எழுந்திரு சலாஹுத்தீன்..!

இன்றோடு சிலுவை யுத்தக் காரர்களின் போர் முடிவு பெற்றது. எட்மண்ட் ஆலன் சுல்தான்  சலாஹுத்தீன் அய்யூபின் அடக்கத்தலத் திலிருந்து உரக்கக் கூறினான். முதலாம் உலகப்போருக்குப் பின் கி.பி. 1920இல் பாலஸ்தீனமும், சிரியாவும் பிரிட்டன் வசம் வந்த நிலையில், பிரிட்டன் படைத் தளபதி எட்மன்ட் ஆலன்  சிரியாவின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் முதல் நாள் நேரடியாக சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபின் அடக்கத்தலம் சென்று  சொன்ன வாசகங்கள்தாம் இவை. 19ஆம் நூற்றாண்டில் யூதர்களின் நில வங்கி மூலமாக பாலஸ்தீனத்தில் இடங்களைக் கையகப்படுத்துவது என்பது ஒரு சிவில் யுத்தம்தான். ஆனால் 11ஆம் நூற்றாண்டில் நடந்த சிலுவை யுத்தங்கள் பாலஸ்தீன மண்ணில் தொடர்ச்சியாக நடந்த இரத்த சரித்திரங்கள்.

கிறித்தவர்களின் புனித நிலம் இஸ்லாமியர்கள் வசம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதை மீட்டெடுப்பது தான் உண்மையான கிறித்தவரின் நோக்கமாக இருக்க முடியும் என்று அன்றைய திருச்சபையின் அணுசரனையோடு முடுக்கிவிடப்பட்ட பரப்புரை ஐரோப்பா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கிபி 1000ஆவது ஆண்டில் ஏசு கிறிஸ்து பாலஸ்தீனத்தில் வந்து இறங்குவார் என்ற நம்பிக்கையும், கிறித்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட ஒருவித மதக் கிளர்ச்சியாலும் ஐரோப்பாலிருந்து பாலஸ்தீனத்திற்கு புனிதப்  பயணம் செய்யும் மக்கள் அதிகரித்திருந்தனர்.

புனிதப் பயணம் செய்யும் பயணிகளுக்குத் துணையாகச் செல்ல வேண்டும், முடிந்தால் பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து நிரந்தரமாக மீட்க வேண்டும் என்பதற்காகவே போர் வீரர்களைத் திரட்டிய நிகழ்வு சிலுவைப் போர்களாக உருவெடுத்தன. சிலுவைப் படையில் வீரர்கள் வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. சிலுவைப் போர் வீரர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தது. மத குருமார்களின் பரப்புரை மக்களின் மத்தியில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

1095ஆம் ஆண்டு போப் இரண்டாம் அர்பன் கிளார்மாண்ட் முதலாம் சிலுவைப் போருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பிரான்ஸ் மன்னர் ஏழாம் லூயிஸ் நேரடியாகக் கலந்துகொண்ட இரண்டாம், மூன்றாம் சிலுவைப் போர்கள்தான் வரலாற்றில் பெருமளவில் பேசபபட்டன. அதற்குக் காரணமும் இருந்தது. மன்னர்  சலாஹுத்தீன் அய்யூபி. பாக்தாத்தில் பிறந்து சிரியாவின் கவர்னராக இருக்கும்போது  இரண்டாம் சிலுவைப் போர் செய்வதற்காக ஐரோப்பியப் படைகள் பாலஸ்தீன எல்லையில் குவிந்து நின்றன. 1187இல் நடந்த இந்த மாபெரும் யுத்தம் மன்னர் சலாஹூத்தீன் அய்யூபின் வெற்றியை வரலாற்றில் பதிவு செய்தது.

நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற இலத்தீன் திருச்சபையின் எண்ணம் பொய்த்துப்போனது அப்போதுதான். ஒரு முறை இரண்டு முறை அல்ல, ஏழு முறை நடந்த சிலுவைப் போர்களும் அவர்- களுக்குத் தோல்வியில் முடிந்தது. ஐரோப்பியர்களுக்கும் மன்னர் சலாஹுத்தீன் அய்யூபிற்கும் இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டன. கிறித்தவர்கள் புனிதப் பயணம் செய்து பாலஸ்தீனம் வருவதற்குத் தடையில்லை. ஆனால் போர் என்று வந்தால் தொலைத்துவிடுவோம் என்ற எச்சரிக்-கையையும் சேர்த்தே ஒப்பந்தத்தில் எழுதினார்கள்.

சிலுவைப் போர்களின் தோல்வி ஐரோப்பியர்களுக்குத் தீராத மன வலியை ஏற்படுத்தியிருந்தது. 1920இல் சிரியா சென்ற பிரான்சின் படைத் தளபதி ஹென்றி கொரோடு என்பவன் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபின் அடக்கத்தலத்தின் மீது காலை வைத்துச்  சொன்னான்.  ‘எழுந்திரு சலாஹுத்தீன் நாங்கள் திரும்பி வந்திருக்கிறோம்.’ சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபின் வீரம் அத்தகையது. அவரிடம் தோல்வி அடைந்த பிரான்ஸ் மன்னன் ஏழாம் லூயிஸின் தோல்வியை பிரான்ஸ் வீரர்கள் நூற்றாண்டுகளாக நினைவில் வைத்திருந்தனர். ஐரோப்பாவில் கிறித்தவ மதம் பரவுவதற்கு முன்பாக பாகால் என்ற வழிபாட்டு முறையில் ஐரோப்பியர்கள் வழிபாடுகள் செய்வது வழக்கம்.

இது ஒருவகையான மூதாதையர் வழிபாடு. அவர்களின் ஆவிகளை வணங்குவது, சடங்குகள் செய்வது என கிறித்தவ சமயத்தைச் சாராத ஐரோப்பியர்கள் இன்றும் கூட இந்த பாகால் முறை-யில் வழிபாடு செய்கிறார்கள். கிறித்தவ சமயம் ஐரோப்பாவில் பரவுவதற்கு பாகால் தடையாக இருந்தது என்பதால், ஐரோப்பா முழுவதும் பெரும் வன்முறைகள் நடந்தன. இதை திசை திருப்பு-வதற்காக இலத்தீன் திருச்சபை மக்களின் கவனத்தை பாலஸ்தீனம் நோக்கித் திருப்பியது என்றே வரலாற்று ஆசிரியர்கள் பதிவும் செய்திருக்கிறார்கள்.

15ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க கிறித்தவ சபையில் கருத்து முரண்பாடுகள் உச்சத்தைத் தொட்டன. ஜெர்மானிய கிறித்தவ மதகுரு மார்ட்டின் லூதர். கிறித்தவ நம்பிக்கையில் சீர்திருத்தம் வேண்டுமென கொடி பிடித்தவர். பழமைவாய்ந்த கருத்துகளை விட்டும் மதகுருக்கள் வெளிவர வேண்டும் என கருத்து சொன்னதற்காக சபையை விட்டும் விலக்கி வைக்கப்பட்டவர். இதே காலகட்டத்தில் பிரிட்டனின் அரசனாக ஆட்சி செய்தவர் எட்டாம் ஹென்றி. அவருக்கு ஒரு மகள் மட்டுமே. தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக போலின் என்ற பெண்மணியை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்ய நினைத்தார். ஆனால் கத்தோலிக்க திருச்சபை இதை ஏற்கவில்லை. போப்பின் உத்தரவு மன்னர் ஹென்றிக்குக் கடும் எரிச்சலைக் கொடுத்தது.

மன்னர் விரும்பிய செயலைச் செய்ய மதம் என்ற பெயரில் மத குருமார்கள் தடையாக இருப்பது மன்னர் ஹென்றியை யோசிக்க வைத்தது. இனிமேல் பிரிட்டனில் திருச்சபைக்கு தலைவர் போப் அல்ல. பிரிட்டனின் மன்னர்தான் இனிமேல் திருச்சபையின் தலைவர் என பிரிட்டன் அரசவையில் சட்டம் திருத்தப்பட்டது. மன்னர் எட்டாம் ஹென்றி தான் விரும்பிய போலினை இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு போப் வரவில்லை. வரவேண்டாம் என எட்டாம் ஹென்றி உத்தரவிட்டதாகத் தகவல். இனிமேல் இங்கிலாந்தில் கத்தோலிக்க கிறித்தவ சபைக்கு வேலையில்லை.  சர்ச் ஆஃப் இங்கிலாண்ட் என்கிற புதியதிருச்சபையைத் தொடங்க எண்ணினார்.

போப்பிற்குப் பதிலாக பிஷப் என்னும் தலைவரைத் தேர்ந்தெடுக்க எண்ணினார். இந்த சீர்திருத்தத்தைச் செயல்படுத்த சரியான நபர் யார் என்று யோசித்தார் மன்னர் ஹென்றி. கத்தோலிக்க சபையால் விரட்டி அடிக்கப்பட்ட மார்டின் லூதரைத் தேர்ந்தெடுத்தார். அவர்தான் சரியான நபர் எனத் தீர்மானித்தார். அவர்தான் நவீன கருத்துகளை அள்ளித் தெளிப்பவர் ஆயிற்றே. மார்ட்டின் லூதரை அழைத்துவர உத்தரவிட்டார். அள்ளிக் கொண்டு வந்து மன்னனின் முன் நிறுத்தினார்கள். கிறித்தவத்தின் புதிய மதம் பிறந்தது. அன்றுதான் எட்டாம் ஹென்றி மனம் மகிழ்ந்து போனார்.

கத்தோலிக்க திருச்ச பைக்குப் போட்டியாக புரட்டஸ்டண்ட் கிறித்தவர்களின் சபை. பெயரைச் சூட்டியதும்  சாட்சாத் மன்னர்தான். புரட்டஸ்டண்ட் என்றாலே நவீனத்துவம் தானே. ஆனால், ஒரு நிபந்தனையைப் போட்டார் மன்னர். புரட்டஸ்டண்ட் சபையின் தலைவன் என்றுமே மன்னன்தான். மன்னனுக்கு அடுத்துத- õன் பிஷப், மற்றவர்கள் எல்லாம். மார்ட்டின் லூதர் இதைத்தானே எதிர்பார்த்தார் , மார்ட்டினுக்கு இதில் எந்த பிரச்னையும் இல்லை. எட்டாம் ஹென்றிக்கு இனி தடைபோட யாருமில்லை. ஆறு திருமணங்கள் செய்தார் மன்னர். ஒரு வழியாக ஆண் வாரிசும் மன்னருக்குப் பிறந்தது. பிரிட்டனின் காலனி நாடுகளிலும் கத்தோலிக்க திருச் சபை நடத்துவதற்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதி மறுத்தது. இன்றுவரை கத்தோலிக்க கிறித்தவ  சபையும் அதன் வழிவந்த போப்களும் யூதர்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிரிட்டன் முழு ஆதரவு கொடுக்கிறது என்றால் இந்த நவீனத்துவ மத சிந்தனையும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்.

நன்றி சமரசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *