ராமநவமி கொண்டாட்டம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் பல மாநிலங்களில் வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளது. இதனைக் குறித்துப் பேசியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‘அமைதியைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் இந்தியா அவ்வப்பொழுது தடியை ஏந்துவதும் அவசியம். இந்த உலகம் அதிகாரத்தின் மொழியை மட்டுமே புரிந்துகொள்ளும்’ என்றார்.கடந்த ஏப் 13ம் தேதி ஹரித்வாரில் நடந்த ஆன்மீக மாநாட்டில் பேசிய பகவத், சுவாமி விவேகானந்தர் மகரிஷி ஆரோ பிந்தோவின் கனவு 10,15 வருடங்களில் உணரப்படும் என்றும் கூறினார்.

‘நீங்கள் 20,25 வருடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், பத்து வருடங்களில் அவர்கள் கனவு கண்ட இந்தியாவைக் காண்போம். எந்த விஷயமும் ஒரு கணத்தில் சாத்தியப்படாது. நான் அதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. அது மக்களோடு உள்ளது. அவர்களே அதைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் தயாராகும்போது ஒவ்வொருவரின் மனநிலையும் மாறுகிறது. உன்னால் முடியும் என நாங்கள் அவர்களை தயார்ப்படுத்துகிறோம். நாங்கள் ஒரு முன்னுதாரணமாகப் பயமின்றி நடைபோடுகிறோம். நாங்கள் அகிம்சையைப் பற்றிப் பேசுவோம். ஆனால், தடியோடு நடப்போம். அது வலிமையான ஒன்று. நாங்கள் அர்ப்பணிப்பின்றியும் யாரையும் பகைத்துக்கொண்டும் இல்லை. இந்த உலகம் அதிகாரத்தை மட்டுமே உணரும் எனும்போது, நாங்கள் அதிகாரம் படைத்தவர்கள் என்பதால் அதை வெளிப்படுத்துகிறோம். இந்தியாவின் வளர்ச்சி மதத்தின் வளர்ச்சியின்றி வேறு இல்லை. சனாதன தர்மமே இந்து ராஷ்டிரா. இதன் வழியில் பயணிக்கையில் சிலர் நீக்கப்படுவார்கள் அல்லது முடிவை அடைவார்கள்’ என்று வன்முறையை தூண்டுகிறார் பகவத்.

The Wire.in

தமிழில் – அஜ்மீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *