ஒரு இந்திய மாணவன் உக்ரைனில் ரஷ்சியாவால் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இது அப்பட்டமான இந்திய அரசின் வெளியுறவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது.

போர் பதட்டம் அதிகரித்த பொழுதே மற்ற நாடுகளின் மாணவர்களுக்கு அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் எச்சரித்து, அவர்களுடைய பல்கலைக்கழகங்களுக்கு அறிவித்து தன்னுடைய நாட்டிற்கு அழைத்தபொழுது இந்தியா மட்டும் அமைதி காத்ததை அங்குள்ள மாணவர்கள் பலர் மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்ததை இந்த நாட்டு மக்கள் அனைவரும் கேட்டோம்.

மேலும் இந்திய தூதரகத்துக்கு பலமுறை அழைத்தும் எந்த பதிலும் இல்லாததையும் மாணவர்கள் கண்ணீரோடு பதிவு செய்தனர்.

ஆனால் முட்டாள் சங்கிகளோ நவீன் பிரைவேட் ஜெட்டிற்க்காக காத்துக்கொண்டிருந்தாரா? இல்லை பிரதமர் வந்து தனியே அவரை அழைக்க வேண்டுமா? என்றெல்லாம் சமூக வலைதளங்களில் வழக்கம்போல உளறிக்கொண்டு இருக்கின்றனர். உணவிற்காக வரிசையில் நின்ற ஒரு இந்திய மாணவனின் மரணத்தால் இந்தியாவே கவலையில் ஆழ்ந்திருக்கும்போது இவர்கள் அதற்கு காரணம் மோடி கிடையாது என்று முட்டு கொடுக்கும் பதிவுகளை எழுதி அதற்கு ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தான் சில நாட்களுக்கு முன்னர் புதினிடம் மோடி பேசி விட்டார், இந்தியர்களுக்கு எதுவும் ஆகாது என்று புதின் கூறிவிட்டார் என பெருமைப்பேசித் திரிந்தனர். மோடியின் பிம்பம் அத்தனையும் உடைகிறது. அதனைப் பொருக்கி எடுத்து சேர்க்க BJP IT Wing தங்களை வைத்து படாதபாடுபடுகிறார்கள் என அப்பட்டமாக தெரிகிறது.

ஆனால் இந்திய மக்களும், உலகமும் உங்களுடைய கையாலாகாதத் தனத்தை மிகத் தெளிவாக உணர்ந்துள்ளனர். போரின் காலங்களில் கூட அவதூறு பரப்பி அரசியல் செய்யும் முட்டா சங்கிகளையும் BJP குண்டர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *