1876 -1909 காலகட்டம். இரண்டாம் அப்துல் ஹமீது, உதுமானியப் பேரரசின் அன்றைய ஆட்சியாளர். பிஸ்மார்க் தலைமையிலான ஆறு நாடு- களைச் சார்ந்த ஐரோப்பியக் கூட்டமைப்பு தங்களின் பெர்லின் தீர்மானத்தை இவருக்குத்தான் அனுப்பி வைத்தது. கலீபா இரண்டாம் அப்துல் ஹமீது ஒரு ரெண்டுங்கெட்டான் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். ஷரீஅத் சட்டமும், மேற்கத்தியப் பண்பாடும் கலந்து கட்டிய ஆட்சி முறையில் ராஜாங்கம் இருந்தது. கலீபாவின் அரண்மனையில் மேற்கத்தியப் பண்பாடு கொடிகட்டிப் பறந்தது. ஆனால் துருக்கியப் படையில் மிகச்சிறந்த  போர் வீரர்கள் தளபதி உஸ்மான் பாஷா தலைமையில் ஆட்சி மாண்பைக் கட்டிக்காத்துக் கொண்டிருந்தனர்.

ஆட்சி மிகப்பெரும் பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம். போர்களுக்கான செலவும், கப்பல் படையை நவீனப்படுத்துவதில் கொட்டிய பணமும், ஆட்சிக் கஜானாவைக் கடனாளியாக்கி இருந்தது. இதே கால கட்டத்தில்தான் ஜெர்மனியில் நவீன சிந்தனையுடன் கூடிய ஒரு யூதர், மேற்கத்தியப் பண்பாட்டுக்கு ஏற்ப யூத மதத்தை நவீனப்படுத்த வேண்டுமென பரப்புரை செய்து கொண்டிருந்தார். அவர்தாம் தியோடர் ஹெஸில். பல தலைமுறைக்கு முன்பாக லெபனானிலிருந்து ஜெர்மனிக்கு வந்து குடியேறியவர். முற்போக்குச் சிந்தனை பழமைவாதச் சித்தாந்தத்தை விட்டும் யூத மதம் மேற்கத்தியப் பண்பாட்டு மாற்றங்களுடன் ஐரோப்பாவில் புத்துணர்வு பெற வேண்டும் என்பது தியோடரின் எண்ணமாக இருந்தது.

யூதர்கள் தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். தலைமுறை தலைமுறையாக மிகுந்த மதப்பற்றும், விஷேச குணாதிசயங்களும், இனப் பெருமையும் உடையவர்களாகவே வாழ்ந்து வந்தனர். யூதன் என்று வெளியே சொல்வதற்கும் தயக்கம் இருந்தது. ஐரோப்பாவில் தாங்கள் எத்தனை அவமானங்களைச் சந்தித்தாலும், மத உணர்வு என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறியிருந்தது. பிரச்னைகள் எழும் போதெல்லாம், அவர்களை வெள்ளை ஐரோப்பியர்கள் அந்நகரத்தை விட்டுத் துரத்துவதும், யூத மக்கள் வேறொரு நகரத்திற்கு இடம் பெயர்வதும் வழக்கமான செய்தியாக இருந்தது. தியோடர் ஹெஸில் இதில் மாற்றம் காண வேண்டும் என்று நினைத்தார். பல நூற்றாண்டுகளாக நாடுவிட்டு நாடாக நகர்ந்து கொண்டே இருந்த ஒரு சமுதாயத்தை ஒரே இடத்தில் நிலைகொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்தார். பிறப்பின் அடிப்படையில் என்று இல்லாமல் மத மாற்றம் மூலமாகவும் யூத  இனத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களை யூத இனத்திற்குள் மதமாற்றம் செய்வதற்கு அனுமதிப்பது. 3000 ஆண்டுகளுக்கு மேலாக எவருமே இப்படி யோசித்திருக்க மாட்டார்கள். பிறப்பின் அடிப்படையில் மட்டுமே இஸ்ரவேலர்களாக இருக்க முடியும் என்கிறபோது, மதமாற்றத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்? அடிப்படைவாத யூதர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆபிரகாமின்  வழித்தோன்றல்கள் மட்டுமே இஸ்ரவேலர்களாக இருக்க முடியும்.

தியோடர் ஹெஸில் ஓர் உடன்பாட்டிற்கு வந்தார். இஸ்ரவேலர்கள் இஸ்ரவேலர்களாகவே இருந்துவிட்டு போங்கள். யூத மதத்தைத் தழுவும் ஐரோப்பியர்கள் வெள்ளை யூதர்களாக இருக்கட்டும். யூதர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டு மென்றால் இது ஒன்றுதான் வழி. தியோடர் ஹெஸிலின் பரப்புரை தொடர்ந்தது.

ஜெர்மனியைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் ஏராளமான வெள்ளையர்கள் யூத மதத்தைத் தழுவினார்கள். முதலாம் உலகப் போருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த சியோனிஸ்ட்கள் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் மதமாற்றம் கண்டார்கள். கிறித்தவர்களோடு மோதல் போக்கையும், வன்முறையையும் கையாண்ட சியோனிஸ்ட்கள் நாங்கள் சிலுவைப் படைவீரர்கள் போன்று ஆண்டி கிறைஸ்ட்டின் படைவீரர்கள் என்று  சொல்லிக்கொண்டு வன்முறையாட்டம் நடத்தியதும், ரஷ்யாவில் பெரும் போர்க்களம் போன்று மோதிக் கொள்வதும், ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியைப் பிடிக்கும் வரையில் நீடித்தது. தியோடர் ஹெஸிலின் பரப்புரைக்கு ஆதரவாளர்கள் பெருகியிருந்தனர். பழமை வாத யூதர்கள், மதம் மாறிய வெள்ளை யூதர்கள் இரு பெரும் பிரிவு. தியோடர் ஹெஸிலின் யுக்தி சரியாகவே வேலை செய்தது. வெள்ளை யூதர்கள் தங்களை ஆண்டி கிறிஸ்டைன் படை வீரர்கள் எனப் பொருள்படும் சியோனிஸ்ட்கள் என்று அழைத்துக் கொண்டனர்.

தியோடர் ஹெஸில் ஓர் ஒரிஜினல் யூதன். எவர் நம்மை விரட்டி அடித்தார்களோ அவர்களையே தம்முடைய வேலைக்குப் பயன்படுத்தும் வீரர்களாக மாற்றிக் காட்டினான். ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் தங்களை யூதர்களாக அடையாளப்படுத்திக் கொண்டார்கள். யூதர்களின் நலனில் தங்களின் உடல் பொருள் ஆவி அத்தனையையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தார்கள். சியோனிச மதத்தின் ஒரு வரிக் கொள்கை அதுதான். யூத மதத்திற்காகத் தம்மை அர்ப்பணிப்பதுதியோடர் ஹெஸிலின் அடுத்த திட்டம் ரெடியானது. பரந்துபட்டு வாழுகின்ற யூதர்களுக்கென்று குடியிருப்புகள் கட்டுவது, யூதர்களை ஒன்றிணைப்பது. அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் நில வங்கி. யூதர்களின் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிதி வசூல் தொடங்கியது. ஐரோப்பாவில் வாழும் அத்தனை வச தியான யூதர்களுக்கும் செய்தி சென்று  சேர்ந்தது. பெர்லினைத் தலைமையிடமாகக் கொண்ட நில வங்கிக்கு நிதி நாலா பக்கமும் வந்து குவிந்தது.

யூதர்களின் குலத் தொழில் வட்டிக்கு விடுவது. நில வங்கியில் அதையும் செய்தார்கள். பணம் குட்டி போடத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் உதுமானியப் பேரரசுக்கும் ரஷ்யாவுக்கும் மிகப்பெரும் யுத்தம் நடந்தது. பல்வ்னா என்னும் இடத்தில் தளபதி உஸ்மான் பாஷா தலைமையிலான துருக்கியப் படை வீராவேஷமாகப் போரிட்டது. தளபதி உஸ்மான் பாஷா இப்போரில் கொல்லப்பட்டார். உதுமானிய கிலாபத்தைத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்த வீரர் அவர். அவரின் மரணம் கலீபா இரண்டாம் அப்துல் ஹமீதின் ஆட்சிக்குப் பெரும் பின்னடைவைத் தந்தது. உதுமானியப் பேரரசு யுத்தத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அரபு நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இருந்த துருக்கியப் படை கலீபாவைக் காப்பாற்ற அந்த நாடுகளை அநாதைகளாக விட்டுவிட்டு துருக்கிக்கு வரவேண்டிய சூழல். உதுமானியப் பேரரசு தங்களின் ஆட்சியை துருக்கி என்ற அளவில் மட்டுமே சுருக்கிக் கொண்டது. மத்திய கிழக்கு நாடுகள் ஒட்டமன் கிலாபத்தில் இருந்தாலும், அங்கு சரியான ஆட்சியாளர்கள் இல்லாமல் குழப்பமான சூழலில் இருண்டு கிடந்தன. தியோடர் ஹெஸில் ஏற்படுத்திய நில வங்கி குடி யிருப்புகளையும் தாண்டி ஒரு நாட்டை வாங்கும் அளவிற்குச் சொத்து சேர்த்திருந்தது.

 காலம் உருண்டோடியது. சியோனிஸ்ட்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். நாம் ஏன் ஒரு நாட்டை விலை கொடுத்து வாங்கக் கூடாது? ஐரோப்பா வேண்டவே வேண்டாம். வேறு எங்கு வாங்கலாம். நீண்ட ஆலோச னைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள். நாம் வாங்கும் நிலம் ஏன் பாலஸ்தீனமாக இருக்கக் கூடாது? நம்முடைய மூதாதையர்களின் நிலம், இறைவனால் அனுப்பப்பட்ட நம் தூதர்கள் வாழ்ந்த பூமி. இப்போது உதுமானியக் கலீபாவின் படைகள் அங்கு இல்லை. நாடு திறந்தவெளி பூமியாகக் கிடக்கிறது. மொத்த நிலத்தையும் வாங்கும் அளவிற்குச் செல்வம் நம்மிடம் இருக்கிறது. திட்டமும் செயல்படுத்தும் முறையும் முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் முயற்சியாக சியோனிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரிட்டனின் அரசர் வில்லியம்சைச் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. ரஷ்யாவில்  கிறித்தவர்களுக்கும், வெள்ளை யூதர்களுக்கும் நடந்த பெரும் கலவரத்தால் பல இலட்சம் யூதர்கள் அங்கிருந்து அடித்துத் துரத்தப்பட்டனர். அனைவருமே பிரிட்டனிலும், பிரான்சிலும் வந்து குடியேறியிருந்தார்கள். வெள்ளை யூதர்களின் செல்வாக்கு பிரிட்டனில் ஆட்சியாளர்களின் அரண்மனைக்குள்ளும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியிருந்தது. பிரிட்டனின் பிரதமராக வரும் அளவிற்கு அந்தச் செல்வாக்கு உச்சம் தொட்டது. பிரிட்டன் உலகின் பெரும் அதிகார  சக்தியாக வளர்ந்தபோது, அங்கிருந்த  யூதர்களும் சேர்ந்தே வளர்ந்தார்கள்.  அது பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி.

நன்றி சமரசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *