கடந்த வாரம் டெல்லி பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டே சமூக வலைதளத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் கேரளாவில் இருந்து அதிகளவில் மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேருவதாகவும் இதற்கு காரணம் கேரளாவில் கல்லூரி பேராசிரியர்கள் திட்டமிட்டு அதிக மதிப்பெண் வழங்குவதாக அடிப்படை ஆதரமில்லாமல் குற்றச்சாட்டை குறிப்பிட்டு இது கேரளா தொடுக்கும் “Marks Jihad” அதாவது “ மதிப்பெண் ஜிஹாத்” என்ற அபத்தமான சொற்சொடர் பயன்படுதியுள்ளார். இது கேரளாவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இவர் ஆர்‌எஸ்‌எஸ் சார்புடைய பேராசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆவார். இது போன்ற வன்மம் நிறைந்த ஆசிரியரின் பிடியில் சிக்கும் மாணவர்களின் நிலை ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் முஸ்லிம்களை வன்மத்தோடு வசைபாடும் லவ் ஜிஹாத் தொடங்கி land ஜிஹாத்,யு‌பி‌எஸ்‌சி ஜிஹாத் என்று பல வகையான சொற்கள் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுவதை பல இடங்களில் காணமுடிகிறது. இவ்வாறு இஸ்லாம்/முஸ்லிம்கள் மீது வசைசொற்கள் உருவாக்கி பரப்புவதில் தங்களை இடதுசாரிகளாக, சனநாயக முற்போக்கு பேசுபவர்களாக கருதுபவர்களின் பங்கும் கணிசமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அலட்சியமும், அபாயமும்

இஸ்லாமிய/முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் இன்றைய நவீன ஐரோப்பாவில் நடைபெறுவது போல் வெறுமனே வலதுசாரி அரசியல் அணிசேர்க்கை அளவில் நடைபெற்று கொண்டிருக்கும் அரசியல் கருத்தோ, fringe elements என்று சொல்லப்படும் சொற்ப ஆதரவு பெற்ற சிறு குழு அரசியலாகவோ இல்லாமல் இங்கு இந்தியா முழுவதும் மதரீதியான பெரும் கலவரங்கள் நடந்து முடிந்து அதில் தொடர்புடையவர்கள் அதிகாரம் கைப்பற்றி பலம் பொருந்திய அரசியலில் இருந்து வெளிப்படும் பெரும்பான்மை அரசியல் ஆகும். இங்கு பிற்காலத்தில் நடக்க இருக்கும் வன்முறை வெறியாட்டங்கள் கற்பனை செய்து எச்சரிக்கை செய்யும் காலத்தில் இந்த பிரச்சாரம் நடைபெறவில்லை. ஏற்கனவே பல வன்முறை வெறியாட்டங்கள் கும்பல், கும்பல்களாக நடைபெற்று அதை முன்னின்று நடத்திய “இந்துந்துத்வ” நாஜி அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கையோ எடுக்காமல் மேலும் பலம் பெற்று தற்போது மீதி இருக்கும் இந்துத்துவ கருத்துகள் உடன் படாத எளிய பொது மக்களையும் தன் பக்கம் இழுத்து செல்லும் அபாய காலத்தில் நின்று பேசி கொண்டிருக்கிறோம் என்பதை அரசியல் கட்சிகள் உணர்வது எப்போது? இவர்களை தடுக்கும் யுக்தியாக என்ன தயார்படுத்தி வைத்துள்ளார்கள்?

வெறுப்பு கட்டமைப்பை கடந்து விடும் அரசியல் கட்சிகள்

Pegasus ஒட்டு கேட்பு விவாகரத்திற்கு நாடு முழுவதும் போராட்டம் செய்து நாடாளமன்றத்தை முடக்கிய எதிர் கட்சிகள், சமூக வலைதளத்தில் வன்முறையை நேரடி ஒளிபரப்பு செய்து டெல்லியில் அனைத்து பாதுகாப்பு வளையம் மீறி பள்ளி வாசல்கள் இடிக்க பெரும் ஆயுதங்களை கடத்தி சிறுவர்களை ஈடுபடுத்தி வன்முறை வெறியாட்டம் ஆடிய சங் பரிவார் அமைப்பினரை கைது செய்ய வலியுறத்தி எத்தனை’ போராட்டம் செய்தன?

, பாதிக்கபட்ட மக்களுக்கு நீதி பெற்று தர வக்கற்று தன் கையறு நிலை அரசியலை மறைக்க, பொத்தான் பொதுவாக “மதரீதியான அடிப்படையிலான அணி சேர்வதே” காரணம் என்று அடிமுட்டாள் வாதத்தை வாதிட்டு பாதிக்கபட்ட முஸ்லிம் மக்களையே குற்றவாளி கூண்டில் ஏற்றுவதை தான் எதிர்கட்சிகள் வாடிக்கையாக செய்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே சென்று சாதி இந்து பெரும்பான்மை கலாசாரத்தில் திளைத்து நாத்திக எண்ணத்தில் வாழும் மேட்டுக்குடிகள் “மதம்” தான் காரணம். மத அடையாளம் தூக்கி எரிந்தால் அல்லது வீட்டுக்குள் பூட்டி வைத்தல் போன்ற சீப்பை ஒழித்தால் திருமணத்தை நிறுத்தலாம் என்ற அதிமேதாவி கருத்தை திணிக்கின்றனர்.

இவர்கள் கூற்று படி இங்கு சங்பரிவார் அமைப்புகளின் வெறுப்பு வன்முறைகள், பலம் பெருகுவதும் “முஸ்லீம்கள் மதரீதியாக அணி சேருவதின் எதிர்வினையா?”.

சரி இவர்கள் விரும்பவது போன்று முஸ்லிம்கள் மத ரீதியான அணி திரளாமல்

சூழல் 1.

மத ரீதியாக இல்லாமல் அரசியல் அமைப்பாகவோ,சமூக அமைப்பாகவோ அணி சேர்ந்து மத உரிமைகள் கோராமல் பொருளாதார, சமூக மேம்பாடு ,வாழ்வாதார கோரிக்கைகள் மட்டும் வைத்து அரசியல் செய்தால் சங் பரிவார் அமைப்புகளின் வெறுப்பு அரசியல் இல்லாமல் போகுமா?

அல்லது சூழல் 2

இல்லை முஸ்லீம்கள் அனைவரும் மையவாத பெரும்பான்மை அடையாள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், சி‌பி‌எம், ஆம்ஆத்மீ போன்ற கட்சிகளில் மட்டும் இணைந்து கட்சியில் தன் இஸ்லாமிய அடையாளம்  துறந்து நாத்திக நபர்களாக கட்சிக்கு உழைத்து, இஸ்லாமிய மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையும் விட்டு கொடுத்து இருந்தால் சங் பரிவார் அமைப்புகளுக்கு மத வன்முறை செய்ய காரணம் இல்லாமல் போகுமா? உண்மையில் இந்த இரண்டாவது சூழலில் தான் வட மாநிலங்களில் இத்தனை ஆண்டுகள் ஆட்சிகள் இருந்தன. இந்த சூழலில் தான் ரத யாத்திரைகளும் , பெரும் கலவரங்களும் நடைபெற்றன.

சூழல் 3.

ஒரு வேலை இங்கு இஸ்லாம் மதமோ, முஸ்லிம்கள் மத அடையாளமோ எதுவுமே இல்லை. இங்கு சங்பரிவார் அமைப்புகள் கம்யூனிஸ்ட், நாத்திகர்களை வேட்டையாடுவது இல்லையா? திராவிட கருத்துக்கு எதிராக வெறுப்புபிரச்சாரங்கள், வன்முறையை எடுக்கும் கை விடுவார்களா? ஒற்றை’ கலாச்சாரம், தேசிய ஒற்றுமை என்று மொழி ரீதியாக பல்வேறு கும்பல் வன்முறை செய்தால் பாதிக்கபட்ட மக்கள் மொழி உரிமை கோரும் மக்களை மேலே முஸ்லிம்களுக்கு சொல்வது போன்று மொழியை கை விடுங்கள், மொழி ரீதியில் திரள வேண்டாம் என்று கோரிக்கை வைப்பீர்களா அல்லது வன்முறை வெறியை தூண்டி வளர்க்கும் நாஜி கும்பலை ஒடுக்க நடவடிக்கை எடுக்கபட வேண்டுமா?

இங்கு முஸ்லிம்கள் மத ரீதியாக அணி திறள்வதோ, மத கலாச்சார உரிமை கேட்பதோ, மத கலாச்சார அடிபடையில் வாழ்வதோ அல்லது மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதிதுவம் அல்லது சமூக வளர்ச்சி திட்டம் இதை செயல் படுத்த சமூக அமைப்பாகவோ, அரசியல் அமைப்பாகவோ திறள்வதில் எந்த மத வெறுப்பும் பரவுவதில்லை. மாறாக சட்ட ரீதியாக போராடவும், இந்திய சனநாயக தன்மையை வலு பெரும் பொருட்டு தான் முஸ்லிம் அரசியல் திரள் பெரிதும் பயன்படுகின்றன. மேலும் மத நல்லிணக்கம் பிரச்சாரம் செய்யாத,வலியுறுத்தாத இஸ்லாமிய இயக்கங்கள் உண்டா? இதே சங் பரிவார் அமைப்புகள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யுமா? மத நல்லிணக்க பிரச்சாரம் கட்டாயம் செய்தால் மத கலவரத்திற்காக மட்டும் தனியாக உருவாக்கிய பல்வேறு துணை அமைப்புகள் வெளிய தெரிய வரும்.

உடனே முஸ்லிம்கள் மத ரீதியாக வன்முறை செய்யவில்லையா என்ற கேள்வி வேண்டாம். அவ்வாறு செய்பவர்களின் மீது சட்ட நடவடிக்கை துரிதமாக செயல் படும். இங்கு தேவை சரியான சட்ட நடவடிக்கையே. சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் வெறுப்பு பிரச்சாரங்களும், பயங்கரவாத வன்முறைகளும் அதன் தொடக்கமான வெறுப்பு பிரசாரத்தில் இருந்தே கிள்ளி எரிய வேண்டும்.

இங்கே சாதிய அமைப்புகளோ, சங் பரிவார் அமைப்புகளோ இளைஞர்களை மூளை சலவை கையில் கொடூர ஆயுதங்கள் கொடுத்து தெருக்களில் புகுந்து, வீடுகளுக்குள் புகுந்து உடைமைகளை எரித்து , கண்ணில் படும் மக்களை கொடூரமாக கொன்று’ குவிப்பது பயங்கரவாத செயலே ஆகும்.  இது போன்ற திட்டமிட்டு நடத்திய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் என்று தான் கருது வேண்டும். இவ்வாறு பயங்கரவாதம் செய்யும் அமைப்புகளின் மேல் கடுமையான நடவடிக்கை வேண்டும்.  

இதனை வலியுறுத்தாமல் தங்களின் இஸ்லாமிய மத ஒவ்வாமை வெளிப்பாட்டில் வெறுமனே இரு’ தரப்பு மோதல்கள், முஸ்லிம்கள் அமைப்பாக அணி திரள கூடாது போன்ற கூற்றுகளை கூறுவது சங் பரிவார் அரசியலுக்கு ஒத்து ஊதும் அரசியலே ஆகும்.

எனவே எதிர்கட்சிகள் கையாண்டு வரும் அநீதி யுக்தியான முஸ்லிம் மத வெறுப்பு கட்டமைப்பு மௌனமாக கடந்து விட்டு பொருளாதார கேள்வி மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்தால் சங் பரிவார் அமைப்புகளின் பயங்கரவாதத்தை முறியடிக்கலாம் என்பது அநீதி அரசியல் ஆகும். இந்த அநீதி அரசியல் தான் எதிர்க்கட்சிகளை மேலும் வலு இலக்க செய்து சங் பரிவார அமைப்புகளை மேலும் பலம் பெற செய்கிறது. இன்னும் சொல்ல போனால் எதிர் கட்சிகள் இஸ்லாமிய வெறுப்பு பிரசார, வன்முறைகளை கடந்து செல்வதே வேலை வாய்பு,பொருளாதார வீழ்ச்சி, இட ஒதுக்கீடு என்று எத்தனை பொருளாதார வாழ்வாதார பிரச்சனைகள் வந்தாலும் மக்களிடைய எடுபடாமல் எதிர்க்கட்சிகளுக்கு வட மாநிலங்களில் தோல்வியை தருகிறது.  எனவே இங்கு எந்த விதமான அரசியலை முன்னெடுத்தாலும் சங் பரிவார் அமைப்புகளின் பயங்கர வாத செயல்களை கண்டிக்காமல், அவர்கள் செய்யும் அநீதிகள், இஸ்லாமிய வெறுப்பு பிரச்சார யுக்திகளை எதிர்த்து மக்களிடம் எச்சரிக்கை செய்யாமல் இருந்தால் மேலும் தோல்விகள் தான்’ எதிர் கட்சிகள் சந்திக்க நேரிடும் என்பதே நிதர்சனம்.

இது போன்ற இஸ்லாமிய வெறுப்பு பரப்புரைகள் வெறும் கருத்து சுதந்திரம் என்று கடந்துவிடாமல் இவை நன்கு திட்டமிட்டு பரப்பி ஜெர்மனிய நாஜி போன்ற சமூகத்தை தயார் படத்தும் சமூக சீரழிவாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியலை சுய பரிசோதனை செய்து இஸ்லாமிய மக்கள்,அரசியல் சமூக அமைப்புகளுடன் கை கோர்த்து சங் பரிவார நாஜி பயங்கரவாத அரசியலை முறியடித்து மக்களிடையே சமூக நல்லிணக்கம், வாழ்வியல் முன்னேற்றம் போன்ற சமூக நீதி அரசியல் செய்ய முற்பட வேண்டும்.

உமர் ஃபாரூக்

ஜவஹர்லால் நேரு பலகலைக்கழக ஆராய்ச்சி மாணவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *