கர்நாடகாவில் உள்ள பெல்லேர் பகுதியில் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள்ளின் உறுப்பினர்கள் தாக்கியதில் காயமடைந்த 18 வயது முஸ்லிம் இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட இளைஞரின் பெயர் மசூத்.

கலிஞ்ஜா கிராமத்திலுள்ள விஷ்ணு நகரா பகுதியில் கடந்த ஜூலை 19 அன்று இரவு 8 இந்து தேசியவாதிகள் அடங்கிய குழு மசூதை தாக்கியுள்ளனர். இந்த முஸ்லிம் வாலிபர் கேரளாவின் காசர்கோட் பகுதியில் உள்ள மொக்ரல் புதூரை சேர்ந்தவர். சோடா பாட்டில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த அவர் மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குற்றவாளிகளான சுனில், சுதிர், சிவா, சதாசிவ், ரஞ்சித், அபிலாஷ், ஜிம் ரஞ்சித் மற்றும் பாஸ்கர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு கலைஞர் பகுதியில் உள்ள தன்னுடைய தாத்தா வீட்டிற்கு சென்ற மசூர் அங்கே தினக் கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மசூத் ஒரு தனியார் விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது ஒரு கடையில் எதேர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ‌சுதீர் என்பவரை இடித்ததற்காக இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது. மசூதி நண்பர் இப்ராஹிம் சைப் அளித்த புகாரின் படி அப்போது சுதீர் மசூதை பாட்டிலை வைத்து மிரட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுனில் மற்றும் அபிலாஷ் புகார் அளித்துள்ள இப்ராஹிம் சாய்பை தொடர்பு கொண்டு மசூதும் சுதிரை தாக்கியுள்ளதாக கூறி பிரச்சனையை சுமுகமாக தீர்க்கலாம் எனும் சாக்கில் இப்ராஹீமை மசூதை அழைத்துக் கொண்டு விஷ்ணு நகர் பகுதிக்கு வரச் சொல்லியுள்ளனர்.

அதன்படி இப்ராஹிம் மற்றும் மசூர் விஷ்ணு நகர் பகுதிக்கு இரவு 11 மணி அளவில் சென்றுள்ளனர் அப்போது அங்கிருந்த பஜ்ரங்கள் அமைப்பை சார்ந்த உறுப்பினர்கள் சுனில், சுதிர், சிவா, சதாசிவ், ரஞ்சித், அபிலாஷ், ஜிம் ரஞ்சித், மற்றும் பாஸ்கர் ஆகியோர் மசூதை கொடூரமாக தாக்கியுள்ளனர் அத்தாக்குதலின் போது மசூதியின் தலையில் அபிலாஷ் சோடா பாட்டிலை வைத்து அடித்துள்ளார். மசூத் மற்றும் இப்ராஹிம் இதிலிருந்து தப்பிக்க வெவ்வேறு திசைகளில் வேகமாக ஓடிள்ளனர் இப்ராஹிம் தன் நண்பர்களுடன் மீண்டும் மசூதை தேடி சென்ற போது அங்கிருந்த கிணற்றிற்கு அருகில் மசூத் சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார்.

இதன் பிறகு மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மசூத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழில் – ஹபீபுர் ரஹ்மான்

Source – Maktoob Media

link : https://www.instagram.com/p/CgTgYLwMVCF/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *