குதிரையின் காலடிச் சப்தம், இப்னு சூரியாவை மிதமான உறக்கத்திலிருந்து விழிக்க வைத்தது. அந்தச் சிறிய மலைக் குன்றின் முகட்டில் தோழர்களுக்காகக் காத்திருந்தவன் அவர்களின் தாமத வருகையின் காரணமாக பாறாங்கல் முகட்டில் சாய்ந்தவண்ணம் சற்றே உறங்கிப் போனான். நண்பர்கள் குதிரையை நடத்திக் கொண்டே அவன் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் நடையில் வேகம் இருந்தாலும் முகத்தில் சோர்வும், வெறுப்பும் மண்டிக் கிடந்ததை இப்னு சூரியா உன்னிப்பாகக் கவனித்தான். அவன் எதிர்பார்த்த சுபச் செய்தியை அவர்கள் கொண்டுவரவில்லை. நபித்துவம் தங்களின் யூத இனத்தைத் தாண்டி அரபு சமுதாயத்திலிருந்தும் வரமுடியும் என்பதை அவனது அறிவு ஏற்றுக் கொள்ளவில்லை.

 தோராவில் இறுதி நபியாக வரப்போகிற நபரைப் பற்றிய அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதை அவன் அறிவான். சுர்மா கண் உடையவர், நடுத்தர உயரமானவர், அடர்த்தியான முடியுடையவர், அழகான முகம் கொண்டவர் இவை அந்த அஹமதுக்குப் பொருந்திப் போகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் அவரிடம் தோராவில் உள்ள வசனத்தின் அடிப்படையில் சில கேள்விகளைக் கேட்கவும் தனது ஆட்களை அனுப்பியிருந்தான் முஹம்மது தான் இறைவனின் இறுதித் தூதர் என்பதை அவனுடைய அறிவு நம்பினாலும் அவனுடைய இனவெறி பொறாமைத் தீயைத்தான் மூட்டியது.

 யூதர்களை விட அறிவுஜீவிகள் இவ்வுலகில் படைக்கப்படவில்லை, இதுவரையில் வந்த தூதர்களும் யூத இனத்தைத் தாண்டி வந்ததில்லை. இறைத்தூதர் வருவாரேயானால் அவர் நிச்சயம் யூதனாக மட்டுமே இருக்க முடியும். ஆபிரகாமிற்கு இறைவன் வாக்களித்ததை எங்ஙனம் மீற முடியும். தோராவில் சொல்லப்படும் அங்க அடையாளங்கள் சரிதான்..! ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை, இதற்கான தண்டனையாகக் குறைந்த காலம் மட்டுமே நரகத்தில் இருப்போம் பின் மீண்டும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோம். இப்னு சூரியாவின் உறுதியான நம்பிக்கை இதுதான்..!

மதீனத்து யூதர்கள் பிரம்மாண்டமாகக் கதை கட்டினார்கள். தங்களின் புனிதத்தலமான பைத்துல் முகத்தஸை நோக்கி இறைவனை வணங்கிய முகம்மத் அரேபியர்களின் கிப்லாவான கஅபாவை நோக்கி வணக்க வழிபாடுகள் செய்கிறார் என்று வந்த செய்தியால் அவர்களுக்குள் இருந்த வன்மம் இன்னும் வளர்ந்தது. அந்த வன்மத்தின் மரபணு இன்று வரையில் யூதர்களின் செயல்பாடுகளில் நவீனத்துவம் பெற்றிருக்கிறது. இப்னு சூரியா, இறைவனின் தூதர் முஹம்மத்தைப் பார்த்து நேரடியாகவே கேட்டான். ‘எங்கள் மார்க்கம்தான் நேரானது. நாங்கள் உங்களைத் தூதராக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நீர் எங்களின் தவ்ராத்தைப் பின்பற்ற வேண்டும். உங்களால் முடியுமா? ஆம் என்றால் பிரச்னை முடிந்தது. நாங்கள் அனைவரும் உங்களை நபியாக ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை.’ முஹம்மது நபி அவர்களை இறைவனின் தூதராக ஏற்றுக் கொள்வதில் அன்றைய யூதர்களுக்கு பிரச்னையாக இருந்தது சாதிவெறி மட்டுமே. யூதன் என்கிற இன அடிப்படையிலான சாதிவெறி.

 இன்றைய நவீன காலம் வரையிலும் தொடரும் யூதர்களின் இஸ்லாமிய விரோதப் போக்கின் ஆணிவேர் இந்த இனவெறி மட்டுமே. இந்த இனவெறி தாண்டி வேறொன்றும் இல்லை. தவ்ராத்தில் சொல்லப்பட்ட இறுதி நபி அஹமத் இவர்தான் என்று அவர்கள் உணர்ந்த போதும் இனதுவேசம் காரணமாக தவ்ராத்தையே மாற்றி எழுதினார்கள். சுர்மா கண் உடையவர் என்பதை நீலக் கண் உடையவர் என்று மாற்றி எழுதினார்கள்.

இன்றைய நவீன உலகில் யூதர்கள் பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். உலக வங்கி முதல் பெரும்பாலான நிதி நிறுவனங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், டெக்னாலஜி என பரந்துபட்ட செல்வாக்கோடு உலகையே மறைமுகமாக ஆளும் சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கடந்துவந்த பாதை மிகக் கடினமானது. முஸ்லிம்கள் தவிர ஏனைய பிற இனத்தினரால் மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, நசுக்கப்பட்டு, முகாம்களில்வைத்து கொத்துக் கொத்தாய் கொலை செய்யப்பட்ட போதும் கூட தங்களை மீட்சி பெறவும், மீட்சி பெற வைக்கவும் இறைவன் தங்களுக்கு வாக்களித்த மஸீஹ் தங்களின் இனத்தில் பிறந்து வருவார் என்ற நம்பிக்கை அவர்களைப் பல நூற்றாண்டு களாக உயிர்ப்போடு வாழவைத்துக் கொண்டிருந்தது.

இந்த உலகை என்றாவது ஒரு நாள் சக்திவாய்ந்த யூதன் ஆட்சி செய்வான் என்பது கடந்த 2000 ஆண்டுகளில் அவர்களின் மரபணுவில் நீர்த்துப் போகாமல் கடத்தப்பட்டு வரும் யூத சித்தாந்தம். பனி இஸ்ரவேலர்களின் கனவு இன்று கிரேட்டர் இஸ்ரேலை நோக்கி நகர்த்திக் கொண்டு வந்ததற்கான காரணமும் அதுதான். 2012இல் ஜெருசலத்தில் அவர்களின் மூன்றாம் டெம்பிளுக்கான கல் ஊன்றப்பட்டுவிட்டது. சாலமன் கட்டிய கோவில் புதுப்பிக்கப்பட்டால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி இருக்கும் இஸ்ரவேலர்கள் என்கிற யூதர்கள் இஸ்ரேலை நோக்கி விரைந்து வருவார்கள் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது இதற்கான வேலையைச் செய்து கொண்டிருக்கும் ஜீயோனிஸ் என்ற இரக்கமற்ற யூதர்களின் வசம் அந்த வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. கிரேட்டர் இஸ்ரேல் உருவாகாமல் பனி இஸ்ரவேலர்கள் இஸ்ரேலை நோக்கி வரப்போவதில்லை என்பதால், அதற்கான வேலையைத் துரிதப்படுத்தியிருக்கிறது ஜீயோனிஸ் இஸ்ரேல் அரசாங்கம். வெள்ளை யூதர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் இன அழிப்புப் படுகொலைகள், குழந்தைகள், பெண்களின் மேல் என நியாய தர்மமற்ற யுத்த வன்மத்தைக் கட்டவிழ்த்து நிலப்பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நீண்ட காலத் திட்டம் இன அழிப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சிரியா, ஜோர்டன், எகிப்து, ஈராக், சவுதி அரேபியாவின் சில பகுதிகள் என பல நிலப்பரப்புகளை இஸ்ரேலுடன் இணைத்து பெரும் நிலப்பரப்புள்ள நாடாக இஸ்ரேலை மாற்ற வேண்டுமென்பது யூதர்களின் நோக்கமாக இருக்கிறது.

 அகண்ட இஸ்ரேலே அவர்களின் நீண்டகாலக் கனவு. இன்றைய இஸ்ரேல் ஆட்சியாளர்களும் அவர்களின் அடியாள் மொசாட்டிற்கும், பனி இஸ்ரவேலர்கள் கொடுத்திருக்கும் வாழ்நாள் பணி அதுதான். உலகில் எழுத்து வடிவில் அரசமைப்புச் சட்டம் இயற்றாத ஒரே நாடு இஸ்ரேல்-தான். வெளி உலகத்திற்குத் தன்னை ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களின் செயல்பாடுகள் படு ரகசியமானவை. படு ரகசியம் என்றால் படு ரகசியம் தான். வரலாற்றைச் சரியான கோணத்தில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும், அங்கு நடப்பது வெறும் யுத்தம் மட்டுமல்ல. வேறு ஏதோ ஒன்று நடத்தப்பட்டுக் கொண்-டிருக்கிறது என்று..!

நன்றி – சமரசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *