மீரட்: பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்திற்கு எதிராக கடந்த ஜூன் 10 அன்று நடந்த போராட்டத்தில் “வன்முறையில் ஈடுபட்டதாக” கூறி கைது செய்யப்பட்ட எட்டு இளைஞர்களை சகாரன்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் இளைஞர்களின் நீதிமன்ற காவலை ரத்து செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த “தவறான விசாரணை” வழக்கை விசாரணை செய்வதற்காக விசாரணை அதிகாரி (IO) வை நியமித்துள்ளது.

நீதிமன்றம் “இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை இது தவறான முறையில் எத்தகைய நம்பகமான ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில் இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். CrPC பிரிவு 169 (ஆதாரங்களில் குறைபாடுள்ள நிலையில் குற்றவாளிகளை விடுதலை செய்யலாம்) எனும் சட்டத்தின் கீழ் ஒன்று (IO) விசாரணை அதிகாரி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய , அல்லது இந்த சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு ஆட்சேபனை இல்லை என்று ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க முடியாது” என்று கூறியுள்ளது.

இளைஞர்கள் கைது செய்யப்பட்ட உடனேயே அவர்களின் மீது கலவரம் கொலை முயற்சி மற்றும் இதர பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஜூன் பத்தாம் தேதி நடந்த வன்முறையில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று அந்த இளைஞர்கள் கூறிய நிலையில் அவர்கள் காவல் துறையினரால் காவல் நிலையத்தினுள் தாக்கப்பட்ட வீடியோ வைரலானது. ஆனாலும் காவல்துறையினர் அது சஹாரன்பூரில் நடந்தது இல்லை என்று கூறி வந்தனர்.

பாபர் வாசிம் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்ததற்கு பிறகுதான் போலீசார் பின்வாங்கினர். உதாரணமாக முகமது ஆசிப் (குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களில் ஒருவர்) இவர் ஜூன் 10 அன்று மாலை 5 மணி அளவில் இருசக்கர வாகன காட்சியகத்தினால் இருந்தார் என்பதற்கான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வழங்கியிறுக்கிறோம். மாறாக அவர் 3.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களின் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிற்கவில்லை மேலும் நாங்கள் எங்களின் கருத்தை நிரூபிப்பதற்காக NHRC (தேசிய மனித உரிமைகள் ஆணையம்) தில் ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்துள்ளோம்”. என்று கூறுகிறார்.

கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களின் பிள்ளைகள் வீடு திரும்ப அதை அடுத்து பெருமூச்சு விட்டனர். ஆஸ்மா காத்தூன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது அலி (18) ன் தாயார் தான் மிகவும் ஆனந்தமாக இருப்பதாகவும் மேலும் “என் மகன் திரும்ப வந்து விட்டான் எனக்கு அதுவே போதும் இதற்காகத்தான் இரவு பகலாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்” என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இன்னும் ஆசிப் போல் பல‌ போலியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் சிறை வாசத்தில் இருந்து மீளவில்லை.

ஹபிபுர் ரஹ்மான்

சகோதரன் ஆசிரியர் குழு

Source – ToI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *