“50 நாள் அவகாசம் கொடுங்கள் நான் செய்தது தவறு என்றால் என்னை உயிரோடு கொலுத்தி விடுங்கள்” என்று சினிமா பாணியில் அறைகூவல் விட்டார் நமது நாட்டின் பிரதமர்.  கடந்த 2016 நவம்பர் 16ஆம் தேதி, எந்தவித முன்னறிவிப்புமின்றி பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பண ஒழிப்பு, தீவிரவாதத்திற்கு வரும் பணம் தடுப்பு, கள்ளச்சந்தை பணத்தை திரும்பப் பெறுவது என்ற இலக்குகளை எட்டவே இந்த துணிச்சல் மிகுந்த அறிவிப்பு என அறைகூவல் விடுத்தார் பிரதமர் மோடி.

சிறுக சிறுக சேமித்த சேமிப்புகள் செல்லா காசாகிவிடக் கூடாது என்ற அச்சத்தினால்,  நெடுநேரம் காத்திருந்து, கால் கடுக்க வங்கிகளில் நின்ற சோகம் ஏழைகளும் நடுத்தர வர்கத்தினரையும் பெரிதும் வாட்டியது.

 வாரத்திற்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் பணம் எடுக்க முடியும் எனவும், உடனடியாக பணம் தேவையெனில், 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்து ஒரு ஆளுக்கு 4000 ரூபாய் என்ற வகையில் புதிய நோட்டுகளை  பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது இவை இந்தியாவில் மாபெரும் பொது துறையான ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை பெரிதும் சிதைத்தது. இவைகள் ரிசர்வ் வங்கியின் உறுப்பினர்களின் மூலம் கொள்கை முடிவாக எடுக்கப்படாமல் அவர்களின் ஒப்புதலின்றி சுயேட்சியாக எடுக்கப்பட்ட முடிவாகவும்  ஜனநாயகத்தின் பின்னடைவாகவும் கருதப்படுகிறது.

திடீர் பணமதிப்பிழப்பு நாட்டு மக்களை சொல்லனா துயரத்தை ஏற்படுத்தியது.  2000 ரூபாய் புழக்கம் பெருமளவில் வர்த்தகத்தை பாதித்தது, பல்லாயிரக்கணக்கான மக்களின் வியாபாரத்தை வீதிக்கு தள்ளியது. 2000 ரூபாயை வங்கிகளிலிருந்து எடுக்க பெரும் போராட்டம் ஒரு புறமிருக்க 500கோடி செலவில் தனது மகளின் திருமணத்தை நடத்திக் கொடிந்தார்கள் ஜனர்தன  ரேட்டி போன்ற பெருமுதலாளிகள். இந்த சமபவங்கள் மூலம் நாட்டின் பெரும் சொத்துக்களை கொண்டுள்ள பெரு முதலாளிகள் இயல்பு வாழ்க்கையிலேயே இருந்ததையும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வங்கிகளில் செத்து மடிந்ததையும் காண முடிந்தது.

2015-16 வெறும் 115 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2016-17 237 கோடியாக மாறியுள்ளது பணமதிப்பிழப்பே முதன்மையான காரணமாக உள்ளது. இதன் மூலம் சிறு குறு வியாபாரம் வஞ்சிக்கப்பட்டு பெருமுதலாளிகளை வளர்த்ததுவே மோடி அரசின் பணமதிப்பின் சாதனையாக காணப்படுகிறது.

இப்ராஹிம் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *