எனது இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சம்பாதித்த பணம் வெறும் காகித துண்டு என்று அறிவிக்கப்பட்ட நாள் இன்று. என்னிடம் உணவு பொருட்கள் வாங்க பணம் இருந்தும் நான் பட்டினி கிடந்த நாள் இன்று. தனியார் மருத்துவமனையில் என்னிடம் பணம் இருந்தும் என் மனைவிக்கு பிரசவம் பார்க்க மறுத்து நாள் இன்று. 500 ரூபாய் நோட்டுகளை 450 ரூபாய் என்று விற்க்கபட்ட நாள் இன்று ஆம் நவம்பர் 8,2016 DEMONSTATION என்ற பண மதிப்பிழக்கம் அறிவிக்கப்பட்ட நாள் இன்று

கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் அதிகபடியாக அளவு கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் இருப்பதாகவும் அதை மீட்பதற்காகவும் முறையாக திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டிய ஒரு திட்டத்தை. அவசரமாக சரியான முன்னேற்பாடுகள் எதும் இல்லாமல் மக்களுக்கு இந்த திட்டம் குறித்த முறையாக அறிவிப்பு இல்லாமல் இரவில் அறிவித்து அமல் படுத்தியது அரசாங்கம். அப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு  ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது ஆனால் இதன் பலன்களாக  ஏதும் இல்லை ஆனால் இந்த திட்டத்தின் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகளை இன்றளவும் பொருளாதார ரீதியாகவும் உளரிதியாகவும் உணர முடிகிறது.

சாமானிய மக்கள் நெடு நேரமாக மிக நீளமான வரிசையில் வங்கியின் வாசலில் ஒரேயொரு 500 ரூபாய்யை மாற்ற அவஸ்தைபடும் பொழுது ஒரு பிரமுகர் வீட்டில் கட்டு கட்டாக 2000  ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்தது இன்றளவும் மர்மமாகவே உள்ளது. இந்த விடயமே இந்த திட்டம் யாருக்கு நன்மைகளை கட்டு கட்டாக கொடுத்தது என்று விளங்குகிறது. ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெளிநாடுகளில் பதுக்கி வைத்த கருப்பு பணத்தை முழுவதும் மீட்டாற்களா அல்லது அதில் ஒரு பகுதியாவது மீட்பார்களா? இந்த திட்டத்தின் மூலம் நாடு அடைந்த பலன் அல்லது பலவீனம் தான் என்ன என்ற கேள்விக்காது பதில் தருவார்களா?.

எத்தனை லட்சம் மக்களின் கண்ணீர், கதறல்கள், நீண்ட வரிசைகள், ஏமாற்றங்கள், குழப்பங்கள் இதெல்லாம் எதற்காக என்று இன்னும் விளங்கவில்லை. 500 ரூபாய்கே சில்லறை இல்லாத போது ஏதற்காக 2000 ரூபாய் நோட்டுகள் எதற்கும் விடை கிடைக்கவில்லை. எதற்காக இந்த திட்டம் இதனால் அரசுக்கு கிடைத்த லாபம் என்ன மக்கள் அடைந்த பலன் என்ன அனைத்திலும் குழப்பம் தான் நிலவுகிறது.

இப்போதுலாம் 2000 ரூபாய் நோட்டை பார்த்தாலே அந்த நாள்களில் நாம் பட்ட கஷ்டங்கள் தான் நினைவுக்கு வருகிறது இந்த திட்டம் பணம் எப்போது வேண்டுமானாலும் காகித துண்டுகளாக மாறலாம் என்ற அச்சத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

சாகுல் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *