0.012 சதவிகிதத்தைச் சார்ந்த 607 சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். வெங்கடேஷ் நாயக் எனும் காமன்வெல் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் 75 நகரங்களில் உள்ள பெரும் 0.01 சதவீத சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த சாலையோர வியாபாரிகள் மட்டுமே மத்திய அரசின் “PM Street Vendors Atmanirbhar Nidhi (PM SVANidhi)” பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான சுயசார்பு இந்தியா நிதி திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜூன் 2020 முதல் மே 2022 வரை பயனடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை கடனுக்காக நாடு முழுவதிலிருந்தும் மொத்தம் 48.70 லட்சம் (4.87 மில்லியன்) விண்ணப்பங்கள் வந்துள்ளது என (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்) MoHUA இன் மத்திய பொதுத் தகவல் அதிகாரி (CPIO) வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன.

சொற்ப எண்ணிக்கையிலான 0.012 சதவீத சிறுபான்மையினத்தைச் சார்ந்த சாலையோர வியாபாரிகள் 607 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவில் உள்ள மூன்று புள்ளி 3.5 சதவீதத்தை விட பரிதாபமாடையும் வகையில் குறைவாக உள்ளது.

சிறுபான்மையின சமூகத்தில் இருந்து முதல் தவணை கடனுக்காக 529 பேரும் இரண்டாம் தவணை கடனுக்காக வெறும் 77 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

PM SVANidhi திட்டத்தின் கடனுக்காக விண்ணப்பிக்கும் படிவத்தில் சாலையோர விற்பனையாளர்கள் தாங்கள் “சிறுபான்மை” சமூகத்தை சார்ந்தவர்களா என்பதை குறிப்பிட வேண்டும். இந்த விண்ணப்ப படிவத்தில் சமூகத்தின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் நம் ஒன்றியம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சிக்கியர்கள், புத்தர்கள் மற்றும் ஜுராஸ்டிரியர்கள் (பார்சிகள்) ஆகியோரே “சிறுபான்மையினர்” என்று அடையாளம் காண்கிறது.

இந்த தரவுகளின் வாயிலாக குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தின் கீழ் 32.26 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டது என்பது வெளிப்பட்டுள்ளது. 3.15% பயனாளிகளைக் கொண்ட ST பிரிவைச் சேர்ந்தவர்களை விட மிகவும் மோசமான நிலையில் சிறுபான்மை சமூகங்களை சார்ந்த வெறும் 331 பேர் (0.0102 %)‌ மட்டுமே பயனடைந்துள்ளனர்.

இந்த ஆர்.டி.ஐ கேள்வியின் அடிப்படையில் மிகவும் அதிகமாக சிறுபான்மையினத்தைச் சார்ந்தவர்கள் 162 பேர் மகாராஷ்டிராவிலும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 110 பேரும், தெலுங்கானாவில் 22 பேரும், குஜராத்தில் 12 பேரும் மற்றும் ஒடிசாவின் எட்டு பேரும் பயனடைந்துள்ளனர்.

இதில் உத்திரபிரதேசத்தில் விண்ணப்பித்த 12 பேருமே முதல் தவணை கட்டளை பெற்றதன் மூலம் 100% வெற்றி விகிதத்தின் மூலம் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து டெல்லியில் 77.46%, தெலுங்கானாவில் 66.67% மற்றும் குஜராத்திலும் 63.16% பெற்று உள்ளனர். எப்படியோ முதல் மற்றும் இரண்டாம் தவணை கடனுக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகப்படியான விண்ணப்பங்கள் பதிவாகி இருந்தாலும் 56.45% சதவீதம் எனும் வெற்றி விகிதத்தில் குறைவாகவே உள்ளது. MoHUA ன் மத்திய பொதுத் தகவல் அதிகாரி CPIO அளித்த தகவலின் படி சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த 308 பேருக்கு முதல் தவணை கடனும் 23 பேருக்கு இரண்டாம் தவணை கடனும் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு  ஜூன் 2020இல் சாலையோர வியாபாரிகள் நகர்ப்புறங்களில் தங்கள் தொழில்களை தொடர்வதற்கு இந்த PM SVANidhi திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டம்‌ எந்தவித பிணையும் இல்லாத மூலதன கடன் 10,000 ரூபாயை ஓராண்டு தவணையில் அளித்து உதவுகிறது. வியாபாரிகள் தங்களது கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் மீண்டும் அதிக வரம்புடன் கூடிய கடன் தொகையை பெறலாம்.

இதில் மொத்தம் விண்ணப்பித்த 48,618 பேரில் 0.92 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் (PwD) பிரிவை சேர்ந்த சாலையோர வியாபாரிகள்.

உத்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவை தொடர்ந்து தமிழகம் 8,631 (PwD) பிரிவை சார்ந்த விண்ணப்பங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

அதே சமயம் உத்திரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான 7278 (PwD) பிரிவை சார்ந்தவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை கடனை பெற்றுள்ளனர்.

தமிழில் – ஹபீப் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *