பீகார் ஒரிசா போன்ற மாநிலங்களில் மக்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லாததுதான் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது என்ற வாதத்தின் உண்மை நிலை என்ன?

இங்கு எப்படி முஸ்லிம்கள் தான் பாஜகவின் வெற்றிக்கு காரணம் என கூறி தப்பித்துக் கொள்கிறார்கள் அதேபோன்றுதான் பீகார் ஒரிசா போன்ற மாநிலங்களில் கல்வி கற்காத மக்கள்தான் பாஜகவின் வெற்றிக்கு காரணம் எனக்கூறி மேல்தட்டு மக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அமர வைத்ததில் அங்கு உள்ள உயர் சாதி இந்துக்களாக சொல்லப்படக்கூடிய பிராமணர்கள் மற்றும் சத்ரியற்களின்  ஓட்டால்தான் அவர் இன்றைய தினம் ஆட்சி கட்டிலில் அமர்ந்து உள்ளார். கல்வி இல்லாதது தான் பாஜகவின் வெற்றிக்கு காரணம் எனக்கூறி அடித்தட்டு மக்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்றனர். கல்வியறிவு பெறுவதால் மட்டுமே பாஜகவை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முடியும் என இவர்கள் கூறுவது சிறுபிள்ளைத்தனமான வாதமாகும். இவ்வாறு கூறுவதன் வாயிலாக பாஜகவின் பலத்தை அதன் வெற்றியை மிகவும் லேசாக இவர்கள் கணக்கிடுகிறார்கள். பிஜேபி ஒரு முட்டாள் கட்சி படிக்காதவர்கள் மட்டுமே அங்கு இருப்பார்கள் என்று கூறுவது அரசியல் தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வாரங்களாக தவிர மற்ற எதுவும் இல்லை. படிக்காததால் தான் மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்று கூறி இந்துத்துவத்தை அதன் கொள்கையை மிகவும் லேசாக கணக்கிடுவது என்பது மிகவும் ஆபத்தானது. இந்தியா முழுவதும் பரவி வரும் ஒரு மிகப்பெரும் கட்சியை இவ்வளவு லேசாக எதிர் போடுவது இவர்களின் பலவீனத்தை அறியாமையை காட்டுகிறது. அவருடைய எதிரி அவர்களை இல்லாமல் ஆக்குவதற்கான வழிவகைகளை இவர்களை காட்டிக் கொடுக்கும் வழிகள் தான் இவை அனைத்தும்.

5 மாநில தேர்தல் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?

பொதுவெளியில் முஸ்லிம்களின் அடையாளங்களை கலாச்சாரங்களை அவர்களது பண்பாடுகளை விட்டுவிட்டு வெளியே வரும்படியான அழுத்தங்கள் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கட்சிகளுக்கு அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பான்மை வாதம் அதிகமாக இருப்பதால் இத்தகைய அழுத்தங்கள் முஸ்லிம்கள் மீது அதிகமாக இருக்கிறது. அவர்கள் தங்களுக்குள்ளாக உரையாடுவதற்கு கூட இத்தகைய அழுத்தங்கள் தடையாக இருந்து வருகிறது. இது சம்பந்தமாக ஒரு நீண்ட உரையாடலை ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தங்களுடன் அடையாளங்களுடன் வெளியில் செல்வது தன்னுடைய நம்பிக்கைகளை கொள்கைகளை முன்வைப்பது என அனைத்தையும் இவர்கள் பிரச்சினைக்குரிய ஒன்றாகவே ஆகி வருகிறார்கள்.

இத்தகைய இத்தகைய அழுத்தங்களுக்கு எல்லா முஸ்லிம்களும் அரசியல் கட்சிகளும் அடிபணியாமல் தங்களுடைய கொள்கைகளை அடையாளங்களை பொதுவெளியில் மிகவும் தைரியமாக முன்வைக்கவேண்டும். தங்களுடைய நிறுவனங்கள் பண்பாடுகள் என அனைத்தையும் சமூக வெளியில் முன்வைத்து ஒரு தீர்க்கமான அரசியலை முஸ்லிம் கட்சிகள் முன்னெடுக்கவேண்டும்.

ஒரு சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்று எதுவும் இங்கே கிடையாது . எந்த ஒரு கட்சியை எடுத்துவைத்து பேசினாலும் அதற்குப் பின்பாக ஏதோ ஒரு மதமோ இனமோ சாதியும் நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறது. சமாஜ்வாதி கட்சி யாதவர்களின் கட்சியாக இருக்கிறது, அகாலி தளம் ஒரு சீக்கியர்களின் கட்சியாக இருக்கிறது. இவ்வாறாக ஒவ்வொரு கட்சிக்கும் பின்னால் உள்ள மக்களை குறித்து நம்மால் பேச முடியும். இங்கு மற்ற கட்சிகளுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையே உள்ள பெரும் வேறுபாடு அந்த கட்சிகள் அனைத்தையும் ஒரு புது கட்சியாக பார்க்கக்கூடிய மக்கள் முஸ்லிம்கள் கட்சிகளை மட்டும் ஒரே ஒரு மத கட்சியாக சுருக்குவது என்பது முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை மன நிலையை காட்டுகிறது.

இரண்டு நிலைகளை முஸ்லிம் சமூகம் முன்னெடுக்கவேண்டும் முதலாவது பல நிறுவனங்கள் மற்றும் வைத்து மால் போன்ற இன் சுச் லைஃப் மிகவும் வலுவானதாக மாற்ற வேண்டும்.

இரண்டாவதாக தனது கொள்கைகளை பண்பாடுகளை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காது பொது சமூகத்தில் வைத்து முன்னேற வேண்டிய உணர்வை முஸ்லிம் சமூகம் பெற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இவ்வாறு மற்ற கட்சிகள் பொது தளத்தில் இயங்க முடிகிறதோ அதே போன்று ஒரு முஸ்லிம் கட்சிகளும் நிச்சயமாக பொதுத்தளத்தில் இயங்க முடியும்

எழுத்தாளர் ரிஸ்வான் அவர்கள் சகோதரன் யூடுயூப் சேனலுக்கு அளித்த நேர்காணலின் இரண்டாவது பகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *