“நம்பத் தகுந்த சான்றுகள் இல்லை” என்று கூறி டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் வாலிபரை விடுவித்த நீதிமன்றம்

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் முஸ்லிம் இளைஞர் நூர் முகமதுவிற்கு எதிராக டெல்லி காவல்துறையினரால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் டெல்லி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

“குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக  எந்த விதமான வெளிப்படையான ஆதாரங்களும் இல்லை மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்காக இருக்கும் நான்கு சாட்சியங்களுமே நிலையானதாக இல்லை” என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக லைவ் லா இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் செசன்ஸ் நீதிபதி புலத்ஷ்யா பிரம்சலா நூற் முகம்மதின் மீது 1860,

இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 147, 148, 427, 436 மற்றும் 149 ஆகிய பிரிவுகளில் போடப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்துமே விடுவித்துள்ளார்.

இந்த முஸ்லிம் இளைஞர் கஜூரி காஸ் எனும் காவல் நிலையத்தில் சீமா அரோரா எனும் பெண், தன்னுடைய கடை கலவரத்தின் போது கொளுத்தப்பட்டதாக எழுத்து வழியே பதிவு செய்த வழக்கின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். மேலும் காவல் துறையினர் மூலம் அவரின் மீது இன்னும் இரண்டு புகார்களும் பெறப்பட்டு எஃப்.ஐ.ஆர் – இல் இணைக்கப்பட்டு இருந்தது.

இவ் விஷயம் தொடர்பான விசாரணையில் காவலர்கள் ரோத்தேஷ் மற்றும் விஷால் அரோரா நூர் முகம்மதை “வன்முறை காரர்களில்” ஒருவராக கருதி கைது செய்துள்ளனர்.

தமிழில் – ஹபிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *