மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்
எடுக்க முடியாத சதியில் இங்கே மக்கள்.

சமூக நீதியும் எறியும் தீயாய்
இங்கே அடித்தட்டு மக்களே அதற்கு தீனி.

சூரியனின் உதிப்பில் முதலாளிய கிரகணம் கூடியதால், இனி,இருளில் சேர்ந்திடும் குரல்களை
எங்கே முழங்கலாம்.

முதலாளித்துவ கர சேவையில்
இடிக்கப்படும் கட்டிடங்கள்
வாக்களித்த மனங்களின் திராவிட
பிம்பத்தை உடைத்தெறியும்..!

மயானங்களில் புதைக்கப்பட்ட எழும்புக்கூடுகள்
இந்துத்துவ திராவிடத்தை ஏற்றாலும்
சமாதிகளின் சாம்பல் துகளிலிருந்து
அடித்தட்டு மக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே
இருப்பார்கள்..!

சென்னை அரும்பாக்கம் மக்களின் இடம்பெயர்வு
எனும் சுரண்டலுக்கு  கண்ணீரால் தோய்ந்த எழுத்துக்களில்
கடுமையான கண்டனங்கள்..!

Faiz_Rahmani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *