இந்த பூமிப் பந்தில் முதன்முறையாக தானியமும் கோதுமையும் பயிரிடப்பட்ட நிலம் பலஸ்தீன். ஆம் அது ஒரு விவசாய பூமி. மேலும் மனித நாகரிகங்களின் தொட்டில். பல பண்பாடுகளின் பயில் நிலம். ஆனால் தற்போது இந்த பூமியில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் பூமியாக மாற்றப்பட்டு விட்டது. தொடர்ந்து 75 ஆண்டுகளாக சியோனிஸ யூத கொடுங்கரங்கள் தாக்கி வருகிறார்கள்.

உலகில் பிரச்னைக்குரிய பிரதேசங்கள் என்றொரு பட்டியலில் மத்தியக் கிழக்கு முதலிடத்தில் நிச்சயம் வரும்.

இன்றைய நாள் வரை இந்தப் பிரதேசத்தை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

1.ஏன் எப்போதும் அங்கே போர்கள் நடைபெற்று வருகின்றன ?
2.ஏன் இப்போதும் அங்கே எழுச்சிகளும் கழகங்களும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் விடாமல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன?
3.ஆண்டாண்டு காலமாக கழித்து ஏன் அங்கே அமைதி திரும்ப மறுக்கிறது?
குறிப்பாக இஸ்ரேலுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை?

பலஸ்தீனை பொறுத்தவரை அது வெறுமனே எல்லை பிரச்சனையோ, இனவேறி பிரச்சனையோ அல்ல.
ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தினந்தினம் அங்கே மடிந்து கொண்டிருக்கிறார்கள்.என்றாலும் இது வெறுமனே மனித உரிமை மீறல் பற்றியது மட்டுமல்ல. உதவ வேண்டிய நாடுகளும் பல அமைதி காக்கிறது என்றாலும் இது வெறும் துரோகத்தின் வரலாறு மட்டுமல்ல அடிப்படையில் இது ஒரு உரிமை போராட்டம் பலஸ்தீன உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஒரு பக்கமிருக்க குறைந்தபட்சம் ஒரு தேசமாக கூட இன்னும் அதை பலர் ஏற்கவில்லை என்பது சமகாலத்தில் பெரும் துயரமாக உள்ளது.
ஆயிரக்கணக்கான பலஸ்தீன குடியிருப்புகளை இடித்து பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்களைக் கொன்றொழித்த இஸ்ரோல் ஒரு மரியாதைக்குரிய நாடாக நீடிக்கும்போது பலஸ்தீனம் என்பது ஓர் அரசியல் கோரிக்கையாய் மட்டும் சுருங்கிப் போயிருப்பதற்கு என்ன காரணமென ஆராய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பலஸ்தீனத்தின் இறந்த காலத்தையும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் அதன் எதிர்காலத்தை நாம் மாற்றியமைக்கலாம். அதற்கு முதல் தேவை, விழிப்புணர்வு. பலஸ்தீனத்தின் அரசியல் மட்டுமல்ல, அதன் வரலாறு, புவியியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம் அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த அச்சுறுத்தலை நீக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும்.
உலகத்தின் ஒரு துண்டு நிலத்திற்காக ஏன் இத்தனை நெடிய போராட்டம்? இஸ்ரேல் ஏன் பலஸ்தீனத்தை திட்டமிட்டு திருடிக் கொண்டிருக்கிறது? உலகநாடுகளின் மௌனத்தில் உறைந்து கிடக்கிறது .
பலஸ்தீன வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள கால மீள்பயணத்தில் வரலாற்றின் அடியாழங்களுக்குள் நாம் பயணித்தாகவேண்டும். இது இன்று நேற்று யுத்தம் அல்ல.

வரலாறு மிக முக்கியமானது. வரலாற்றைப் படிக்காதவர்களால் வரலாற்றைப்படைக்க முடியாது. வரலாறு என்பது கடந்த நிமிடத்தையும் உள்ளடக்கியது.வரலாற்றை அறியாத சமுதாயம் வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படும்.அல்லாஹ் திருக்குர்ஆனில் நமக்கு முன் வந்த சமுதாயத்தை வரலாற்றைப் பற்றி படம் பிடித்துக் காட்டுகிறான் அதிலிருந்து படிப்பினை பெறுவதற்கு இருக்கிறான் நபிமார்கள் வாழ்வில் மட்டுமல்லாமல் குகைத் தோழர்களின் வாழ்விலிருந்தும் பாடம் நமக்கு இருக்கிறது என்பதை அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்கிறான்.

வரலாறு என்பது கற்பனை அல்ல. மாபெரும் நிகழ்வு. அதை குறித்து நாம் அறிய தவறுகின்ற போது அந்தபவரலாறு சிதைக்கப்படும் மறைக்கப்படும் மாற்றப்படும் நம்மிடம் நம்மைக் குறித்து இருக்கும் பெரும்பாலான வரலாற்று சிதைந்த நிலையிலோ மாறிய நிலையிலோதான் இருக்கிறது. இன்னும் சில வரலாறுகள் முழுதும் மறைக்கப்பட்டுவிட்டன.

பலஸ்தீனத்தில் இப்போது நடைபெற்ற யுத்தம் நம் கண்முன் நிகழ்பவை. ஆனால் அதன் உண்மைகள் நமக்குத் தெரிவதில்லை.

பலஸ்தீன போராட்டம் வெறும் மண் மீட்புப் போராட்டம் மட்டுமல்ல…அது மார்க்க போராட்டம் என்பது உலகிற்கு உரக்கச் சொன்ன நிகழ்வுதான் இன்கிஃபாதா(மக்கள் எழுச்சி) .

பலஸ்தீன விடுதலையை முன்வைத்து பி.எல்.ஓ. போராடிக்கொண்டிருந்தாலும் அது நாட்டு விடுதலைக்கான அரசியல் போராட்டமாக மட்டும் இருந்தது ஆனால் பிரச்சினை அதுவல்லவே. இது வெறும் அரசியல் போராட்டம் மாத்திரம் அல்ல. இது ஒரு மார்க்க போராட்டம்.

பலஸ்தீனத்தில் நடந்தேறிய இன்னும் நடக்க இருக்கின்ற யுத்தத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டால்தான் அந்தப் போரின் நியாய தர்மங்களை பேசமுடியும். பலஸ்தீன் வரலாற்றை மேலோட்டமாகப் பார்த்து ‘உச்’ கொட்டி கடந்தவர்கள் ஏராளம். ஊடகங்கள் திட்டமிட்டோ, அறிந்துகொள்ளாமலோ பொறுப்பற்ற செய்திகளை தந்த வண்ணம் இருந்தன. வரலாற்றை சொல்லி வந்தவர்கள் கூட யுத்தத்தின் நோக்கத்தை குறித்து பேசுவதில்லை.

உண்மையில் பாலஸ்தீனத்தில் நடப்பது மண்ணுக்கான போராட்டமே அல்ல !முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தங்களின் கொள்கை சார்ந்த போராட்டமாகத்தான் பலஸ்தீன யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது ஜெரூசலத்தை முன் வைத்துதான் யூத சியோனிசவாதிகள் பலஸ்தீனத்திற்குள் நுழைந்தார்கள். சிலுவை யுத்தம் கூட இந்த ஜெரூசலத்திற்காகத்தான்.

உண்மையில் பலஸ்தீனப் பிரச்சினையின் மூலத்தளம் ஜெருசலம் தான்.அதனால்தான் பலஸ்தீனத்தை பங்கு போட்டுக் கொடுத்த ஐ.நா. சபையால் ஜெருசலத்தைக் குறித்து தெளிவான முடிவை வழங்க இயலவில்லை.ஜெருசலம் குறித்த ஐ.நா. தீர்க்கமான வழிகாட்டுதலை வழங்கி இருந்தால் யுத்தம் என்றோ முடிந்திருக்கும் . ஐ.நா.வினால் அப்படி ஒரு முடிவுக்கு வர இயலாமல் போனதற்கு காரணம் என சுதந்திரமாக செயல்படாமல் அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்தது . இஸ்ரேலின் மிரட்டலுக்கு முன் ஐ.நா. மண்டியிட்டது. 1967 ஜூன் மாதம் நடைபெற்ற போருக்குப் பிறகு ஐ.நா.வின் பொது அவை தொடங்குவதற்கு முன்னால் இஸ்ரேல் பிரதம அமைச்சர் லீவாஸ்கோல் “ஐ.நா. சபையின் 122 உறுப்பினர்களில் 121 நாடுகள் ஒன்று பட்ட தீர்மானத்தை எடுத்துவிட்ட நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அதனுடைய சொந்த வாக்கு மட்டுமே விழுமானால் கூட நாங்கள் வெற்றி கொண்ட பகுதிகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என பகிரங்கமாக அறிவித்தார் .

யூதர்கள் பாலஸ்தீனத்தைக் கொள்கைப்போராக தான் பார்த்தார்கள் என்பது கிபி 12ஆம் நூற்றாண்டு யூத தத்துவ ஞானியான மூஸா இப்து மைமூனிடஸ் (Maimonides) The code of Jews law எனும் நூலில் அழுத்தமாகக் கூறுகிறார். “பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் ஹைகலுஸ் ஸுலைமானி (சாலமன்கோவிலை) நிறுவுவது யூதராகப் பிறந்த ஒவ்வொரு உடைய வாழ்க்கை குறிக்கோளாகும்”.

இந்தக் கருத்தை நிறத்திற்காகவே ஃபிரிமேலன் இயக்கம் (Freemason movement) திட்டம் தீட்டுச் செயல்படுகிறது. தொடக்கம் முதல் இன்றுவரை பைத்துல் முகத்தஸ் வளாகம் தீப்பற்றி எரிவதும், ஆங்காங்கே கட்டிடங்கள் சிதைவதும் அவ்வளாகத்தை இலக்காகக் கொண்டு பல தாக்குதல்கள் நடைபெறுவதையும் காணலாம். யூத சியோனிசவாதிகள் கட்டம் கட்டமாக பைத்துல் முகத்தஸைச் சிதைத்து சாலமன் கோவிலை நிறுவுவதற்கான பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்

கிபி 70 ஆம் ஆண்டில் ஹைகலுஸ் ஸுலைமானி எழுப்பிய கோவில் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சி காலத்தில் பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது. ரோமானியர்களின் காலத்தில் பாலஸ்தீனத்திலிருந்து யூதர்கள் விரட்டியடிக்கப்பட்ட போது பைத்துல் முகத்தஸ் எல்லையில் அவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அன்றிலிருந்து யூத சியோனிஸ்டுகள் தீட்டிய திட்டம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் குப்பத்துஸ் ஸுஃக்றாவையும் இடித்து தரைமட்டமாக்கி விட்டு ஹைகலுஸ் ஸுலைமானியை மறு நிர்மானம் செய்வதுதான் அத்திட்டம்.அதற்குதான் வாக்களிக்கப்பட்ட பூமி என்று கவர்ச்சியான முழக்கத்தோடு வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

யூத பயங்கரவாதத்தின் தொலைக்கு திட்டத்தை பாருங்கள் :
ஒவ்வொரு யூதக் குழந்தையின் மனதிலும் சிந்தனையிலும் ‘பலஸ்தீன் உன்னுடையது.அது உனக்கு கிடைத்தே தீரவேண்டும். பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் ஹைக்கேல் சாலமனை நிறுவுவதுதான் உன் வாழ்நாள் குறிக்கோள்’என்பதை ஆழமாக அழுத்தமாய் விதைக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்களின் வார வழிபாட்டில் ‘பைத்துல் முகத்தலை’ அடைவதற்கான பிரார்த்தனை அவர்களின் ‘ரப்பி’கள் முன்வைப்பார்கள்

பலஸ்தீனத்தை அபகரிப்பதுதான் யூதர்களின் பெரிய திட்டமாக இருந்தது.இருக்கின்றது. The Grand Plan என்ற இத்திட்டம் 1895ஆம் ஆண்டு ஜனவரியில் தியோடர் ஹெசில் என்பவனால் தீட்டப்பட்டது .’நமக்கென ஒரு நாடு ‘என்ற ஒற்றை முழக்கத்துடன் உலகத்தின் ஓரங்களில் உள்ள யூதர்கள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் நிறுத்தப்பட்டார்கள்.

சுவிட்சர்லாந்திலுள்ள சூதாட்டக்களத்தில் 6 பேர் கூடிய கூட்டத்தில் 100 பக்கங்களை கொண்ட செயல் திட்டம் தீட்டப்பட்டது.Der Fundonsaat (The Jews State) ‘யூதர்களின் நாடு’ என்ற கனவு திட்டத்தை வெகு வேகமாக முன்னெடுத்துச் சென்றார்கள்.இதற்கான பெரும் தொகை உலக நாடுகளிலுள்ள யூதர்களிடம் பெற்று யூதர்களின் தேசிய நிதியை உருவாக்கினார்கள் (Jewish National Fund) உருவாக்கினார்கள்.

அப்படியென்றால் யூதர்களுக் கொன்று ஒரு நாடு இல்லையா ?இரண்டாயிரம் ஆண்டுகளாக நாடில்லாமல் அலைந்த நாடோடிக் கூட்டம் தான் இவர்கள். அவர்களுக்கென்று ஒரு நாடு தேவை தானே! கண்டிப்பாக தேவையாக இருந்தாலும் அதற்குப் பெரும் நிலப்பரப்பு காலியாக கிடக்கும் கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ ஒரு நாடு ஒதுக்கலாம். இல்லை அமெரிக்காவில் கூட குடியமர்த்தலாம். ஆனால் அவர்கள் பலஸ்தீனை ஏன் தேர்ந்தெடுப்பானேன்?

இதுதான் வரலாறு. அங்கு தான் யூதர்களின் சூழ்ச்சிக்கு புலப்படும் இடம். ‘வாக்களிக்கப்பட்ட பூமி’ என்ற கவர்ச்சியான முழக்கத்துடன் பலஸ்தீனத்தை அபகரிக்க தொடங்கினார்கள் . உலக மக்கள்தொகையில் 23% முஸ்லிம்களை 0.3% மட்டுமே இருக்கும் யூதர்கள் எந்த நம்பிக்கையில் விரட்டியடிக்க முன்வந்தார்கள்? அவர்களின் மூளையும் திறமையும் முதலீடாக்கினார்கள். கட்டம் கட்டமாய் திட்டம் தீட்டினார்கள்.

அதில் ஒன்றுதான் ஆளில்லாத பலஸ்தீன நிலங்களை அதிகப்படியான பணம் கொடுத்து வாங்கி குடியமர வேண்டும். அவர்களின் ஷைலாக்கிய வட்டி சூழ்ச்சியில் பலஸ்தீனின் ஈரக்குலையை அறுத்தெடுக்க முன்வந்தார்கள்.ஆளிகள் இல்லாத நிலங்கள், நிலங்களில்லாத ஆள்களுக்கு நியாயவாதம் எழுப்பினார்கள் .(land without people are for people without lands).

யூதர்கள் பலஸ்தீனின் பூர்வகுடிகள் அல்லர் .அவர்கள் நாடோடிகள்.யூத சியோனிசவாதிகள் தொடுத்திருப்பது உலக முஸ்லிம்களின் தாக்குதல்.

இந்த கொள்கைப் பின்னணியில்தான் இந்த யுத்தத்தை அணுகவேண்டும். அதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.சியோனிசவாதிகள் அவர்களின் கொள்கைப்போராகத்தான் இதனைத் தொடக்கத்திலிருந்து அணுகியிருக்கின்றார்கள். இஸ்ராயீல் இஸ்ரவேல் என்னும் பெயரே மார்க்க பின்புலம் கொண்டதுதான்.நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்அவர்களின் பெயளித்தான் யூத நாட்டிற்கு சூட்டியிருக்கின்றார்கள். இங்கிருந்துதான் யூத சூழ்ச்சி மிகவும் உக்கிரமாக வெளிப்படுகிறது.இந்த பூமியில் அவர்கள் கால் கொள்வதென்பது நபிமார்கள் எல்லோரும் யூதர்களே என்பதை உணர்த்தும் திட்டம்தான்.

நபி இப்ராஹிம் யூதராகவோ ,கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை.அவர் தூய முஸ்லிமாக இருந்தார் என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டுமென அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று கூறினார்கள்.நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இந்த தீனை உங்களுக்கான தீனாக அல்லாஹ் தேர்வு செய்துள்ளான் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது.நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தவறாது சுமந்து வந்தார்கள், அவர்களை தூய்மையான கண்ணியமான பலஸ்தீன் பூமியில் நுழையுங்கள் என இறைவன் கட்டளையிடுகின்றான்.மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனிதர்களை பார்த்து என் சமூகமே அல்லாஹ் உங்களுக்கு என்று விதித்துள்ள இந்த பூமியை நோக்கிச் செல்லுங்கள் என்று கூறினார்கள்.

தொடக்கத்திலிருந்து இந்த பிரச்சனை மார்க்கப் பிரச்சனையாக தான் பார்க்கப்பட்டது.சுல்தான் சலாவுதீன் இதை உம்மத்தே முஸ்லிமாவின் பிரச்சினையாக மட்டுமே பார்த்தார்.அவர் அரபி யாருமல்ல. பலஸ்தீனம் அல்ல. அவர் குர்து இனத்தைச் சார்ந்த அஜமி .

இந்த அடிப்படையில் பலஸ்தீன யுத்தம் வெறும் இனச் சண்டை அல்ல. பலஸ்தீனத்தைப் பேசுவது என்பது அரசியல் பேசுவதல்ல. இது ஈமானிய பிரச்சனை . இது நிலத்தகராறு அல்ல சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான சமர் . அல்லாஹ்வின் கட்சிக்கும் ஷைத்தானிய கட்சிக்குமிடையேயான போராட்டம். அல்லாஹ்வினால் பாதிக்கப்படும் திருக்குர்ஆனுக்கும் , திரிக்கப்பட்ட, மாற்றப்பட்ட தவ்ராதுக்குமான பிரச்சனை . வெள்ளிக்கிழமை புனித நாளாக இருப்பதற்கும் சனிக்கிழமை புனித நாளாக இருப்பவருமான விவகாரம். மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாப்பதற்கும், ஹைகல் ஸுலைமானி கோயிலை நிறுவுவதற்குமான போர்க்களம் . பாபர் மஸ்ஜித்துக்கும் முஸ்லிம்களுக்குமான பிணைப்பை விடவும் பல மடங்கு உறுதியான பிணைப்பும் வரலாறுதான் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கும் முஸ்லிம்களுக்கான பிணைப்பும் வரலாறும் !

ஆம்! யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இன்று நேற்று தொடங்கியது அல்ல .இது பழையான பிரச்சனையாகும்.

முஹம்மத் தமீஸ் ஸலாமி

எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *