கி.பி.70. ரோமர்களின் படை ஜெருசலத்தைச் சுற்றி வளைத்தது. ரோமப் படைகளை நோக்கி படைத்தளபதி தித்தூஸ் மிக ஆக்ரோஷமான உத்தரவைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான். ‘500 ஆண்டுகள் பழமையான கோயிலைத் தவிர்த்து ஏனைய இடங்களைத் தாக்குங்கள்’என்பதுதான் அவனிட்ட உத்தரவு. யூதர்களுடன் ஜொசிஃபெஸ்ஸை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி போர் இல்லாமல் ஒரு பொதுப்படையான முடிவுக்கு வரலாம் என்று தித்தூஸ் நினைத்தான். ஆனால் யூதர்களின் தந்திரமும், சூழ்ச்சியும் தித்தூஸுக்குக் கடும் கோபத்தையே வரவழைத்தது. இச்சூழ்ச்சியை அறிந்த தித்தூஸ் ‘ஒரு யூதனும் உயிரோடு இருக்கக் கூடாது’என்ற கடுமையான உத்தரவைப் பிறப்பித்தான்.

ரோமப் படைவீரர்களும் கடும் கோபத்தில் இருந்தனர். யூதர்களின் தாக்குதல்களாலும், தந்திரங்களாலும் சீற்றமடைந்திருந்த ரோமானிய வீரர்கள், ‘அவர்களின் கோவிலை மட்டும் விட்டு விடுங்கள்’ என்ற தித்தூஸின் உத்தரவை ஏற்காமல் கோயிலுடன் இணைந்திருந்த பகுதியில் தீ வைத்தனர். வரலாற்றில் இரண்டாம் முறையாக யூதர்களின் கோவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஜொசி ஃபெஸ் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ரோமர்கள் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கும் போது யூதர்களின் கீழ்த்தரமான சூழ்ச்சியினால் தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக் கொண்டனர். ரோமானிய இராணுவம் அனைவரையும் கொன்றொழித் தது. கோயிலின் மேற்குக் கோபுரத்தைத் தவிர அனைத்தும் இடிக்கப்பட்டன. ரோமப் படையெடுப்புக்கு முன்னர் அந்நகரம் எவ்வாறு விளங்கியது என்பதைப் பின்வரும் தலைமுறைக்கு காண்பிப்பதற்காக மட்டும் ரோமர்கள் மேற்குக் கோபுரங்களை விட்டு வைத்தனர்.

 போரில் தப்பித்த யூத குடும்பங்கள் நடு நீலக் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகே நைல் நதியிலிருந்து ஃபுராத் நதி-வரை உடைந்து சிதறினர். ஃபுராத் என்பது இன்றைய யூப்ரட்டீஸ். இன்றைய யூதர்களின் கிரேட்டர் இஸ்ரேலும் நைலிலிருந்து யூப்ரட்டீஸ் வரையிலான பகுதிகள்தான். அன்றைய யூதர்கள் உயிர் பிழைக்க ஓடி தஞ்சம் புகுந்த, இன்றைய கிரேட்டர் இஸ்ரேல் நிலப்பகுதிதான் தங்களுக்கு வேண்-டும் என்று அடம்பிடித்தார்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற யு.என். நியூஸ் என்ற டாக்குமென்டரி தொலைக்காட்சி நிறுவனம் 2015-ஆம் ஆண்டு ஜெருசலம் மக்களின் வாழ்வியலையும், மனோநிலையையும் ஒரு டாக்குமென்டரியாக படம் எடுத்தது. ஜெருசலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் யூத, கிறித்தவ, முஸ்லிம்களின் மன உணர்வும், சமூக உளவியலும் எத்தகைய சூழ்நிலையை இங்கு பிரதிபலிக்கிறது என்பதை அறிவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

அந்த படத்தொகுப்பிலிருந்து சில செய்திகளை நாம் பார்க்கலாம். ராஃபி விச்ஷெக் கோல்ட்ஸ்டெயின். நிகழ்கால ஜெருசலத்தில் வசிக்கும் மதபோதகர். தன் குடும்பத்தோடும், உறவினர்களோடும் மிக நெருக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர். பாரம்பரியமான யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். 1948இல் இஸ்ரேல் தனி நாடாகப் பிரகனடப்படுத்திய காலக்கட்டத்தில் ஜோர்டானில் இருந்து மீண்டும் ஜெருசலத்தில் குடியேறியவர். ராஃபி விச்ஷெக் கோல்ட்ஸ்டெயின்  சொல்கிறார்: ‘நாங்கள் மத அடிப்படையில் மிக ஒற்றுமையுடன் இருக்கிறோம். (நாங்கள் என்றால்… யூதர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்) யூத மதம் மிகவும் திடமானது. மிகவும் பழமையானது. நாங்கள் இறைவனால் விசேஷமாகப் படைக்கப்பட்டவர்கள். கடவுள் அவரின் செய்திகளை எங்களின் மூலமாகவே இவ்வுலகிற்கு அறிவித்திருக்கிறார். அவர் எங்களுக்கு சிலவற்றை வாக்களித்திருக்கிறார். அதற்காகவே நாங்கள் காத்திருக்கிறோம். அது தனிப்பட்ட ராஃபியின் செய்தி அல்ல. ஒட்டுமொத்த யூதர்கள் உலகிற்கு  சொல்லும் செய்தி. ஒட்டு மொத்த யூதர்களின் நிலைப்பாடு.

 இறைவனின் படைப்பில் நிச்சயமாக ஏற்றத் தாழ்வு இருக்கிறது. அன்றும் சரி இன்றும் சரி யூதர்களின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஜெருசலம் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் இமாமாக இருக்கும் இமாம் ஹஜ் அல் பாக்ரியிடம் பேட்டி கண்டார்கள். ‘இறைவன் மோசஸைத் தூதராக அனுப்பினான். தோரா அருளப்பட்டது. நாங்களும் நம்புகிறோம். எப்போது ஏசு தூதராக அனுப்பப்பட்டாரோ, எப்போது இன்ஜீல் அருளப்பட்டதோ அன்றே மோசஸ் உடைய மார்க்கம் முடிவடைந்தது. நாங்களும் ஏசு என்கிற ஈசாவை ஏற்றுக் கொள்கிறோம். இன்ஜீலையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவன் தன் தூதராக முகம்மது (ஸல்) அவர்களை அனுப்பியவுடன் மோசஸ் உடைய மார்க்கமும், ஏசுவுடைய மார்க்கமும் முடிவடைந்துவிட்டது. எல்லோருமே முஹம்மது உடைய மார்க்கத்தையும், குர்ஆனை-யும் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்-டும். அதுதானே நியாயமாக இருக்க முடியும்’ என்கிறார்.

ஜெருசலத்தில் அரபுகள், யூதர்களைத் தவிர கிறித்தவர்களும் சிறுபான்மை மக்களாக வாழ்கிறார்கள். ஜெருசலத்தின் நடு மத்தியில் வசிக்கும் ஒரு கிறித்தவக் குடும்பத்தை யு.என். நியூஸ் தொலைகாட்சியினர் சந்தித்தனர். ஒரு சமையல் கலைஞரைச் சந்திக்கும்போது  ஆட்டிறைச்சியைச் சமைத்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி அங்கு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிகிறார். அவர் சொல்கிறார்: ‘நான் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அவர் யூதரா அல்லது அரேபியரா என்று எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. வருபவர்களை நோயாளியாக மட்டுமே பார்க்கிறேன். அப்படி நாங்கள் இங்கு வசிப்பதுதான் எங்களுக்கு நலம் பயக்கக் கூடியதாக இருக்க முடியும்’ என்று சொல்கிறார். ‘ஏசு சொன்னார்.. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தில் அடியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று..!இங்கு யூதர்கள் ஒரு கன்னத்தில் அடிக்கும்போது அரபுகள் எங்களின் மறு கன்னத்தில் அடிக்கிறார்கள். இதுதான் இங்கு எங்களின் நிலை என்று  சொல்லிவிட்டுச் சிரிக்கிறார். அச்சிரிப்பில் அவர்களின் வாழ்வியல் சூழல் பளிச்சிடுகிறது. அவரின் மகள் எல்விரா ஷேகாடோ, கல்லூரி மாணவி. அவரின் பேச்சு இன்னும் அந்த மக்களின் வாழ்வியலைப் போட்டு உடைக்கிறது. ‘நீங்கள் உங்களின் எதிரிகளை நேசியுங்கள் என்று ஏசு சொன்னார். அது சிரமமான செயல்தான். ஆனால் நாங்கள் ஜெருசலத்தில் அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.’

 எல்விராவின் வார்த்தைகள் மிகுந்த வலியையும், யூத, கிறித்தவ,  முஸ்லிம்கள் அங்கு எத்தகைய மனோ நிலையில் வாழ்கிறார்கள் என்பதையும் உலகிற்குப் படம் பிடித்துக் காட்டியது. 1948இல் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்று இருவேறு நாடுகளாகப் பிரிந்தும் இன்று வரையில் ஏன் இந்தப் பதட்டம்.? காரணம் ஒன்றே ஒன்றுதான்..! யூதர்களின் நிலப்பரப்பை விரிவாக்குவது. பாலஸ்தீனத்தை முழுமையாக கபளீகரம் செய்தால்தானே எகிப்தையும், சவூதி அரேபியாவின் சில பகுதிகளையும் கபளீகரம் செய்ய முடியும். ஏற்கனவே தங்களின் கூட்டாளியைக் கொண்டு ஈராக்கையும், சிரியாவையும், ஜோர்டானையும் கையகப்படுத்தும் வேலை தொடங்கப்பட்டுவிட்டதே.,! முஸ்லிம் தீவிரவாத இயக்கமாயிற்றே..!’ என்று நீங்கள் நினைக்கலாம். அதைப் பற்றியும் நாம் விரிவாகப் பின்பு பேசுவோம். அதற்கு முன்பாக பாலஸ்தீனத்தை முழுமையாகக் கைப்பற்றும் வேலையில் நீண்டகாலம் தேவைப்படுகிறதே என்பதுதான் யூதர்களின் கோபம்.

உலகில் பரவி இருக்கும் பனி இஸ்ரவேலர்களின் கோபம். அதன் வரலாற்றுச் சிக்கல் அத்தகையது. 1967இல் ஆறு நாள்கள் கடுமையான யுத்தம். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வந்த அரபு நாடுகளுடன் இஸ்ரேல் ஒத்தை ஆளாகப் போர் தொடுத்தது. இஸ்ரேல் சுதந்திர நாடாக பிரகனப்படுத்திய அந்த 20 ஆண்டுகளில் அத்தனை ஆயுதங்களை இஸ்ரேல் தயாரித்திருந்தது. மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யும் அளவிற்கு உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியிருந்தது. 1967 போரில் இஸ்ரேலின் வெற்றி உலக நாடுகளுக்கு இஸ்ரேலின் ஆயுத பலத்தை பறைசாட்டியது. அந்தப் போரில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையோரமான காஸா பகுதியை இஸ்ரேல் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. ஜெருசலத்தின் முழுக் கட்டுப்பாடும் இஸ்ரேலின் கையில் வந்துவிட்டது. அவர்களின் அனைத்து அதிகார மையங்களும் ஜெருசலம் வந்துவிட்டன. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேல் என்ற ஆக்டோபஸ் கபளீகரம் செய்துவிட்ட நிலையில், அவர்களின் அடுத்த கட்டத் திட்டம் என்பது முழு பாலஸ்தீனும் இஸ்ரேலின் எல்லைக்குள் வரவேண்டும். என்பதுதான். அவர்களுக்குத் தேவை பாலஸ்தீன மக்கள் அல்ல. அவர்களின் நிலம். எனவே தான் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் கொல்கின்றார்கள். துரத்தி அடிக்கின்றார்கள். ரோமர்களின் படையெடுப்பில் தங்களின் மூதாதையர்களின் மீது ஏவப்பட்டதைப் போன்று இன்று பாலஸ்தீனத்து அரபுகள் மீது வன்முறையை ஏவுகிறார்கள் யூதர்கள். இஸ்ரவேலரே..! உன்னுடைய எல்லைப் பகுதி நைல் நதியிலிருந்து ஃபுராத் வரை பரவியுள்ளது. எல்லை விரிவுபடுத்துதல் என்பது அவர்களின் மதநம்பிக்கையின் நடுப் பகுதியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *