மாலிக்பத்ரி, இவர் பிராய்ட் மற்றும் ஸ்கின்னர் போன்ற உளவியாளர்களின்   கோட்பாடுகளை விமர்சித்தல் மற்றும் அதனை மதிப்பிடும் சவாலை ஏற்றுக்கொண்டு,, அவற்றை மதிப்பீடுசெய்து இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவர்களுடன் ஈடுபடுவதற்கான ஒரு சீரான வழியை வழங்கினார்

அறிவு மற்றும் அறிவு உருவாக்கம் ஆகியவற்றின் இஸ்லாமிய மயமாக்கல் இயக்கத்தில் ஒரு உயர்ந்த நபரின் மறைவைக் கேட்பது மிகவும் மனதை கலக்கமடையச் செய்கிறது, உளவியல் துறையில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு மிகப்பெரிய ஆளுமை பேராசிரியர் மாலிக்பத்ரி. இவர் ஒரு புகழ்பெற்ற உளவியலாளர் ஆவார். இவர் பல உளவியலாளர்களை குறிப்பாக முஸ்லீம் உளவியலாளர்களுக்கு அறிவூட்டியுள்ளார். நவீன உளவியல் பிராய்ட் மற்றும் ஸ்கின்னரின் கோட்பாடுகளை கண்மூடித்தனமாகப் பின் பற்றியபோது, ​​முஸ்லீம் உளவியலாளரும் இதற்கு விதிவிலக்கல்ல, இதற்கு இவர் ஆதிக்கம் செலுத்தும் போக்குகளை விமர்சிக்கவும், அவற்றை மதிப்பீடு செய்யவும், ஈடுபாடு மற்றும் பணிநீக்கம் செய்வதற்கான சமநிலை வழியை வழங்கும் முயற்சிகளை தன் கடமையாக ஏற்றுக்கொண்டார். இஸ்லாமிய உலவியலின்  கவனத்தை ஈர்த்து, ஆரம்ப படைப்புகளை உருவாக்கிய முதல் நபர் இவர் என்பதால், இவர் நவீன இஸ்லாமிய உளவியலின் தந்தை என்று கருதப்படுகிறார்.

1975ஆம் ஆண்டில் இஸ்லாமிய சமூக அறிவியல் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் “பல்லியின்துளையில் முஸ்லீம் உளவியலாளர்” என்ற ஹதீஸிலிருந்து வரையப்பட்ட வெளிப்பாட்டுடன் முஸ்லீம் உளவியலாளரின் நிலையை அவர் சுட்டிக்காட்டினார். பின்னர் அதே யோசனை குறித்த விரிவான பணி ஒரு புத்தக வடிவத்தில் “1979 இல் முஸ்லிம் உளவியலாளர்களின் குழப்பம்”என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதில் அவர் முஸ்லீம் உளவியலாளரை மேற்கத்திய சிந்தனையை கண்மூடித்தனமாக பின்பற்ற கூடாது என்று எச்சரித்தார், அதாவது குர்ஆன் மற்றும் சுன்னா. அவர் என்னை எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், என்னைப் போன்ற அனைத்து இளம் உளவியலாளர்களும் குழி மற்றும் பல்லியின் துளையிலிருந்து வெளியே வரவும், மயக்கத்தின் கட்டத்திலிருந்து நல்லிணக்கமாகவும், இறுதியாக விடுதலையின் ஒரு கட்டமாகவும், அங்கு நான் மேற்கத்திய கோட்பாடுகளுடன் இஸ்லாத்தின் போதனைகளை சமரசம் செய்யக்கூடாது ஆனால் மனிதனின் இஸ்லாமிய முன்னுதாரணத்திலிருந்து ஒரு மாற்று சிந்தனையை வழங்குகிறது என்று கூறினார். சிந்தனை மற்றும் ஆவியின் இந்த விடுதலையானது அவரது பிற்காலபடைப்புகள்அனைத்திற்கும் மையக் கருத்தாக இருந்தது.

அவை

 1.கண்டெம்ப்ளஷன் : ஒரு இஸ்லாமிய உளவியல் ஆய்வு (2002)

             Contemplation: An Islamic  Psychospiritual Study  (2002)

2. உளவியலின் இஸ்லாமியமயமாக்கல்: அதன் “ஏன்”, அதன் “என்ன”, அதன் “எப்படி”மற்றும் “யார்” (2009)

The Islamization of Psychology: Its “Why”, its “What”, its “how” and its “Who” (2009)

3. அபுசயீத் அல்-பால்கியின் ஆத்மாவின் உயிர் வாழ்வு: ஒன்பதாம் நூற்றாண்டு மருத்துவரின் அறிவாற்றல் நடத்தைசிகிச்சை (2013)

Abu Zayd Al-Balkhi’s Sustenance of the Soul: The Cognitive Behavior Therapy of a Ninth Century Physician (2013)

4. உளவியல் கலாச்சார மற்றும் இஸ்லாமிய தழுவல் (2016)

Cultural and Islamic Adaptation of Psychology (2016)

அவரது பெரும்பாலான பணிகள் இஸ்லாமியத்தின் சிகிச்சை முன்னோக்கில் நடந்து கொண்டிருந்தன, இது இஸ்லாமிய உளவியல் சிகிச்சையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும், ஆனால் அவர் தனது படைப்பாளனின்  இறுதி அழைப்பை ஏற்றுக்கொண்டார். (இன்னாலில்லா).

மாலிக்பத்ரி சூடானில் பிறந்து பி.ஏ. (உயர்ந்தஸ்தானம்) மற்றும் பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவரது முதுநிலை. மேலும் தனது பி.எச்.டி. இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தின்  மிடில்செக்ஸ் மருத்துவமனை மருத்துவப் பள்ளியின் உளவியல் துறையின் மருத்துவ உளவியல் பற்றிய முதுகலை  சான்றிதழ் பெற்றுள்ளார். அவர் பிரிட்டிஷ் உளவியல் சங்கத்தின் சக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ஒரு பட்டய உளவியலாளர் ஆவார். தனது துறையில் அவர் செய்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக அஹ்பத்பல் கலைக்கழகத்தில் இருந்து அவருக்கு மதிப்பிற்குரிய டி.எஸ்சி விருதையும் . மற்றும் கல்வித் திறனுக்கான மிக உயர்ந்த விருதான ஷாஹித் சுபைர் என்ற விருதை பதக்கத்துடன் பெற்றார்.

கார்ட்டோம் மற்றும் ஜூபா பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பத்ரி பாகுல் டிஸ்ஒப்எடுகேஷன் மற்றும் டீன் ஆக பணியாற்றினார். மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிக நிறுவனத்தின் டீன் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் டீனாகவும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் பத்ரி மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில்  மூத்த மருத்துவ உளவியலாளராகவும் பணியாற்றினார், மேலும் சவூதி அரேபியாவின் ரியாத் பல்கலைக்கழகத்தின் உளவியல் சிகிச்சை மையத்தின் நிறுவனர் ஆவார்.

மலேசியாவில் உள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் வெளிப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் மனித அறிவியல் பீடத்தில் இப்னிகல்தூனின் மதிப்புமிக்க தலைவராக இருந்தார். அவரைப் பொறுத்தவரை அவரது முக்கிய தாக்கங்கள் மவுலானா அபுல் அஹ்லா மௌதுதி , சஹீத் சையித் குதுப் மற்றும் அவரது சகோதரர் மற்றும் சகோதரி மரியம் ஜமீலா ஆகியோர், சமூக அறிவியலின் இஸ்லாமிய மயமாக்கலின் நவீன இயக்கத்தின் தந்தை ஆவார்கள் . இவர் உளவியல் மற்றும் கல்வியில் படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.

  இவரது படைப்புகள் இஸ்லாமிய உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் பின்வருவன அடங்கும்: உளவியல், மருத்துவ உளவியல், அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, இஸ்லாமிய உளவியல், சமூக உளவியல் மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள்.

முஸ்லீம் மன ஆரோக்கியத்தின் 12 வது வருடாந்திர மாநாட்டிற்கான அவரது தொடக்கக் கருத்துக்களில் நான் கலந்து கொண்டபோது, ​​அவரைப் பற்றிய எனது முதல் அபிப்ராயம், கண்ணியமான தொனி மற்றும் தாழ்மையான இருப்பைக் கொண்ட ஒரு நபர் என்பதுதான். இந்ததுறையில் அவரது பணிவு, ஞானம் மற்றும் பார்வை ஆகியவற்றால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், வரவிருக்கும் ஆண்டில் அவரை நேரில் சந்திக்க நான் உறுதியாக இருந்தேன், ஆனால் நான் மிகவும் தாமதமாக இருந்துவிட்டேன் என்று வருத்தப்படுகிறேன்.

அவரது புத்தகங்கள் குறிப்பாக முஸ்லீம் உளவியலாளர்களின் குழப்பம் எனக்கு ஒரு வாழ்க்கை மாறும் வாசிப்பாக மாறியது. இது மனோவியல் மற்றும் நடத்தை அணுகுமுறைகளின் வனாந்தரத்தில் எனக்கு வெளிச்சத்தை அளித்தது.

ஒருங்கிணைப்பதற்கான சவாலான பணியில் பணியாற்றுவதற்கும் உளவியலின் இஸ்லாமிய முன்னோக்கில் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் எனக்கு உத்வேகத்தை கொடுத்தது.

அல்லாஹ் நம் அனைவருக்கும், நம்மிடம் அவர் விட்டுசென்றுள்ள பணியை தொடர்ந்து மேற்கொள்ளவும், இஸ்லாமிய உளவியல் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நபராகவும் வளர உதவி புரிவானாக.

டாக்டர் அலிஸி அலியாஸ் அவருக்கு ஒரு அழகான துவா செய்தார்.

அல்லாஹ்வே. எங்கள் அன்பான பேராசிரியர் மாலிக் பத்ரியின் ஆத்மா, நடத்தை,அறிவாற்றல் மற்றும் உணர்ச்சியை ஏற்றுக்கொள்வாயாக. நரக நெருப்பைக் காக்கும் மலாக்காட்மாலிக் போலவே அவர் இந்த இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் மதச்சார்பற்ற உளவியலின் “நரக நெருப்பிலிருந்து” எங்களைக்  காப்பாற்றினார், பிராய்டின் மனோபகுப்பாய்வு, வாட்சோனியன் மற்றும் ஸ்கின்னெரியன் நடத்தை, ரோஜீரிய மனிதநேயம், உடலியல் முன்னோக்கு மற்றும் பரிணாம முன்னோக்கு ஆகியவற்றின் “நரக நெருப்பில்” பின்வாங்கப்படுவதிலிருந்து எங்களைக்  காப்பாற்றினார். அவர் உண்மையில் எங்களுக்கு  ஒரு “பாதுகாப்பு தேவதை”போன்றவர். அல்லாஹ்வே, உன்னிடத்தில் அவருக்கு உயர்ந்த இருப்பிடத்தை வழங்குவாயாக. ”

ஆமீன்

எழுத்தாளர் : Shujauddin Fahad inamdar

தமிழில் : மோனிஷா மைக்கில் ராஜ்

நன்றி : தி கம்பேனியன்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *