அரபுக்களின் முட்டாள்தனமும் அறியாமையும் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியும் இணைந்து அரபு மண்ணின் மையத்தில் திணிக்கப்பட்ட நாடுதான் இஸ்ரேல். நாடின்றி நாடோடிகளாக திரிந்து பல்வேறு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஆளும் வர்க்கத்தால் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் யூதர்கள். அதனது அழுத்தமான வெளிப்பாடுதான் ஹிட்லரின் ஜெர்மனியில் அரங்கேறியது.

யூதர்கள் மீது கொடுமை செய்தவர்கள் ஐரோப்பியர்கள் அதாவது கிருத்தவர்கள். ஆனால், அக்கொடுமைகளுக்கு பின்னால் அவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் அபகரிக்கப்ட்டு அளிக்கப்ட்டதோ பாலஸ்தீன மண் அதாவது முஸ்லிம்களின் மண். எந்த மண்ணில் யூதர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டதோ, எந்த மனிதர்கள் அவர்களுக்கு அடைக்கலம் அளித்தார்களோ அந்த மண்ணிற்கும் மனிதர்களுக்கும் கடும் பகைவர்களாகவும் கொடுமைக்காரர்களாயும் மாறிவிட்டனர் யூதப் சியோனிசப் பயங்கரவாதிகள்.

தியோடர் ஹேசில் என்ற சியோனிச பயங்கரவாதியின் மனதில் உதித்த திட்டத்திற்கு பிரிட்டனின் பால்மர் கொடுத்த வடிவம்தான் இஸ்ரேல். இது ஏதோ யூதர்களுக்கான அடைக்கலம் என்ற ஒற்றை வட்டத்திற்குள் அடங்கிவிடும் விஷயம் அல்ல. நூற்றாண்டுகளாய் தொடர்ந்து கொண்டிருந்த பகைமையின் தொடர்ச்சி. முதலாம் உலகப்போரும் அதன் பின் நிகழ்ந்த நிகழ்வுகளும் இதன் திரைக்கதையின் அரங்கேற்றங்கள். ஆகவேதான் ஆங்கிலேயே தளபதி ஆலன் பாலஸ்தீனத்தை வெற்றி கொண்ட பின் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபியின் அடக்கஸ்தலத்தின் மீது  மிதித்துக் கொண்டு கூறினான், “இன்றுதான் சிலுவைப் போர் முடிவிற்கு வந்தது”. இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பின்னால் உள்ள வரலாற்றுச் சதிகளை அவனது வார்த்தைகள் உணர்த்தும்.

மத, பொருளாதார, அரசியல் சதிகள் இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பின்னால் உள்ளது. தியோடர் ஹேசில் அன்றைய உதுமானிய கலீபா சுல்தான் அப்துல் ஹமீதிடம் பாலஸ்தீனத்தில் இடம் விலைக்கு கேட்ட பொழுது அதை கலீபா தர மறுத்து விட்டார். அதற்குப் பின் உருவானதுதான் முதலாம் உலகப்போர்.  முதலாம் உலகப்போருக்கு பின் உதுமானிய கிலாபத்தும் வீழ்த்தப்பட்டது.. பின் முஸ்லிம் உலகை ஐரோப்பிய நாடுகள் கூறு போட்டு ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தின. பிரிட்டன் வசம் இருந்த பாலஸ்தீனத்தில் பால்மர் திட்டத்தின் படி  யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர். மெல்ல மெல்ல பல்வேறு யுக்திகளின் மூலமும் வன்முறை கொலை வெறியாட்டங்களின் மூலமும் பாலஸ்தீனர்கள் அகற்றப்பட்டனர். அன்றைக்கு பிரிட்டன், பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த சர்வதேச சபை (இன்றைக்கு வல்லாதிக்க நாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐநா  சபை போல) பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து அநீதி இழைத்தது. பாலஸ்தீன குடிமக்களுக்கு 44% நிலமும் வந்தேறிகளான யூத சியோனிச பயங்கரவாதிகளுக்கு 56% நிலமும் கட்டபஞ்சாயத்து தீர்ப்பளிக்கப்பட்டது. (இன்றைக்கு பாபரி மசூதி விஷயத்தில் இந்திய ஒன்றிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை போல) 

1948 மே 15 தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது இஸ்ரேல். அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலட்சணக்கான மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். 1947க்கும் 1949க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 7,50,000 பாலஸ்தீன முஸ்லிம்கள் தங்கள் மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். 80,000க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.  பாலஸ்தீன மண்ணில் அமெரிக்க – பிரிட்டன் சதியின் ஊடாக பாலஸ்தீன மண்ணில் ஊடுருவிய சியோனிச யூதப் பயங்கரவாதிகள் இன்று காசா, வெஸ்ட் பாங்கை தவிர பாலஸ்தீன மண்ணை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டனர்.இன்றைக்கு பாலஸ்தீனத்திற்கு சொந்தக்கார்கள் காசா என்ற திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.  இஸ்லாமிய உலகின் முதல் கிப்லாவும் மூன்றாம் புனிதப் பள்ளியுமான மஸ்ஜிதுல் அக்சா நிலை கொண்டுள்ள ஜெருசலத்தை தங்களது தலைநகரமாக தற்போது அறிவித்துள்ளது இஸ்ரேல். இதன் பொருள் இனி குத்ஸ் எங்களுக்கே சொந்தம். முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுதான். அரபுலக ஆட்சியாளர்களின் சுயநலமும் கையாலாகாத்தனமும்தான் இதற்கு மைய காரணம்.

ஐரோப்பாவில் மையம் கொண்ட தொழிற் புரட்சியை தொடர்ந்து  தங்களது தேவைகளுக்காக உலகின் பல்வேறு நாடுகளை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தன ஐரோப்பிய நாடுகள். இந்தியாவை இங்கிலாந்து ஆண்டதைப் போல. ஆனால் அங்கேயெல்லாம் அந்தந்த காலனி நாடுகள் அந்த நாடுகளாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் காலனியாதிக்க சக்திகளிடமிருந்து அந்த நாடுகள் விடுதலை  அடைந்த பிறகு அந்த நாடுகள் தங்களது சுயத்தோடு இயங்க ஆரம்பித்தன. முற்றிலுமாக காலனியாதிக்க சக்திகளிடமிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன. இறுதியாக ஹாங்காங் வரை அதுதான் வரலாறு.

ஆனால், பாலஸ்தீன், பயங்கரவாத இஸ்ரேல் நிலைபாட்டை பொருத்தமட்டில் முற்றிலும் மாறான ஒன்றாக உள்ளது. பாலஸ்தீனம் சியோனிச யூத பயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டதோடு மட்டுமின்றி அதற்குள்ளாக இஸ்ரேல் என்ற தனி நாட்டையும் உருவாக்கியுள்ளனர். அமெரிக்க உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளின்  ஒத்துழைப்போடு இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீன மண்ணில் தங்கள் ஆக்கிரமிப்புகளை அதிகரித்து வருகிறது. அக்கிரமங்களை அரங்கேற்றி வருகிறது.  பெண்கள், குழந்தைகள் என குடிமக்களை கொன்று குவித்து வருகிறது.

சியோனிச யூத பயங்கரவாதிகளின் ஆக்கிரமிக்கு எதிராக தங்கள் மண்ணை மீட்டெடுப்பதற்கான விடுதலைப் போராட்ட இயக்கமாக ஷஹீது அஹமது யாசினால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ஹமாஸ். அரபுலக சர்வாதிகாரிகள் தங்கள்  சுயநலத்திற்காக இஸ்ரேலுடன், சியோனிச யூத பயங்கரவாதிகளுடன் கள்ள உறவை தொடர்கின்ற போதும், பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தங்கள் மண்ணை காப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது ஹமாஸ் விடுதலை இயக்கம். 

ஆனால் இன்றைக்கு ஆக்கிரமிப்பாளர்களான யூத சியோனிச பயங்கரவாதிகளை நாடாகவும் தங்கள் மண்ணை மீட்பதற்காக போராடிக் கொண்டிருப்பவர்களை தீவிரவாதிகளாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இன்னும் சிலர் நடுநிலை பேணுகிறோம் என்ற பேரில் ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலையும் சுதந்திரப் போராளிகளான ஹமாஸையும் சமன்படுத்துகின்றனர்.

இந்தியாவை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களும் அவர்களை விரட்டியடித்து சுதந்திரம் பெற போராடிய இந்தியச் சுதந்திரப் போராட்ட போராளிகளும் எப்படி சமமாவார்கள்?வீட்டை ஆக்கிரமித்தவனும் வீட்டை பறிகொடுத்தவனும் எப்படி சமமாக முடியும்? ஆயுதம் வழி பதிலடி கொடுப்பதனால் எப்படி போராளிக்குழு தீவிரவாதிகளாக முடியும்?

அமைதி வழியில் போராட்டம் நடத்திய மகாத்மா காந்தியியும் அவரை பின் தொடர்ந்தவர்களும் ஆயுதம் தாங்கிப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசும் அவரை பின் தொடர்ந்தவர்களும் சுதந்திரப் போராட்ட போராளிகளே. ஆகவேதான் மகாத்மா காந்தி தெளிவாக அறிவித்தார். “பாலஸ்தீன மண் பாலஸ்தீன் மக்களுக்கே.”

யூத சியோனிச பயங்கரவாதிகளின் மரபணுவை கொண்டுள்ள இந்திய பாசிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ், பாஜக வகையறாக்களை தவிர அனைத்து இந்திய  ஆட்சியாளர்களும் ஒருபோதும் இஸ்ரேலை அங்கீகரித்தது கிடையாது.

இன்றைக்கு இஸ்ரேலை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரும் இராணுவ வலிமைமிக்க தேசம் எனவும் அவர்களை ஹமாஸால் வீழ்த்தவே முடியாது எனவும் அரபுலக அடிமை அரசுகளும் சில சிங்கிடிகளும் கூறிவருகின்றனர். ஆனால் கள யதார்த்தம் வேறாக உள்ளது. ஹமாஸை முற்றிலுமாக முடக்கிவிட்டோம் என்று கொக்கரித்தவர்கள்தான் இன்றைக்கு ஹமாஸ் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி இஸ்ரேலை தாக்கியுள்ளது என அலறுகின்றனர்.  இஸ்ரேலின் இரும்புத்திரைகளை தகர்த்தெறிந்து கொண்டு இஸ்ரேலின் மண்ணை தாக்கியுள்ளது ஷஹீத் யஹ்யா அய்யாஷ் வடிவமைத்த கஸ்ஸாமின் ராக்கெட்டுகள். அமெரிக்க உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளின் ஆதரவும் சுற்றியுள்ள அடிமை அரபு மன்னர்களின் கள்ள உறவுகளும் இல்லையென்றால் என்றைக்கோ இஸ்ரேல் துடைத்தெரியப்பட்டிருக்கும். 1948ல் எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போரில் தீரத்துடன் போரிட்ட இக்வானிகளுக்கு முன்னால் புற முதுகு காட்டி ஓடியது இஸ்ரேல். எங்கே இஸ்ரேல் தோற்றுவிடுமோ என்று அஞ்சிய அமெரிக்க தனது அடிமை எகிப்தின் மன்னர் பாரூக்கின் மூலம் இக்வானுகளுக்கு தடை விதித்தது. அன்றைக்கு இக்வான்களின் தலைவர் ஷஹீத் ஹசனுல் பன்னா சொன்னார். “மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள். இஸ்ரேலை விரட்டியடிக்கிறோம்”  என்றார்.  ஆனால் அதற்கு செவி கொடுக்காமல் இக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்திற்கு தடை விதித்து இஸ்ரேலை காப்பாற்றினான் பாரூக். இன்றைக்கும் இஸ்ரேலை காப்பாற்றும் பொருட்டு அமெரிக்க உத்தரவின்படி மூர்சியை வீழ்த்திய அல்சீசி, சவூதி சர்வாதிகார அரசு மற்றும் சலபிச கூட்டணியைப் போல.

இஸ்ரேலிய வானில் ஹமாஸ் ஏவிவிடும் ஏவுகணையின் சத்தத்தை கேட்டவுடன் பதுங்கு குழியைத் தேடி ஓடும்  கோழைகளுக்கும் இஸ்ரேலிய டாங்கிகளை கற்களுடன் தீரத்துடன் எதிர்கொள்ளும் போராளிகளுக்கும் இடையேயான யுத்தம் இது. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் அடிமை அரபுலக சர்வாதிகாரிகளும் விலகி நின்றால் இஸ்ரேல் அடையாளமற்ற நாடாக மாறிவிடும். 

ஆகவேதான் ஹமாஸின் நிறுவனத்தலைவர் ஷஹீத் அஹமது யாசின் கூறினார் “2025க்கு பின் இஸ்ரேல் இருக்காது”

ஆனால்  அமரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த யூதரான ஹென்றி கிசின்ஜர் கூறினார் “2022க்குப் பின் இஸ்ரேல் இருக்காது”.

தாங்கள் நிச்சயம் வீழ்த்தப்படுவோம் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட இஸ்ரேல்  அதற்குள்ளாக பாலஸ்தீனத்தை முழுமையாக விழுங்கிவிடலாம் என்று முனைப்பு காட்டுகிறது.

இஸ்ரேல் என்ன முனைந்தாலும் வல்லாதிக்கச் சக்திகள் ஆதரித்தாலும் அரபுலக அடிமை சர்வாதிகாரிகள் கள்ள உறவு வைத்தாலும் இஸ்ரேல் வீழும். வீழ்த்தப்படும்.

காரணம், இஸ்ரேலின் வீழ்ச்சி தீர்மானிக்கப்பட்டது இங்கல்ல. அங்கே வானத்தில். 

  • கே எஸ் அப்துர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *