சென்னைப் பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் போராட்டம் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்கிறது.

இதழியல் துறைத் தலைவரின் எச்சரிக்கை, மிரட்டல்கள, மாணவர்கள் மத்தியில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டி விட்டுப் பிளவுபடுத்தும் முயற்சிகள், தனக்கு ஆதரவாக உள்ள சந்தர்ப்பவாத சக்திகளை முடுக்கி விட்டு போராடும் மாணவர்களைக் கொச்சைப் படுத்திப் பேசச் செய்து மிரட்டுதல், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஊடகங்களில் தனது அத்து மீறல்களை நியாயப்படுத்துதல் எனப் பல வழிகளில் துறைத் தலைமை மிரட்டியும் போராட்டம் தொடர்கிறது..

தொடர்வது மட்டுமல்ல இன்று மேலும் ஆறேழு மாணவர்கள் கூடுதலாக இந்த அமர்வுப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தனது மிரட்டல்களால் பயந்து மாணவர்கள் பின்வாங்குவார்கள் என நினைத்த துறைத் தலைமை இன்று போராட்டத்தில் புதிதாய்ப் பங்குபெற்ற மாணவர்களைத் தனித் தனியே அழைத்து மிரட்டியுள்ளது.

போராடும் மாணவர்கள் இடதுசாரி அமைப்பிற்கு ஏதோ ஒரு காலத்தில் ஆதரவாக இருந்திருந்தால் அவர்களைத் தீவிரவாதிகள் என்பது, மத அடிப்படையில் பயங்கரவாதிகள் என்பது… எல்லாம் கவலை அளிக்கிறது.

பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்கள் தலையிட்டு நேர்மையான, நடுநிலையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்துப் போராடும் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். போராடும் மாணவர்கள் அத்தகைய நடுநிலையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

கல்வியாளர் பேரா. ப.சிவகுமார், மேநாள் கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவர்,

கவிஞர் மனுஷ்ய புத்திரன்,

பேரா. அ. மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமை அமைப்புக்களின் கூட்டமைப்புத் தலைவர்,

பேரா. மு.திருமாவளவன், மேநாள் அரசு கல்லூரி முதல்வர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *