ஒரு மனிதனின் அடிப்படை தேவையென்பதே உடை, உணவு, இருப்பிடம் மற்றும் அவனது உரிமைகள் தான். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லையென்றாலும் அவனால் வாழ இயலாத நிலைக்கு தள்ளப்படுவான். இந்திய நாட்டில் சிறுபான்மையினர்களை துடைத்தெறிவதற்காக அவனது அடிப்படை தேவைகளை தான் பாசிச சக்திகள் சுரண்ட நினைக்கின்றது.

இந்தியாவில் பெயர்போன பல்கலைக்கழகமான JAWAHARLAL NEHRU UNIVERSITY ல் இறைச்சிகள் சாப்பிட தடைவிதிக்கப்பட்டது. ராமநவமியை முன்னிட்டு அதனை கொண்டாடிய ABVP அமைப்பினர்கள் இறைச்சிகள் சாப்பிட கூடாது என்று கூறி அங்குள்ள முஸ்லிம் மாணவர்களை தாக்கியுள்ளனர். இது வெறுமனே இறைச்சி சாப்பிட கூடாது என்பதற்காக தான் நடந்த தாக்குதலா என்று பார்த்தல் அதுமட்டுமல்ல.

சில ஆண்டுகளாகவே கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன. பொதுவாக JNU போன்ற பல்கலைக்கழகங்களில் பலவிதமான சித்தாந்தங்கள் நிறைந்த மாணவர்கள் இருப்பார்கள். மேலும், அதுபோன்ற பல்கலைக்கழகங்களில் தான் பல சித்தாந்தங்கள் கொண்ட தலைவர்கள் உருவாகின்றனர்.

RSS இன் மாணவர் அமைப்பே ABVP அமைப்பு ஆகும். RSS இன் சித்தாந்தமானது மிக மோசமான சித்தாந்தமாகும். இவை நாட்டுநலனுக்கு எதிராகவே அமைகின்றன. பலவித சித்தாந்தங்கள் நிறைந்த JNU இல் இவர்களுது சித்தாந்தம் மற்ற சித்தாந்தங்களை தொட்டு கூட பார்க்கமுடியவில்லை. இதனால், பலவித பயங்கரவாத செயல்களில் இவ்வமைப்பினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள் என்பதற்காக அவர்களை கொலைசெய்வது. மேலும், மாட்டு இறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற்காக அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்கள் சில ஆண்டுகளாகவே நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இவை தான் இப்போது JAWAHARLAL NEHRU UNIVERSITY யிலும் நடந்துகொண்டிருக்கும் பிரச்சனையாகும். மாடுகளை கொள்ள கூடாது அவை கோமாதா என்று கூறி முஸ்லிம் சமூக மக்களை துன்புறுத்தும் இவர்கள்.. நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் ஒரு மேடையில் இந்தியா இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதில் No.1 என்றார். அதற்கு மட்டும் இவர்கள் அமைதி காக்கின்றனர். மாட்டு இறைச்சிகளை ஏற்றுமதி செய்து பணம் பார்க்கும் இவர்கள்.. இஸ்லாமியர்கள் இடத்தில் மட்டும் தான் அவை கோமாதா என்று கூறி மாட்டு இறைச்சி வைத்திருக்கும் இஸ்லாமியர்களை துன்புறுத்துகின்றனர்.

கல்வி வளாகம் மற்றும் பல்கலைக்கழகங்கங்களில் தான் நாளைய தலைமுறைகள் , தலைவர்கள் உருவாகின்றன. JNU போன்ற பல்கலைக் கழகங்கள் இன்றைய தலைமுறை தலைவர்களை உருவாக்குகிறது. முன்னரே சொன்னது போல் ஒரு சமூகத்தை சுரண்டுவதற்கான முதல் நிலையாகத்தான்  அவர்களது அடிப்படை உரிமைகள் சுரண்டப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு சமூகத்தின் கல்வியை அழிக்க வேண்டும் என்பதற்காக தான் கல்வி வளாகங்களில் தொடர்ந்து முஸ்லிம் மாணவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.  அடுத்து CAA, NRC போன்ற பிரச்சனைகளை எடுத்துக்கொண்டால் அது இருப்பிடத்திற்கான பிரச்சனையாக அமைகின்றது. மேலும், ஹிஜாப் போன்ற பிரச்சனைகளை பார்த்தால் உரிமைகள் பறிக்கப்படுவது நன்றாக தெரியும்.

பல்கலைக்கழகங்களில் அரங்கேறும் இதுபோன்ற பிரச்சனைகளை உடனடியாக அரசு கட்டுப்படுத்தவேண்டும். மேலும், நாட்டிற்கு கேடாக அமையும் சித்தாந்தம் கொண்ட RSS அமைப்பின் மாணவர் அமைப்பான ABVP அமைப்பை உடனடியாக தடைசெய்யவேண்டும்.

இம்ரான் ஃபரீத்எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *