LOADING

Type to search

மற்றவை

எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி-ஷஹீத் சேக் அஹம்மது யாசீன்

admin 5 months ago
Share

22 மார்ச் 2004 வருடம் மிகச்சரியாக இதே நாள், அதிகாலை ஃபஜர் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த கண்பார்வை மங்கிய , நடக்க இயலாத உடலின் பல பகுதிகள் செயலிழந்து போன 67 வயதான ஒரு முதியவரை கொலை செய்வதற்கு உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ விமானமான F-16 அணி அணியாக அந்த வீதியில் சரமாரியாக குண்டுகளை வீசியது.

திட்டமிட்ட அந்தத் தாக்குதலை “சற்றும் எதிர்பாராததொரு விபத்துதான் இது. நாங்கள் அவரைக் குறிவைத்து ராக்கெட்டை ஏவவில்லை” என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் பொய்தான் சொல்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். வயதில் மிகவும் முதிர்ந்த, மார்க்கக் கல்வியில் கரை கண்டவரான அவர் பெயர் ஷேக் அகமது யாசின். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸின் தலைவர்.

 

 

ஹமாஸை வழி நடத்தியவர்கள் எல்லோரும் அரசியல் வல்லுநர்களாக மட்டும் இருந்தார்கள். இவர்தான் முதல் ராணுவத் தலைவர். ஹமாஸை ஒரு சக்திமிக்க தனியார் ராணுவம் போலவே வடிவமைத்ததில் பெரும்பங்கல்ல; முழுப் பங்கே இவருடையதுதான். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் யுத்தத்துக்கு ஒரு சரியான வடிவம் கொடுத்தவர் யாசின்தான்.

1989-லிருந்து 1991- வரை ஹமாஸ் இயக்கத்தினரைப் பற்றித் தகவல் சேகரிக்கவென்றே அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.வில் தனியொரு பிரிவு செயல்பட்டது. இஸ்ரேலிய உளவுத்துறை மொஸாட்டுடன் இணைந்து மூன்று ஆண்டுகள் படாதபாடுபட்டும் அவர்களால் மொத்தம் பதினான்கு பேரைத் தவிர வேறு பெயர்களைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தனது நண்பருடன் மல்யுத்த விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தினைத்தொடர்ந்து இவருக்கு எழுந்து நடக்கவோ, கைகளைத் தூக்கவோ இயலாது. பார்வை குறைபாடும் உடையவர். 12 வயது முதல் சக்கர நாற்காலி உதவியுடன் வாழ்ந்த ஷேக் அகமது யாசின் அவர்கள் பாலஸ்தீனியர்களின் விடுதலைக்காக தன்னுடைய முழு வாழ் நாளையும் அற்பணித்தவர்.

ஒரு சமயம் பத்திரிக்கையாளர்கள் ஷேக் அஹமது யாசின் அவர்களை சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது அவர்கள் ஒரு கேள்வியை ஷேக் அஹமது யாசின் அவர்களிடம் கேட்டனர். “மிகப் பெரிய ஆயுத பலமும், பண பலமும், படை பலமும் கொண்ட இஸ்ரேலியர்களிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், வெறும் கற்களை வைத்துக்கொண்டு அவர்களை எதிர்ப்பதனால் என்ன பயன்? எப்படியும் நீங்கள் அதிலே தோற்றுவிடுவீர்களே?” என்று கேட்டனர்.

அதற்கு ஷேக் அஹமது யாசின் அவர்கள் “ஒரு காலம் வரும், அப்போது இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு மரங்களும், ஒவ்வொரு பாறைகளும் பேசும், தனக்கு பின்னால் ஒரு யூதன் ஒளிந்துள்ளான், அவனை கொள்ளுங்கள் என்று!, அந்த நாள் ஏற்படும் வரை எங்களுடைய போராட்டம் ஓயாது” என்று கூறினார்.

சுயமாக இயங்க முடியாத ஒரு முதியவரை கண்டு உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இஸ்ரேல் அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் என்ன?

ஷேக் யாசினின் ஆன்மீக பலம், அவரின் தெளிவான பார்வை மற்றும் சிந்தனை, எத்தகைய அடக்குமுறையிலும் எதிரியிடம் அடிபணிந்து செல்லாத பண்பு, பல்லாண்டுகளை சிறையில் கழித்த பின்னரும் தகர்க்க முடியாத அவரின் மனஉறுதி, ஃபலஸ்தீனியர்களை கிளர்ந்தெழச் செய்த அவரின் கலப்படமில்லாத பேச்சு…என எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

இவை அனைத்தையும் விட ஒரு மிகப்பெரிய ஒரு பாடத்தை ஷேக் யாசினின் வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது.

சக்கர நாற்காலியுடன் கட்டுண்ட ஒருவருக்கு ஷஹாதத் என்ற உயர் பதவி கிடைக்குமா என்று கேட்டால் இல்லை என்றே நம்மில் பலரும் கூறுவோம். ஆனால் தூய்மையான உள்ளத்துடன் உறுதியாக பயணித்தால் அதுவும் சாத்தியம்தான் என்பதை ஷேக் யாசினின் வாழ்வும் மரணமும் நமக்கு உணர்த்துகின்றன.

அல்லாஹ் தன் திருமறையில் கூறும் போது “முஃமீன்களில் சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியவர்களாக
அல்லாஹ்வுடைய பாதையில் போரிட்டு ஷஹீதானார்கள் இன்னும் சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.”

இறைவனது இந்த வசனத்துக்கு.ஏற்றார் போல் அவரின் ஜனாஸாவில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ‘நீங்கள் ஓய்வெடுங்கள். உங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்கிறோம்’ என்று அம்மக்கள் முழங்கினர். அந்த முழக்கம் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை இஸ்ரேலிடம் கேட்டால் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

வரலாற்றில் வாழ்ந்து காட்டிய தலைவர்களின் வாழ்வில் இருந்து நமக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.இதில் நாம் பெறும் படிப்பினை என்பது மன உறுதியோடு நின்று ஆன்மீக பலத்துடன் நீதியை நிலைநாட்டிட குரல் கொடுக்க வேண்டும் என்பதே!

 

எழுதியவர்

அஹமது நவவி

 

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *