சர்வதேச முஸ்லீம் அறிஞர்கள் கூட்டமைப்பு (International Union of Muslim Scholars) வெளியிட்டுள்ள அறிக்கை : ஹிஜாப் விவகாரம் குறித்து நாம் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் :

தற்போது, இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் முஸ்லீம் பெண்களுக்கான ஹிஜாப் பிரச்சனை உட்பட முஸ்லீம் உம்மத்தின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகளின் முயற்சி மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லீமும் இயன்றளவில் இதேப்போன்ற பங்களிப்பை செய்தாக வேண்டும்.

என்னுடைய குறைந்த பட்ச அனுபவத்தில் கூறுவது என்னவென்றால் ;

திடமான செயல்ரீதியான அமைப்புகளின் மூலமே உரிமைகள் நிலைநாட்டப்படும். அவை அரசியல் அமைப்புகளாக இருக்கட்டும் அல்லது பொருளாதார, மத, மனித உரிமை, சமூக நீதி அமைப்புகளாக இருக்கட்டும்.

ஏனெனில், ஒரு சமூகத்தின் கூறுகளுக்குள் அமைப்புகளே செயல்படுகின்றன. அந்த சமூகத்தில் ஏற்படுகின்ற ஆபத்துகள், நெருக்கடிகள் மற்றும் சவால்களை, முன்கூட்டியே அறிந்துக்கொண்டு, திசைக்காட்டியாக அமைப்புகளே அச்சமூகத்தை வழிநடத்தி செல்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற சிக்கல்களை உள்வாங்கிக்கொண்டு தீர்மானிக்கின்ற ஆற்றலும் அமைப்புகளுக்கே உண்டு.  ஊடகங்களை பொறுத்தவரை, அந்த அமைப்புகளின் செயல்பாடுகளை படம்பிடித்து மக்களிடம் காட்டுவதேயாகும்.

உண்மையில், ஊடகத்தினால், செயல்ரீதியான, சட்டபூர்வமான முயற்சியின்றி தன்னிச்சையாக செயல்பட முடியாது!  சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் வெளி ஊடக அறிக்கைகளை பொறுத்தவரை ; அவை நல்லது. அவசியமானது. ஆனால் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆதரவு பெரும் விஷயத்திலும், அது (strategic) மூலோபாயமானதாக இருக்காது.

இந்தியாவில், ஹிந்துமக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இன்னும் ஒரே நாட்டில் வாழ்கின்ற பல மதத்தவர்களோடு முஸ்லீம்கள் இந்திய மக்கள் தொகையில், கால்வாசி இருக்கிறார்கள்.

முஸ்லீம்களை வழிடந்தும் அதிகமான அளவில் செயல்ரீதியான மற்றும் கூ‌ட்டுறவு ரீதியான அமைப்புகளை முஸ்லீம்கள் தங்களுக்காக உருவாக்காத வரையில், எதனாலும் தங்களுக்கான உரிமையை அவர்களால் பெற்றுக்கொள்ள இயலாது. உதாரணமாக, எங்கோ இருக்கும் அல் ஜீரியா நாட்டின் ஊடகவியலாளர் ஒருவரின் கண்டன அறிக்கையோ, துருக்கியிலிருக்கும் ஒரு அமைப்பின் அனுதாபமோ, இன்னும் எகிப்து நாட்டின் ஃபத்வாவோ குறிப்பிட்ட சில பயனைத் தவிர வேறெதனையும் பெற்றுத்தராது.

இந்தியாவின் இஸ்லாமிய அமைப்புகள் : இந்தியாவிற்கு வெளியில் வாழும் முஸ்லீம்களிடம், தங்களை எவ்வாறு ஆதரிக்க வேண்டும்? எந்த அளவில் ஆதரிக்க வேண்டும்? என்று கோருவது இந்திய இஸ்லாமிய அமைப்புகள் மீது கடமை. அது சரியான வழிமுறையில் இருக்கும் நிலையில், அந்த ஆதரவை நடைமுறைப்படுத்த வேண்டும். தெளிவான ஆலோசனையில்லாத எவ்வித ஆதரவும் மேற்கொண்டு சிக்கலாக்குமே  தவிர தீர்வுகாணாது. கடைசியில் எதிர் முடிவுகளை அளித்துவிடும்.

நான் ஊடகத்துறையின் செயல்பாட்டுக்கும் அதன் முயற்சிக்கும் எதிரானவன் இல்லை. ஒரு முஸ்லீம் தன் உணர்வுகளை தன் முஸ்லீம் சகோதரருக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பக்கம் நிறுத்துவது கடமை அழகு. ஆனால் ஒவ்வொரு கடமைக்கும் வழிமுறை உள்ளது, அது நன்மையை கொண்டுவர வேண்டும். குழப்பத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். நமக்கான ஆதரவை வலுப்படுத்த தகுந்த கல்வியறிவோடு பணி செய்ய வேண்டும். அளவு, காலம், முறை அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நமக்கான ஆதரவை உருவாக்குவதற்கு கல்வியோடு சேர்ந்த கலப்பற்றத் தன்மையை கையில் எடுக்க வேண்டும். அபோது தான் ஒளிக்கு மேல் ஒளியாக நமது இணைப்புகள் ஒளிவீச துவங்கும்.

– சஅத் அல் குபைசி

சர்வதேச முஸ்லீம் அறிஞர்கள் கூட்டமைப்பின் உருப்பினர்.

தமிழில்,

மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *