ஹிஜாப் பெண்களுக்கான கண்ணியத்தை சேர்க்கிறது – ஹிஜாப் வழக்கின் செவ்வாய்க்கிழமை விசாரணையில் வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ்.

ஹிஜாப் கண்ணியத்தை வழங்குகின்றது மற்றும் அதை அணியும் பெண்ணை புனித படுத்துகிறது அதாவது ஒரு இந்து பெண் தலையை மறைப்பது போல் தான் இதுவும் இதுவும் மிகப் புனிதமானது என்று ஹிஜாப் தடையை எதிர்த்த வழக்கு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடந்த அமர்வில் கூறியுள்ளார்.

நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அதன்சு துளியா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரர்களின் தரப்பு வாதங்களை கேட்டனர்.

அதில் வழக்கறிஞர் தேவ் “ஹிஜாப் முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தை வழங்குகிறது மேலும் இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 மற்றும் 21 கீழ் பாதுகாக்கப்பட்ட உரிமை என்றும் அது எவ்விதமான பொது ஒழுங்கையும் பாதிக்காது மற்றும் பிற மதத்தினரின் நம்பிக்கைகளையும் எந்தவகையிலும் பாதிக்காது.  ஹிஜாப் அணிந்து பணி பெண்களால் யாருடைய அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மற்றும்  புனிதத்திற்கும் எவ்வித பாதகமும் இல்லை என்றும் வாதிட்டார். மேலும் பொது ஒழுங்கில் ஒரே ஒரு அம்சம் மட்டுமேயுள்ளது, அதுதான் நான் வாதிடுவது” என்று அவர் கூறியுள்ளார். LiveLaw-ன் படி.

பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர், அதனால் யாருடைய அமைப்பைச் சட்டத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது? மற்ற மாணவர்களுடையதா? பள்ளியுடையதா? என்று சபரிமாலாவின் தீர்ப்பு மற்றும் ஹிஜாப் வழக்கையும் வேறுபடுத்திக் காட்டி வாதாடினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பெஞ்ச் மனுதாரர்கள் புனித தளங்களுக்குள் நுழையும் அடிப்படை உரிமையே இல்லாதவர்கள் என்று கூறியது.

அதற்கு தேவ் தற்போது அனைவரும் புனித தலங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என பதிலளித்தார்.

தொடர்ந்து அவர் சீருடை என்பதே பெரும்பான்மையான சமூகங்களுக்கு “தேவையற்ற சுமை” என வாதிட்டார். மேலும் “பல மக்கள் சீருடைகளை வாங்கக்கூட வசதி இல்லாமல் இருக்கின்றனர்” என்றுள்ளார்.

அமர்வானது  சீருடை என்பது ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்கிறது மற்றும் வசதியானவர்கள் மற்றும் ஏழைகளை நம்மால் சீருடை மூலம் பிரித்து அறிய முடியாது என்று கூறியது.

மனுதாரர்களின் தரப்பு வழக்கறிஞர் தேவ் கர்நாடக அரசு தொடர்ந்து சிறுபான்மை சமூகத்தை தொடர்ச்சியாக குறி வைத்து செயல்படுகின்றது என்று கூறினார். அதற்கு அரசின் சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ” நாம் ஒன்றும் பொது மேடையில் இல்லை எனவே தயவு செய்து மனுக்களில் இருப்பதை மட்டும் பேசுவோம்” என்று கூறினார்.

ஏன் 75 ஆண்டுகளுக்கு பின்பு திடீரென அரசு இதுபோன்ற தடையை கொண்டு வர வேண்டும் என்று சிறுபான்மை சமூகத்தினர் ஒடுக்கப்படுவதை சுட்டி காட்டினார். “இந்த சுற்றறிக்கையானது நீலத்திலிருந்து வந்த ஆணியை போல் வந்துள்ளது சரத்து 25 தெள்ளத் தெளிவாக உள்ளது மற்றும் அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களும் இதை உறுதி செய்கின்றன”. என்று தன் வாதத்தில் குறிப்பிட்டார்.

தமிழில் – ஹபிபுர் ரஹ்மான்

சகோதரன் ஆசிரியர் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *