இஸ்லாம் அறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். அது அறிவு, ஆராய்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும், அதனைக் கற்பதனதும் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் மிக விரிவாக விளக்குகிறது. அல்குர்ஆனை நோக்கும் போது இஸ்லாம் அறிவுக்குக் சிந்தனைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இந்த வாசிப்பு தினத்தில் உலக திருவேதமான குர்ஆனில் கல்வி பற்றி கூறப்பட்டிருக்கும் விபரங்களை கூற விழைகிறேன். உங்கள் அனைவருக்கும் இதன் மூலம் குர்ஆன் தமிழாக்கத்தை ஒருமுறை படித்துப்பார்க்க வேண்டுகோள் வைக்கின்றேன்.

அல்-குர்ஆன் கல்வித்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம்

அறிவு எனும் பொருள்படும் ‘இல்ம்’ என்ற பதம் அல்குர்ஆனில் 80 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இப்பதத்தில் இருந்து பிறந்த சொற்களோ அல்குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு எனும் கருத்தைக் கொடுக்கும் அல்பாப் எனும் சொல் அல் குர்ஆனில் 16 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொருளைத் தரும் அந்நுஹா என்ற சொல் 2 தடவைகள் வந்துள்ளன. அல் குர்ஆனில் பகுத்தறிவு என்ற பொருளைக் கொடுக்கின்ற அல்-அக்ல் என்ற வினையடியிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை 49 ஆகும். சிந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படும் அல்-பிக்ர் என்ற சொல்லிலிருந்து பிறந்த 18 சொற்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அல்-பிக்ஹ் (விளக்கம்) என்ற பதத்திலிருந்து பிறந்த 21 சொற்களும் காணப்படுகின்றன. ‘அல்ஹிக்மா’ ஞானம் என்ற பதம் 20 தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் என்னும் பொருள்படும் அல்- புர்ஹான் என்ற சொல் 07 தடவைகளும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் ‘ஆராய்தல்’ ‘நோக்குதல்’ ‘சிந்தித்தல்’ போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்குர்ஆனில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்துக்கும் மேலாக, முதன் முதலாக இறங்கிய (இக்ராஹ் ரப்பி பிஸ்மிக்க) அல்-குர்ஆன் வசனங்களே அறிவைப் பற்றியும் அறிவின் அவசியத்தைப் பற்றியும், அதன் கிளைகளாக திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோள் என்பனபற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை போன்ற ஒன்றிலிருந்நு படைத்தான். நீர் ஓதும்.
உமது இறைவன் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
(96: 1-5)

இவ்வசனங்களைத் தொடர்ந்து இறங்கிய வசனங்களும் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளதைக் காணலாம்

நூன் எனும் எழுதுகோளலின் மீதும் அதனைக் கொண்டு எழுதுபவை மீதும் சத்தியமாக. (68: 1)

ஆராயுமாறும் சிந்திக்குமாறும் மனிதனைத் தூண்டுகின்ற சுமார் 35 வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன.

  அவற்றின் கனிகளை நோக்குவீர்களாக! அவை பூத்துக் காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் உற்று நோக்குவீர்களாக. விசுவாசிகளுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. (6:99)

கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு தூண்டும் சுமார் 50 வசனங்களை குர்ஆனில் காண முடியும்.

  நபியே நீர் கூறும், பூமியில் சுற்றித் திரிந்து (ஆரம்பத்தில்) சிருஷ்டிகளை எவ்வாறு  படைத்தான் என்பதைப் பாருங்கள். (29:9)

அல்குர்ஆனில் பிரபஞ்சம் தொடர்பாகவும் அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் பேசுகின்ற சுமார் 750 வசனங்கள் காணப்படுகின்றன.

குர்ஆனில்,

*பிரபஞ்சத்தின் படைப்பு

 • பின்னாளில் வரவிருக்கும் தீர்க்கதரிசனங்கள்
  *இயற்கை விஞ்ஞானம்
  *கடல் பிரயாணம்
  *காற்றின் திசை-வேகம்
  *அணுவின் ஆற்றல்
  *வானவியல்
  *தாவரவியல்
  *விலங்கியல்
  *விவசாயம்
  *சமூகவியல்
  *மானிடவியல்
  *மனோதத்துவம்
  *மருத்துவம்
  *உடலியல்
  *வரலாறு
  *புவியியல்
  *பொருளாதாரம்
  *ஜீவகாருண்யம்
  *பெண்ணடித்தனங்களில் இருந்து விடுபடல்
  *ஆண்களுக்கான அறிவுரைகள்
  *குழந்தைகள் பராமரிப்பு
  *முதியோருக்கான சேவைகள்
  *குடும்பவியல்….

போன்ற அனைத்து துறைகளுடன் தொடர்பான பல உண்மைகளும், அவற்றோடு தொடர்பான பல அடிப்படைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை அத்தியாய வாரியாக நமக்கு வகைப்படுத்த இயலாது காரணம் குர்ஆன் என்பது மாநபியவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது அருளி இறக்கப்பட்டதாகும். முழுவதுமாக குர்ஆனை படித்தாலொழிய முழுமையாக அறிய முடியாது.

அல்குர்ஆன் அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகின்றது.

“அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே” (35:28)

மேலும், அல்குர்ஆன் அறியாமையையும் மடமையையும் நரகத்தின் பாதையென வர்ணிக்கின்றது.

“நிச்சயமாக மனிதர்களிலும் ஜின்களிலும் அதிகமானோரை நாம் நரகத்திற்காகவே படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன் எனினும் அவற்றைக் கொண்டு அவர்கள் உணரமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன. எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்குக் காதுகள் உண்டு, அவற்றைக்கொண்டு கேட்கமாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். அன்றியும், அவற்றைவிட மோசமானவர்கள்”. (7;179)

இஸ்லாம் கல்வித்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம்

பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் ‘கிதாபுல் இல்ம்’ என்ற பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும்.

அறிவுடன் தொடர்பான பல ஹதீஸ்கள் வேறு பல அத்தியாயங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன.

கிதாபுத் திப்பி (மருத்துவம் பற்றியது) எனும் அத்தியாயம்

நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹல் புஹாரியில் மாத்திரம் கிதாபுல் இல்ம் என்ற அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன.

அறிவின் சிறப்பைக் கூறும் ஹதீஸ்கள்

ஓருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால் அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலேசாக்கிக் கொடுக்கிறான். (முஸ்லிம்)

மேலும் அறிஞர்கள் நபிமாரின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளிக் காசுகளையோ வாரிசுச் சொத்துக்களாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசுச் சொத்துக்களாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையே ஆகும். அதனைப் பெற்றுக்கொண்டவர் பெரும் பாக்கியத்தையே அடைந்து கொண்டவராவார். (அபூ தாவூத், அஹ்மத்)

அழகிய வாசிப்பின் மூலம் பயனுள்ள கல்வியை கற்று பிறருக்கு அதனை அறிவாக போதிப்பதே வாசிப்பின் லட்சியம் ஆகும். வாசிப்பின் வாயிலாக தேவையற்ற விஷயங்களை வாசிப்பதை தவிர்த்து நமக்கும் பிறருக்கும் பயனளிக்கும் விதமான வாசிப்பினை நமதாக்குவோம்.

இஸ்லாத்தின் பார்வையில் கல்வி – பாகம்: 2

அறிவு பற்றி அல்குர்ஆன்

”பின்னர் அவற்றை (அல்லாஹ்) வானவர்கள் முன் வைத்து ‘நீங்கள் கூறுவது உண்மையாயின் இவற்றின் பெயர்களை நீங்கள் தெரிவியுங்கள்’ எனக் கூறினான். அவர்கள் (அதற்கு) ‘நீ மிகத் தூய்மையானவன்; நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எதை பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே நன்கறிந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்’ எனக் கூறினார்கள்.”
(1:32)

ஆதம் (அலை) அவர்கள் மலக்குகளை விட அறிவில் உயர்ந்தவர்களாக விளங்கிய காரணத்தினாலேயே அன்னாருக்கு ‘ஸுஜூத்’ செய்யுமாறு அல்லாஹ் அவர்களை பணித்தான். ஸூரத்துல் பகராவில் தொடர்ந்து வரும் வசனம் இவ்வுண்மையை விளக்குகின்றது:

”மேலும் நாம் மலக்குகளிடம், ‘ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள் எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள்…” (1:34)

நபி மூஸா (அலை) அவர்கள் ‘உலுல் அஸ்ம்’ என்றழைக்கப்படும் ஆறு பெரும் திட உறுதி பூண்ட இறைத்தூதர்களில் ஒருவராவார். அத்தகைய உயர் அந்தஸ்தைப் பெற்றிருந்த அவர்கள் அறிவு ஞானத்தைப் பெற்றிருந்த ஓர் இறையடியாரை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கண்டுபிடித்து பொறுமையுடன் அவரிடம் அறிவைப் பெற்ற கதையை அல்-குர்ஆனின் அல்-கஹ்ப் அத்தியாயம் குறிப்பிடுகின்றது.

இனி நாம் அறிவின் முக்கியத்துவம் பற்றி நேரடியாகவே அல்-குர்ஆன் எப்படி பேசுகின்றது என்பதை கீழே கவனிப்போம்.

அறிவு எனும் பொருள்படும் ‘இல்ம்’ என்ற பதம் அல்குர்ஆனில் என்பது இடங்களில் இடம் பெற்றுள்ளது. இப்பதத்தில் இருந்து பிறந்த சொற்களோ அல்குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு எனும் கருத்தைக் கொடுக்கும் அல்-அல்பாப் எனும் சொல் அல்குர்ஆனில் பதினாறு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொருளைத் தரும் அந்நுஹா என்ற சொல் இரு தடவைகள் வந்துள்ளன. அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள

பகுத்தறிவு என்ற பொருளைக் கொடுக்கின்ற அல்-அக்ல் என்ற வினையடியிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை நாற்பத்தொன்பது ஆகும். சிந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படும் அல்-ஃபிக்ர் என்ற சொல்லிலிருந்து பிறந்த பதினெட்டுச் சொற்களும் அதில் இடம்பெற்றுள்ளன் அல்-ஃபிக்ஹ் (விளக்கம்) என்ற பதத்திலிருந்து பிறந்த இருபத்தொரு சொற்களும் காணப்படுகின்றன. ‘அல்ஹிக்மா’ ஞானம் என்ற பதம் இருபது தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் என்னும் பொருள்படும் அல்-புர்ஹான் என்ற சொல் ஏழு தடவைகளும் அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் ‘ஆராய்தல்’, ‘நோக்குதல்’, ‘சிந்தித்தல்’ போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்-குர்ஆனில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்துக்கும் மேலாக, முதன் முதலாக இறங்கிய அல்குர்ஆனின் வசனங்களே அறிவைப் பற்றியும் அறிவின் அடிப்படைகளாகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.

”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (96:5)

இவ்வசனங்களைத் தொடர்ந்து இறங்கிய வசனங்களும் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.

”நூன்” எழுதுகோலின் மீதும் அதனைக் கொண்டு அவர்கள் எழுதுபவை மீதும் சத்தியமாக” (68:1)

ஆராயுமாறும் சிந்திக்கும்படியும் மனிதர்களைத் தூண்டுகின்ற சுமார் 35 வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணத்திற்குக் கீழ்வரும் வசனத்தைப் படியுங்கள்.

”அவற்றின் கனிகளை நோக்குவீர்களாக. அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் உற்று நோக்குவீர்களாக. விசுவாசம் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன” (6:99)

கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு தூண்டும் சுமார் 50 வசனங்களை அல்குர்ஆனில் காண முடிகின்றது. இத்தகைய வசனங்களுக்கு உதாரணமாகப் பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.

(நபியே) நீர் கூறும், ”பூமியில் சுற்றித் திரிந்து (ஆரம்பத்தில்) சிருஷ்டிகளை எவ்வாறு படைத்தான் என்பதைப் பாருங்கள்”

(29:9)

அல்குர்ஆனில் பிரபஞ்சம் தொடர்பாகவும் அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் பேசுகின்ற சுமார் 750 வசனங்கள் காணப்படுகின்றன.

அல்குர்ஆன் அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகின்றது.

”அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே.” (35:28 மேலும், அல்குர்ஆன் அறியாமையையும் மடமையையும் நரகத்தின் பாதையென வர்ணிக்கின்றது.

எனவே கல்வி கற்றவரும், கல்லாதவரும் சமமாக மாட்டார், இறைவனின் முன் இருவருக்கும் அவரவர் தேடிய கல்வியின் தரத்தையும் அளவையும் பொருத்து நற்கூலியுண்டு என்பதனை உணர்ந்து நாமும் கற்றுணர்ந்து நமது குழந்தைகளையும் கற்றறிந்த பண்பாளர்களாக உருவாக்குவோம்.

நமது ஊர் பெருமக்களும், நம் முன்னோர்களும் அரும்பாடுபட்டு நமக்காக இப்பெரும் கல்வி நிறுவனத்தை உருவாக்கித்தந்த கையோடு் யாவருக்கும் கல்வி எனும் உன்னத எண்ணத்தோடு நம்மோடு சேர்ந்து நமது சுற்றத்தாரும்

பயிலும் வகையில் இப்பள்ளியை நிர்மாணித்துள்ளனர். அதன் பயனறிந்து அனைவரும் உயர்கல்வி கற்று பிறருக்கு பயன் தரும் சமுதாயமாக உருவெடுப்போம்.

ரோஸி நஸ்ரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *