tadalafil powder tadalafil 20 mg wirkungsdauer

  https://xtadalafilx.com/ – generic tadalafil

 4. tadalafil 5 mg tadalafil canadian pharmacy tadalafil 20 mg tadalafil 40 mg tadalafil online

  tadalafil vs vardenafil tadalafil 10mg prix generic cialis tadalafil cialis vs tadalafil generic tadalafil 20 mg prix

  https://supertadalafil.com/ – tadalafil liquid

  buy tadalafil online cheap tadalafil generic cialis tadalafil cialis vs tadalafil generic tadalafil reviews

  tadalafil biogaran 20 mg prix tadalafil 20mg buy tadalafil online tadalafil en ligne tadalafil liquid

  https://xtadalafilx.com/ – tadalafil generic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *