பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன?

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாப் அல்லாத மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பெரும்பான்மை வாதத்தின் எழுச்சியாகவே பார்க்க முடிகிறது. இந்துத்துவம் அதன் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது கிடைத்துள்ள வெற்றி மீண்டும் அவர்களை இன்னும் வீரியமாக செயல்பட வைக்கும்.

காந்தி குடும்பம் காங்கிரஸில் இருந்து வெளியேற வேண்டும் என்ற குரலை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்?!

பிஜேபி வெற்றி பெறக் கூடாது என்று நினைப்பவர்கள் அதன் வெற்றியை பல்வேறு தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்கள். அதில் ஒன்றுதான் காந்தி குடும்பம் காங்கிரஸில் இருந்து வெளியேற வேண்டும் என்ற குரலும். பிஜேபியின் வெற்றிக்கு இது போன்ற பல்வேறு தவறான காரணங்கள் கூறப்படுகின்றன. முஸ்லிம்கள் ஓட்டை பிரித்தனர், ஆம் ஆத்மி கட்சி ஓட்டை பிரித்தனர் போன்ற பல்வேறு தவறான காரணங்களை இவர்கள் கூறிவருகிறார்கள்.

 பிரச்சனை எது என்பதை அடையாளம் காணாமல் வெறுமனே ராகுல்காந்தி மற்றும் இந்திரா காந்தியை வெளியேறச் சொல்வது ஒரு போதும் இதற்கான தீர்வாகாது. மோடியை எதிர்த்து களம் காணுவதற்கு இங்கே தலைவர்கள் என எவரும் தென்படவில்லை. பிஜேபியில் கூட மோடிக்கு அடுத்தபடியாக யோகி ஆதித்யநாத் முன்னிறுத்தப் படுகிறார். இத்தகைய சூழலில் பிரதான எதிர்க்கட்சியின் முகமாக இருக்கும் ராகுல் காந்தியை விலக சொல்வது ஒரு போதும் இந்த பிரச்சனைக்கான தீர்வாக அமையாது.

காங்கிரஸ் அல்லாத வேறு ஏதேனும் மூன்றாவது கட்சி மத்தியில் பிஜேபி-யை எதிர்த்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா?!

காங்கிரஸ் அல்லாத பிரதமர்களையும் நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். தற்போதைய சூழலில் பிஜேபிக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பதை நாம் காண முடிகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அனைத்து இந்திய சமூக நீதி சம்மேளனம் எனும் பெயரில் இந்திய அளவில் ஒருகூ உருவாக்கி அதன்மூலம் பிஜேபியை எதிர்க்கின்ற ஆற்றலை மத்திய அளவில் பெற முடியும் என கருதுகிறார்.

இதுபோன்ற முன்னெடுப்புகள் மூன்றாவது கட்சி அமைவதற்கான சிறந்த உதாரணங்களாகும். இது போன்ற திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டால் பாஜகவின் அசுர வளர்ச்சியை அது தடை செய்யும். எனவே இதுபோன்ற முயற்சிகள் அனைத்தும் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியவை. இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இதுபோன்ற மூன்றாவது கட்சிகள் தோன்றி பாஜகவை அரசியல் ரீதியாக வெற்றி பெற்றாலும் அது பாஜகவை முழுமையாக இல்லாமல் ஆக்கக்கூடிய வெற்றியாக ஆகாது. ஏனெனில் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்த்து அதனை இல்லாமல் ஆக்குவதுதான் ஒரு நிரந்தர வெற்றியாக இருக்கும். இதுதான் இப்போதைய தேவையாகவும் இருக்கிறது.

உவைசி போன்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் முற்றிலுமாக அரசியலிலிருந்து சில காலம் விலகி இருப்பது சிறந்தது எனவும் இதன் மூலமாக பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியும் எனவும் எழுந்து வருகின்ற குரலை எவ்வாறு அணுகுகிறார்கள் ?!

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பேசியவர்கள் உத்தரபிரதேசத்தில் 100 தொகுதியில் போட்டியிட்டார் என்பதற்காகத்தான் இந்த கருத்து அதிகமாக எழுந்து வருகிறது. அவர் தலித் இயக்கங்கள் போன்ற சிறிய அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தான் தேர்தலில் நிற்கிறார்..  இந்த நிலையில் இவரை B டீமாக இருக்கிறார். ஓட்டை பிரிப்பவரகா இருக்கிறார் என பிரதான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தேர்தல் முடிவுகள் மூலமாக உவைசி குறைவான ஓட்டுகளே வாங்கி உள்ளார் என்பது நமக்கு தெளிவாக தெரியவருகிறது. இருப்பினும் கூட ஒவ்வொரு முறையும் பாஜகவின் வெற்றிக்கு உவைசிதான் காரணம் போன்ற அடிப்படையில்லா காரணங்களை தான் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.  இவ்வாறு கூறுவதை அவர்கள் தற்போது வழக்கமாகும் மாற்றியுள்ளனர்.

இவர்களுடைய வெற்றியை தோல்வி சுயவிமர்சனம் செய்து கொள்ள தயாராக இல்லாதவர்கள் முஸ்லிம்கள் அனைவரையும் குற்றம்சாட்டி வருகின்றனர். முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கட்சிக்கு வாக்களித்தால் அந்த கட்சி ஜெயித்துவிடும் என்று இவர்கள் கூறிவருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும் முஸ்லிம்களை குறிவைத்து இவர்கள்தான் நாட்டை காக்க வேண்டும், இவர்கள் தான் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று கூறி முஸ்லிம்களையே கூறிவருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த முக அழகிரி போன்ற நபர்கள் கூட இதுபோன்ற முஸ்லிம் விரோத வார்த்தைகளை முன்வைப்பதை நாம் காணமுடிகிறது.

நடைமுறையில் முஸ்லிம்கள் பிஜேபிக்கு எதிராக இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளுக்கே பெரும்பான்மையாக வாக்களிக்கிறார்கள், ஒரு சிலரே வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள், அல்லது சிலர் தனியாக சுயேட்சையாக அரசியல் களம் காண்கிறார்கள். ஆனால் இதனை மட்டுமே மையமாக வைத்து முச்லீம்களால்தான்தான் பிஜேபி வெற்றி பெறுகிறது என்று கூறுவது எதிர்கட்சிகளின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது.

பிஜேபி-யை யார் ஜெயிச்சு வைக்கிறார்களோ அவர்களைப் பற்றி பேசவும் அவர்களை மையமாக வைத்து அசல் பிரச்சனையை அடையாளம் காணவும் இவர்கள் தயாராக இல்லை.  மாறாக ஒன்று அல்லது இரண்டு  சதவிகிதம் தவறிப் போகும் முஸ்லிம் ஓட்டுகளை இவர்கள் குறிவைத்து  முஸ்லீம்களை குறைகூறி வருகின்றனர்.

சகோதரன் யூடுயூப் சேனலுக்கு சகோ.ரிஸ்வான் அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *