ஹிஜாப் வழக்கில் இரட்டை தீர்ப்பு: நீதிபதி துளியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், நீதிபதி குப்தா ஹிஜாப் தடையை ஆதரித்தும் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

உடுப்பியில் முன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் மாணவிகள் வகுப்பறைகளில் ஹிஜாப் அணியும் உரிமையைக் கோரி தொடர்ந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் மார்ச் 15 அன்று தள்ளுபடி செய்த தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை வியாழக்கிழமையன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

நீதிபதி ஹேமந்த் குப்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹிஜாப் ஒன்றும் இஸ்லாத்தின் அடிப்படை கடமை இல்லை என்று கூறி அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் முக்காடு அணிய தடை விதித்து  தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட 26 மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார்.

நீதிபதி சுதர்ன்ஷூ துளியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து மதத்தின் அடிப்படை கடமையா எனும் முழே கருத்தை குறித்த சர்ச்சையே தேவையற்றது என தன்னுடைய கருத்திழுள்ள மாறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் “உயர்நீதிமன்றம் தவறான பாதையை தேர்ந்தெடுத்து விட்டது. இது சரத்து 14 மற்றும் 19 – இன் கீழ் இறுதியான தேர்ந்தெடுக்கும் உரிமை” என்று கூறியுள்ளார்.

நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் சுதன் ஷூ துளியா ஆகியோரின் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு கடந்த செப்டம்பர் 26 அன்று, 23 மனுதாரர்கள் – அவர்களின் வழக்கறிஞர்கள் மற்றும் கர்நாடக பிஜேபி அரசு ஆகிய அனைத்து தரப்பினரையும் விசாரித்த பிறகு தங்களின் தீர்ப்பை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்திருந்தது.

கர்நாடகாவின் இந்துத்துவ கட்சி நடத்தும் அரசு, கல்வி நிறுவனங்களில் பரிந்துரைக்கப்பட்ட பள்ளிச் சீருடைகளை தான் அணிய வேண்டும் என்று ஆணையிடக்கூடிய உரிமை தனக்குள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.

மாணவிகள் மற்றும் மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ், அடிப்படை உரிமைகள், தான் எந்த உடையை அணிய வேண்டும் என்பதற்கான சுதந்திரம் மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரம் போன்றவைகளை வகுப்பறைக்குள் குறைக்க முடியாது என்று வாதிட்டார்.

மாணவிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தேவ்நாத் காமத், முனைவர் ராஜிவ் தவான் மற்றும் துஷ்யந்த் தேவ் ஆகியோர் கர்நாடக மாநில அரசு சில மாணவர்கள் தங்களுடைய பள்ளி சீருடை உடன் ஹிஜாபை அணிந்து வருவதால் வகுப்பறைகளின் பொது ஒழுங்கு ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை பாதிக்கப்பட்டதாக கூறுவதை நிறுவுவதற்கான ஒரு துண்டு ஆதாரத்தை கூட வழங்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

கர்நாடக அரசின் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையானது தங்களுக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கக்கூடிய மத சுதந்திரத்தை பறிப்பதாக கூறி முஸ்லிம் மாணவர்கள், கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதிலும் இருக்கும் முஸ்லிம் மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் முஸ்லிம்களின் அடையாளங்கள் மற்றும் நடைமுறைகளின் மீது தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதல்களானது. நாட்டில் வசிக்கும் 200 மில்லியன் முஸ்லிம்களின் மீது பெரும்பான்மையின் மதிப்புகளை திணிக்கும் இந்துத்துவாவின் மாபெரும் நிரலின் ஒரு பகுதியே என்று ஆணித்தனமாக கூறுகின்றனர்.

இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து கர்நாடகாவின் ஹிஜாபின் மீதான தடையை எதிர்த்து போராடிய முஸ்லிம் மாணவர்கள், முஸ்லிம் தலைவர்கள், மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் போன்றவை இந்தத் தீர்ப்பு முஸ்லீம் மாணவர்கள் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது மற்றும் ஹிஜாப் அணியும் மாணவர்களின் அடிப்படை உரிமைகளை பறித்துள்ளது  என்று கூறுகின்றனர்.

தமிழில் – ஹபீப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *